siragadikkaaasai serial episode update 08-01-26
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ரோகினி குறித்த உண்மையை தெரிந்து கொண்டு குடும்பத்தினரிடம் சொல்ல வருகிறார். உடனே மனோஜ் கிருஷ் 25 லட்சத்துக்கு வெளிநாட்டுக்கு தத்து கொடுக்க போகும் விஷயத்தை சொல்ல ஓ அப்படியா இதுக்கு பார்லர் அம்மாவும் சம்மதிச்சுடுச்சா என்று கேட்க நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் முடிவு எடுத்து இருக்கோம் என்று சொல்லுகிறார் அப்போ சரி கொடுத்து விடலாம் என்று சொல்லுகிறார் அண்ணாமலை மற்றும் மீனா இருவரும் என்ன பேசிக்கிட்டு இருக்கேன் என்று கேட்க ஆமாப்பா அவன் வெளிநாட்டில் இருந்தாலே அவனுடைய வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் என்று சொல்லுகிறார்.
உடனே மனோஜ் சந்தோஷப்பட்டு இப்பதானே கரெக்ட்டா பேசி இருக்கடா என்று சொல்லுகிறார். உடனே க்ருஷோட அம்மா பத்தி உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்க அவங்க தான் இறந்துட்டாங்கனா உங்க பாட்டி சொன்னாங்களே என்று சொல்ல எல்லாமே பொய் மா பொய் பொய் என்று சொல்லுகிறார். கிரிஷ் ஓட அம்மா சரி கிடையாது. அவங்க சாகல உயிரோடுதான் இருக்காங்க அவங்க பேரு கல்யாணி என்று சொல்லுகிறார்.
கிரஷுக்கு அப்பா இறந்துட்டாங்க என்றது உண்மைதான் ஆனால் அம்மா இறக்கல அவங்க புருஷன் இறந்ததினால் தப்பான தொழிலுக்கு போயிட்டாங்க தப்பானவங்க என்று சொல்ல சொல்ல ரோகினிக்கு முகம் மாறி கோபப்படுகிறார் ஒரு கட்டத்திற்கு மேல் ரோகினி ஒரு பொண்ண பத்தி அபாண்டமாக பழிய போடாதீங்க என்று கோபப்பட அப்படித்தான் சொல்லுவேன் என்று சொல்லுகிறார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்துக் கொண்டே போக ஒரு கட்டத்திற்கு மேல் ரோகினி நான்தான் கிரிஷோட அம்மா என்று நான் தப்பானவா கிடையாது என்று சொல்லி உண்மையை அவர் வாயாலேயே ஒப்புக்கொள்ள வைத்து விடுகிறார்.
உடனே அண்ணாமலை இடம் சென்ற முத்து காலில் விழுந்து நான் எந்த பொண்ணையும் தப்பா பேசமாட்டேன்பா பார்லர் அம்மா வாயிலிருந்து உண்மையை வர வைக்க தான் நான் இப்படி பேசினேன் என்று சொல்லுகிறார். அதேபோல் இந்த உண்மையை தெரிந்து குடும்பத்தினர் அதிர்ச்சியாக நிற்க ரோகினியும் அழுது கொண்டு இருக்கிறார். உடனே ரோகினி இடம் சென்ற முத்து உன் வாயால இருந்து உண்மையை வர வைக்க தான் நான் இப்படி பேசினேன் அதுக்காக உன்கிட்ட நான் கை கூப்பி மன்னிப்பு கேட்டுக்குறேன் என்று சொல்லி ரோகினி இடமும் மன்னிப்பு கேட்கிறார்.
பிறகு முத்து குடும்பத்தினரிடம் என்ன சொல்லுகிறார்?என்ன நடக்கப் போகிறது? என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…
Varnajaalam Tamil Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…