அண்ணாமலை சொன்ன வார்த்தை, முத்து கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீது பழிவிழ ரவி கோபப்பட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நீத்துவின் ஹோட்டலில் இரண்டு பேர் யாரோ கேசை திருப்பிவிட்டு ஃபயர் செய்து விடுகின்றனர் இது மட்டும் இல்லாமல் நீத்து தூங்கிக் கொண்டிருக்க அவரது காலை அடித்து உடைத்து விடுகின்றனர். மறுநாள் காலையில் அண்ணாமலை இடம் மீனா காபி போடுவோம் மாமா என்று கேட்க வேண்டாம் என்று சொல்லுகிறார் முத்து எங்க போயிருக்கான் என்று கேட்க அவரை நைட்டு சவாரிக்கு போயிருக்காரு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே முத்து வந்து விடுகிறார். அண்ணாமலை அவரிடம் எதுக்குடா நைட்டுகெல்லாம் போற பகல்ல ஓட்றதோடு நிறுத்திக்க வேண்டியது தானே என்று சொல்ல அதற்கு முத்து அவர்கள் டெய்லி கஸ்டமர் ஒரு அவசரத்துக்காக கூப்பிட்டாங்க எப்படி தட்ட முடியும் என்று சொல்லுகிறார் உடனே விஜயா இவ என்ன மனோஜ் மாதிரி தொழில் அதிபரா பகல்ல வேலை செஞ்சுட்டு நைட்ல வீட்ல இருக்குறதுக்கு இவங்க செய்ற வேலைக்கு இப்படித்தான் போக முடியும் என்று இளக்காரமாக பேசுகிறார்.

உடனே அண்ணாமலை அவனை குறை சொல்லாமல் உன்னால இருக்கவே முடியாதா என்று சொன்ன உங்கள மாதிரியே தான் நீங்க ட்ரைன் ஓட்டுனீங்க அவன் கார் ஓட்டும் என்று சொல்ல அதற்கு முத்து அவரது ட்ரெயின் ஒட்டி தான் இந்த குடும்பத்தை முன்னேற்றிருக்கிறார் அவ இன்னிக்கு பிசினஸ் பண்றானா அது அப்பாவால தான் என்று சொல்லுகிறார் ரவி எங்கே என கேட்க சொல்லிக் கொண்டிருக்கும்போதே ரவி கோபமாக வந்து முத்துவின் சட்டையை பிடித்து ஏன்டா இப்படி பண்ணேன் என்று கோபமாக கேட்கிறார்.

என்னாச்சுடா என்று கேட்க ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காதடா எனக்கு நல்லது பண்றேன்னு நினைச்சு என்னை இப்படி ஒரு பிரச்சனை மட்டிவிட்டு இருக்க என்று கோபப்பட்டு பேசிக் கொண்டே இருக்க குடும்பத்தினர் விளக்கி விட்டு என்ன நடந்தது என்று கேட்கின்றனர். அப்போதுதான் ரவி நீத்துவை சந்தித்து நீத்துவின் ஹோட்டல் எரித்த விஷயத்தையும் நீத்துவின் கால் உடைத்தது முத்து தான் என்று சொன்னதாகவும் ஆனால் ரவி நம்ப மறுக்காமல் இருந்ததால் முத்து நேரில் வந்து என்னை மிரட்டியதாகவும் நேத்து சொன்னவுடன் ரவி வேறு வழியில்லாமல் நம்பியிருக்கிறார். உடனே போலீஸ் வந்து கம்ப்ளைன்ட் கேட்க நீத்து ரவியின் அண்ணன் என்பதால் கம்ப்ளைன்ட் கொடுக்கவில்லை என்று சொல்லுகிறார்.ஆனால் முத்து நான் எதுவுமே செய்யல என்று சொல்ல பொய் சொல்லாதடா நீ தான் எல்லாமே பண்ணி இருப்ப என்று கோபப்படுகிறார்.

அண்ணாமலை முத்து அப்படி பண்ணியிருக்க மாட்டா என்று சொல்ல விஜயா நீ அப்படி பண்ணது தான்டா கரெக்ட் என்று பாராட்ட நான் நல்லது பண்ணவே நீங்க பாராட்டிருக்க மாட்டீங்க ஆனா நான் எதுமே பண்ணனு சொல்ற நீங்க முந்திக்கிட்டு வந்து பாராட்டுறீங்கம்மா என்று சொல்லுகிறார். உடனே நீத்து போன் பண்ணி ஆபரேஷன் பண்ண போறதா சொல்றாங்க வந்து சைன் பண்றீங்களா என்று ஹாஸ்பிடல் கூப்பிடுகிறார். உடனே ரவியும் சென்றுவிட முத்துவும் மீனாவும் என்ன பேசுகின்றன?ரோகினி என்ன செய்கிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 31-01-26
jothika lakshu

Recent Posts

சிறை பட இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ்.. வெளியான புதிய படத்தின் அப்டேட்.!!

தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…

25 minutes ago

ஆதாரத்தை அழித்த ரஞ்சித், சூர்யாவுக்கு வரும் சந்தேகம், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

36 minutes ago

Arjunan Per Paththu – Teaser

Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…

7 hours ago

Thangarathinamey – Video Song

https://youtu.be/apxygLROFF0?si=XIwXjw6_VBRTI9AW

7 hours ago

ஜனநாயகன் குறித்த கேள்வி.. இயக்குனர் அமீர் கொடுத்த பதில்..!

ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…

7 hours ago

அண்ணாமலை சொன்ன வார்த்தை, விஜயா கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் கவுன்சிலிங் வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…

8 hours ago