மனோஜை திட்டிய முத்து, ரோகினி போட்ட திட்டம்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மீனா மீது விஜயா கோபப்பட பிஏவை முத்துவிடம் சிக்க வைத்துள்ளார் ரோகினி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ரோகினி நடந்து கொண்ட விஷயத்தை பற்றி சொல்ல அண்ணாமலை மற்றும் முத்து இருவரும் வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூட இவனுக்கு தெரியவில்லை இவன வச்சு பார்லர் அம்மா நல்லா யூஸ் பண்ணிக்கிது என்று சொல்லுகிறார். இது மட்டுமில்லாமல் அந்த இடத்தில் நான் இருந்த நான் என்ன பண்ணி இருப்பேன் தெரியுமா என்று சொன்ன முத்து கிரிஷ் கிட்ட பாசமா பேசி இந்த மார்க் ஷீட்ட வா பாட்டி கிட்ட காட்டலாம் அப்படின்னு சொல்லி கூப்பிட்டு இருப்பேன் ஆனா அம்மாவ பாத்தா பார்லர் அம்மாவுக்கு பயம் வராது அப்ப அங்க இருக்கிறவங்க என்ன நினைப்பாங்க இவர் பாசமா பாட்டியை பார்க்க கூப்பிடுகிறார் ஆனால் இந்த பொண்ணு அனுப்ப மாட்டேங்குதுன்னு அந்த பொண்ணு தான் கொடுமைக்காரி நினைச்சிருப்பாங்க என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் மீனா கிறிஸ் ஸ்கூலுக்கு வரும் வழியில் சந்திக்க அவருடன் பேசி பிஸ்கட் சாக்லேட் கொடுக்கிறார் பிறகு அந்த வழியாக வந்த விஜயா இதை கவனித்து விட்டு கடுப்பாகி சென்று விட, மீனா வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிய உடன் ஆட்டோவில் வந்து ரோகினி இறங்குகிறார் அவங்க கிட்ட என்ன பேசினேன் என்று கேட்க சும்மாதான் பேசிக்கிட்டு இருந்தேன் அம்மா எனக்கு சாக்லேட் பிஸ்கட்டும் கொடுத்தாங்க என்று சொல்ல உடனே யார் கூப்பிட்டாலும் போயிடக் கூடாது என்று சொல்லிவிட்டு கிறிஸ் ஆட்டோவில் ஏத்த அந்த நேரம் பார்த்து பிஏ வருகிறார். என்ன ரோகினி என் மேல பயம் இல்லாம போயிடுச்சா நீ இவ்ளோ பெரிய குடும்பத்தில் வாக்கப்பட்டிருக்க உன்னை பத்தின உண்மையெல்லாம் உங்க வீட்ல சொல்லிடுவேன் என்று சொல்ல உடனே ரோகினி அப்போ இவனுக்கு நடந்த விஷயம் எல்லாம் எதுவும் தெரியாதா என்று நினைத்து விட்டு என் புருஷன் கிட்ட சொன்னா கூட நான் சமாளிச்சிடுவேன் ஆனா முத்து கிட்ட மட்டும் சொல்லிடாத என்று ஆக்டிங் கொடுக்க உடனே பிஏ நீயே சொல்லிக் கொடுத்துட்டியே நான் நீ பணம் கொடுக்கலைன்னா நான் முத்து கிட்ட தான் இந்த விஷயத்தை சொல்லுவேன் என்று சொல்லுகிறார்.

என்கிட்ட இப்போ உனக்கு பணம் கொடுக்குறதுக்கு சுத்தமா காசு இல்ல அதனால நீ முத்து கிட்ட மட்டும் சொல்லிடாத சொல்லிடாத என்று சொல்லிவிட்டு சொல்ல உடனே பிஏ உள்ள முத்து கிட்ட சொல்லி எப்படி மாட்டி விடறேன் பாரு என்று சொல்லிவிட்டு கிளம்ப ரோகினி சந்தோஷப்படுகிறார். குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க மனோஜ் மற்றும் விஜயா இருவரும் இவ எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்கா அவங்ககிட்ட எதுக்கு பேசணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். இதில் எந்த தப்பும் இல்லை என்று அண்ணாமலை சொல்லுகிறார் அந்த நேரம் பார்த்து முத்து வர என்ன என்ன பத்தி தான் எதுவும் பேசிக்கிட்டு இருக்க மாதிரி இருக்கு என்று சொல்ல விஜயா மீனா கிருஷ் பேசிய விஷயத்தை சொல்லுகிறார். இப்ப அதுல என்ன இருக்கு என்று கேட்க அண்ணாமலை அதையே தான் நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன் இவங்க கேக்க மாட்டேங்குறாங்க என்று சொல்லுகிறார் இவனே போய் பிரச்சனையில் சிக்காம இருந்தா சரி அந்த பையனால எல்லாம் எந்த பிரச்சனையும் வராது என்று சொல்ல விஜயா அவன்கிட்ட பேச வேண்டாம் நான் பேச வேண்டாம் என்று உறுதியாக சொல்லுகிறார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் மனோஜ்க்கு பெண்பார்த்த ஸ்வேதா வருகிறார். வாசலில் நின்று பெரியம்மா என கூப்பிட விஜயா அதிர்ச்சி அடைகிறார் உடனே விஜயா வரவேற்க ஸ்வேதா கட்டிப்பிடித்து சந்தோஷப்படுகிறார். அண்ணாமலை முத்து மற்றும் ரவியை அறிமுகப்படுத்த முத்துப்பேச்சு கேட்டு ஸ்வேதா உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அண்ணா எங்களுக்கு கூட பிறந்தவங்க யாரும் இல்ல நான் ஒரே ஒரு பொண்ணு தான் ஆனா இப்ப எனக்கு இரண்டு அண்ணன் ஒரு தம்பி கிடைச்சிருக்காங்க என்று சந்தோஷப்படுகிறார். உடனே முத்து மற்றும் ரவியிடம் நம்பரை கேட்டு வாங்கிக் கொள்கிறார். மனோஜிடம் கேட்க நான் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிடுகிறார். மனோஜை பார்த்து அண்ணன் என்று கூப்பிட வார்த்தைக்கு வார்த்தை அண்ணனே சொல்றானே என்று மனோஜ் புலம்புகிறார். பிறகு ஸ்வேதா என்ன சொல்லுகிறார்? குடும்பத்தினர் என்ன செய்கின்றனர்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


siragadikka asai serial episode update 18-03-26
jothika lakshu

Recent Posts

விஜய் குறித்து பேசி கைத்தட்டல்களால் அரங்கத்தை அதிர வைத்த நடிகை சுவாசிகா..!

விஜய் குறித்து நடிகை சுவாசிகா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது…

1 hour ago

Happy Raj – Official Trailer

Happy Raj - Official Trailer ,GV Prakash , Abbas ,Sri Gouri Priya ,Maria Raja Elanchezian…

18 hours ago

காலம் பேசாது.. ஆனால்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் டயலாக் இதோ..!

காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

20 hours ago

அஜித் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. எதிர்பார்பை எகிற வைக்கும் அப்டேட் இதோ..!

அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும்…

20 hours ago

நெல்சன் இயக்கத்தில் உருவாக போகும் படத்தின் டைட்டிலை பார்த்தவுடன் ரஜினிகாந்த் செய்த செயல்..!

#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்…

21 hours ago

கல்யாணத்தை அறைந்த ஹரிதா.. சூர்யா சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

21 hours ago