siragadikkaaasai serial episode update 04-09-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் மேனேஜர் திட்டியதை மனதுக்குள் வைத்துக்கொண்டு அங்கு இருந்து வெளியில் ஓடி வருகிறார்.கேட்டில் வரும் போது வாட்ச்மேன் பார்த்துவிட அவரிடம் சிக்காமல் வேகமாக தப்பித்து ஓடி வர வாட்ச்மேனன் தொடர்துரத்தி வருகிறார் மறுபக்கம் முத்து காரில் சவாரியை இறக்கிவிட்டு அவருடைய லக்கேஜை டிக்கிலிருந்து எடுத்துக்கொண்டு போய் வீட்டில் வைக்கும் நேரம் பார்த்து டிக்கி சரியா மூடாமல் போனதால் ஓடி வந்த க்ரிஷ் முத்துவின் கார் டிக்கியில் படுத்து கொள்கிறார்.மீண்டும் அந்த முத்து டிக்கியை பார்க்காமல் கதவை சாத்தி விடுகிறார். உடனே மீனாவுக்கு போன் போட்டு நம்ம இன்னிக்கி வெளியே சாப்பிட போகலாம் மீனா என்று சொல்லி எங்க இருக்க என்று கேட்க பூக்கற்ற அக்கா கடையில தான் இருக்கேன் என்று சொல்லுகிறார். சரி நீ அங்கே இரு நான் வந்துட்டேன் என சொல்லி காரை எடுத்துச் செல்கிறார்.
மறுபக்கம் மீனா முத்து பற்றி பூக்கார பெண்மணியிடம் பெருமையாக பேசிக்கொண்டு இருக்க முத்து வந்த மீனாவை அழைத்துச் செல்கிறார். மறுபக்கம் ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் ஷோரூம் இல் வேலை பார்த்துக் கொண்டிருக்க போர்டிங் ஸ்கூலில் இருந்து ரோகினியின் ஃபிரண்ட் மகேஸ்வரிக்கு போன் போட்டு க்ரிஷ் ரோடு போட விஷயத்தை சொல்லுகின்றனர் உடனே மகேஸ்வரி ரோகினிக்கு ஃபோன் போட்டு கிரஷ் யாரையோ பென்சில்ல குத்தி ரத்த வர வச்சுட்டானா அதற்கு கண்டிச்சதுக்கு ஸ்கூலை விட்டு ஓடி போயிருக்கா என்று சொன்ன ரோகினி பதட்டம் ஆகிறார். இவன் எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்கான் என்று சொல்லிவிட்டு சரி நான் இப்பவே பாரு நம்ம போய் விசாரிச்சிட்டு வந்துடலாம் என்று முடிவெடுக்கின்றனர் பிறகு மனோஜிடம் வந்து எனக்கு ஒரு கிளைன்ட் பார்க்க வேலை இருக்கு நான் போயிட்டு வந்தேன் என சொல்ல எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு நீ ஷோரூம்ல இருக்குனு பார்த்தேன் என்று சொல்ல இது முக்கியமான கிளைன்ட் மனோஜ் நான் போயிட்டு வந்துடறேன்னு சொல்லி கிளம்புகிறார்.
முத்துவும் மீனாவும் காரில் வந்து கொண்டிருக்க வழியில் நிறுத்தி கார்களை செக் பண்ணுகின்றனர் முத்து என்ன விஷயம் என்று விசாரிக்க டெட் பாடிகளை காரில் வைத்து மறைத்து எடுத்துப் போவதாக தகவல் கிடைச்சிருக்கு அதனால விசாரிக்கிறாங்க என்று சொல்ல முத்து அருண் கவனிக்கிறார். உடனே மீனாவிடம் கண்டிப்பா இந்த கேஸ்ல என்ன புடிச்சிருவாங்க என்று சொல்ல நம்ப தான் எதுவுமே எடுத்துட்டு போனியே எப்படி என்று மீனா கேட்க அங்க பாரு ஏழரை உட்கார்ந்துகிட்டு இருக்கு என்று அருணை காட்டுகிறார் நம்ம மேல எந்த தப்பும் இல்லாமல் எதுவும் பண்ண முடியாது நீங்க அமைதியா இருங்க என்று சொல்ல போலீஸ்காரர் டிக்கியை திறக்க போகும்போது அருண் கவனித்து செக் பண்ண வேணாம் விட்டுடுங்க என்று சொல்ல முத்து அதிர்ச்சி அடைகிறார் அதுக்குள்ளவே திருந்திட்டானா என்று சொல்ல தேவையில்லாமல் பிரச்சனை வேண்டாம் அவர்தான் சொல்லிட்டாரு இல்ல வாங்க கிளம்பலாம் என்று அங்கிருந்து கிளம்புகின்றனர்.
உடனே மகேஸ்வரியும் ரோகினியும் போர்டிங் ஸ்கூலுக்கு வந்து இறங்க ரோகினி நீ உள்ள விசாரிச்சுட்டு வா என்று சொல்லி அனுப்புகிறார் உடனே மகேஸ்வரி உள்ளே வந்து என்னங்க உங்கள நம்பி அனுப்பி வச்சா இப்படி பண்றீங்க என்று கேட்கிறார் எங்க ஸ்கூல்ல இதுவரைக்கும் இது மாதிரி நடந்தது கிடையாது அந்த பையன் ரொம்ப அடமன்ட்ட இருக்கும் அவனுக்கு இங்க இருக்கவே புடிக்கல அது இல்லாம அவனுக்கு இங்க வர அம்மா எல்லாம் பார்த்து ரொம்ப கஷ்டப்படுற என்று சொல்ல நாங்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கவா என்று கேட்க போலீஸ்ல எல்லாம் கம்ப்ளைன்ட் பண்ணாதீங்க ஸ்கூல் பெயர் கேட்டு போயிடும் நாங்களே தேடி கண்டுபிடிச்சிடுவோம் என்று சொல்லுகின்றனர். பிறகு முத்து மீனா என்ன செய்கின்றனர்?ரோகிணி என்ன பண்ணப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 14 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
முத்து உண்மையை கண்டுபிடிக்க,மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில்…