siragadikkaaasai serial episode update 10-09-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர் மகேஸ்வரிக்கு போன் போட்டு போலீஸ் வந்திருப்பதையும் அந்த அஜயோட அப்பா கம்ப்ளைன்ட் கொடுத்து கிருஷ் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அனுப்பப் போவதாகவும் சொல்ல ரோகினி கண்களுக்கு அழுகிறார். உடனே எனக்கு மட்டும் எதுக்கு இப்படி பிரச்சனை மேல பிரச்சனை வந்துகிட்டே இருக்குன்னு தெரியல என்று சொல்லிவிட்டு மகேஸ்வரி இடம் நீ கிருஷ் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போ நான் இதுக்கான வழி ஏதாவது இருக்கான்னு பார்க்கிறேன் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார் கொஞ்ச நேரத்தில் முத்துமீனா இருவரும் கிரிஷ் கூட்டிக்கொண்டு ஹாஸ்டலுக்கு வர மேனேஜர் பார்த்துவிட்டு கீழே ஓடி வருகிறார். பிறகு இவர்களிடம் நடந்த விஷயங்களை சொல்லி போலீஸ்காரங்க காத்துக்கிட்டு இருக்காங்க க்ரிஷ் வந்தவுடனே கூட்டிட்டு போய்டுவாங்க என்று சொல்ல முத்து மேனேஜரிடம் தெரியாமல் பண்ணிட்டான் சார் என கெஞ்சி கேட்க நான் எவ்ளோ பேசி பார்த்துட்டேன் சார் அவங்க பெரிய இடம் என்பதால் முடிவோட இருக்காங்க என்று சொல்ல முத்து மீனாவிடம் நீ கிருஷ்ணா கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போ நான் பேசி பார்க்கிறேன் என சொல்லுகிறார் மீனாவும் அங்கிருந்து கிருஷ்யை அழைத்துச் செல்ல எதிரில் மகேஸ்வரி வர அவர் என்னோட வீட்டுக்கு போயிடலாம் என இவங்க அம்மாவுக்கு நான் பதில் சொல்லணும் அதுவும் இல்லாம நான்தான் கார்டியன் என சொல்லி அழைத்துச் செல்கிறார்.
பிறகு முத்து போலீஸ்காரர்களிடம் கிரிஷ் பற்றி கெஞ்சி கேட்கிறார் அவங்க அம்மாவால தான் அவன் இப்படி ஆயிட்டா அவன் ஏதோ தெரியாம பண்ணிட்டா சார் ஸ்கூல் பசங்களுக்குள்ள இது மாதிரி சண்டை வருது சகஜம் தானே என்று கெஞ்சி கேட்கிறார் அதற்கு போலீஸ் உன்ன பார்த்தா எங்களுக்கும் பாவமா தான் இருக்கு ஆனா அந்த பையனோட அப்பா பெரிய இடத்துல கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்க எங்களால என்ன பண்ண முடியும் என்று கேட்க ஒரே ஒரு வாட்டி வாய்ப்பு கொடுங்க சார் நான் பேசுறேன் என்று முத்து சொல்லுகிறார் பிறகு சரி நாங்க இன்னைக்கு வேணா பைய ஸ்கூலுக்கு வரலைன்னு சொல்லி சமாளிச்சு விடுறோம் ஆனா நீங்க அதுக்குள்ள அந்த பையனோட அப்பாவ சந்திச்சு பிரச்சனையே சொல்லுங்க பேசி முடிக்க பாருங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் பிறகு முத்து மேனேஜரிடம் அதை அப்பாவின் அட்ரஸை வாங்கிக் கொள்கிறார். க்ரிஷ் மகேஸ்வரி வீட்டில் தூங்கிக் கொண்டிருக்க மீனா உட்கார்ந்து கொண்டிருக்கிறார் முத்து போன் போட்டு கார் செட்டுக்கு மீனாவை அழைக்கிறார் என்ன ஆச்சுன்னு விஷயம் ரொம்ப கிரிட்டிக்கல்லா தான் இருக்கு நம்ம பேசிய ஆகணும் என்று சொல்லி மீனாவை வரச் சொல்லுகிறார் மறுபக்கம் ரோகினி வக்கீல் ஒருவரை சந்தித்து கிரிஷ் பற்றிய விஷயத்தை சொல்லுகிறார்.
வக்கீலும் அவங்க கேஸ் போட்டு கோர்ட் வரைக்கும் போச்சுன்னா உங்க பையன கண்டிப்பா சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிடுவாங்க என்று சொல்ல ரோகிணி கண்கலங்கி அழுகிறார். நான் உனக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுத்துட்டேன். இந்த தண்டனையை அவனுக்கு வாங்கி கொடுக்க மாட்டேன் இதில் இருந்து அவனை எப்படியாவது காப்பாத்தணும் என்று சொல்ல ரொம்ப கஷ்டம் என வக்கீல் சொல்லுகிறார். இதுக்கு ஒரே தீர்வு அந்த அஜய் அப்பாவோட பேசி கன்வின்ஸ் பண்ணுங்க அதுதான் பண்ணனும் என்று சொல்ல ரோகிணியும் சரி நான் பேசுறேன் என கிளம்புகிறார். மறுபக்கம் கார் செட்டில் முத்து சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க செல்வம் எதுவும் நடக்காது என ஆறுதல் சொல்லுகிறார் என் வாழ்க்கையில் நடந்தது கிருஷக்கு நடக்கக்கூடாது என் மனசெல்லாம் கலங்குது என்று சொல்லுகிறார் கொஞ்ச நேரத்தில் மீனாவும் வர முத்து வருத்தப்பட்டு பேச நீங்க கவலைப்படாதீங்க கண்டிப்பா நம்ம அவர் பேசி மனச மாத்திரலாம் அதுக்கும் மேல கடவுள் இருக்காங்க பாத்துக்கலாம் என்று சொல்லி இருவரும் பேச கிளம்புகின்றனர்.
பிறகு மகேஸ்வரி மற்றும் ரோகினி வித்யா மோரும் பேசிக் கொண்டிருக்க இப்ப என்ன பண்றதுன்னு தெரியல பேசிதான் ஆகணும் ஆனா என்னால பேச முடியாது கார்டியனா நீ தான் பேசணும் என ரோகினி சொல்ல வித்யா அவன் எதுக்கு பேசணும் ஏற்கனவே அவங்க சப்போர்ட் பண்ணி உனக்கு இவ்வளவு தூரம் ஹெல்ப் பண்ணிருக்காங்க இந்த வேலையும் அவங்க தான் செய்யணுமா உன்னோட பையனுக்கு நீ தான போய் பேசணும் என்று சொல்லுகிறார் அப்படி உன்னால முடியலைன்னா முத்து மீனா பார்த்துப்பாங்க அவங்க இன்டெலிஜென்ட் அவங்க கிரிஷ் விற்ற மாட்டாங்க என்று பேச நீ அவங்கள பாராட்டி பேசிட்டு இருந்தா உன்னோடு வச்சுக்கோ என்று கோபப்படுகிறார் அவ்வளவு அக்கறை உள்ள உனக்கு இருந்தா உன் பையனும் உன்னோடு வச்சுக்கணும் என்று பேச பிறகு இருவரும் வாக்குவாதம் ஏற்படுகிறது. உன்னோட நல்லதுக்காக தான் சொல்றேன் முத்து மீனா பார்த்திருப்பாங்க என்ன சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மகேஸ்வரியும் எனக்கு வித்தியா சொல்றதுதான் சரின்னு தோணுது என்று சொல்ல ரோகினி அமைதியாக ரூமுக்கு சென்று க்ரிஷ் பக்கத்தில் உட்கார்ந்து விடுகிறார் பிறகு முத்துவின் மீனாவும் அஜய் அப்பாவை சந்தித்து என்ன பேசுகின்றனர்? அதற்கு அவர் பதில் என்ன?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…