அன்னதானம் போடும் விஜயா, முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பிஏ பணம் கேட்டு மிரட்ட, ரோகினி திருட்டு வேலை ஒன்று செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா எல்லோரிடமும் சந்தோஷமாக பழகுவதை பார்த்து முத்து மீனா சுருதி மூவரும் அமைதியாக நிற்கின்றனர். முத்து இதுல ஏதோ ஒன்னு இருக்கு அம்மா வேற பார்வதி அத்தை கிட்ட போனை கொடுத்து கேமரா மேன் ஆக்கி வச்சிருக்காங்க என்று சொல்ல ஸ்ருதியும் சம்திங் பிஷி என்று சொல்ல இருவரும் ஆமாம் என்று சொல்கின்றனர் பிறகு மீனாவுடன் பூக்கட்டும் பெண்களுக்கு லட்டு ஊட்டி விட அதையும் வீடியோவாக எடுத்துவிட்டு பிறகு இங்கிருந்து கிளம்பலாம் என சொல்ல அனைவரிடமும் சொல்லிவிட்டு விஜயா கிளம்புகிறார் பிறகு ஆட்டோவில் ஏறும்போது மீனாவின் தோழிகள் வந்து பேச உடனே அவரிடம் வழக்கம் போல் கோவமாக பேசிவிட்டு சென்று விடுகிறார். இதனை கவனித்து ஸ்ருதி ஆன்ட்டி அந்நியன மாறிட்டாங்க என்று சொல்லிவிட்டு உள்ளே போகிறார்.

மறுபக்கம் சீதாவிடம் முத்து ஜோடி பொருத்தம் நல்லா இருக்கு என்று சொல்ல நீங்க இன்னும் எங்க மேல கோவமா தான் இருக்கீங்களா மாமா என்று அப்பாவி தனமாக பேச நீயும் உங்க அக்காவும் இதே மாதிரி மூஞ்ச வெச்சு நல்லா ஏமாத்துங்க என்று சிரித்து பேசி கொண்டிருப்பதை அருண் பார்த்து பிடிக்காமல் சீதாவை கூப்பிட முதலில் திரும்பாமல் இருந்த சீதா மீண்டும் கூப்பிட்டவுடன் செல்கிறார் இந்த சாப்பிடு என்று சொல்ல சீதா முத்துவிற்கு ஸ்வீட் கொடுக்கிறார் இதனை பார்த்து அருண் கடுப்பாகவே மீனா கவனித்து விடுகிறார் உடனே மீண்டும் சீதாவை ரூமுக்கு கூப்பிட்டுவிட மீனாவிடம் முத்து வருகிறார். என்ன மீனா பாத்தியா என்று சொல்ல நான் எதுவும் பண்ணல,கிரிஷ் ஐஸ்கிரீம் கேட்டான் போய் வாங்கி கொடுத்துட்டு அப்படியே கிளம்புறேன் நீ பாத்துட்டு வா என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். பிறகு ஒரு ஐஸ்கிரீம் ஷாப்பில் கிருஸ்க்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துவிட்டு அவனிடம் பேசிக் கொண்டு இருக்க பி ஏ இதை கவனித்து விட்டு இது தான் ரோகிணி கிட்ட காசு வாங்க கரெக்டான சமயம் என முடிவெடுக்கிறார்.

பிறகு ரோகிணி ஷோரூம் இல் வேலை பார்த்துக் கொண்டிருக்க வீடியோ கால் போடுகிறார் முதலில் எடுக்காத ரோகிணி பிறகு போட்டுக் கொண்டே இருக்க வேறு வழியில்லாமல் அட்டென்ட் பண்ணி எதுக்கு வீடியோ கால் பண்றேன் என்று கேட்க ஒரு குழந்தை அவங்க சித்தப்பா கூட ஐஸ்கிரீம் சாப்பிடுவது அதை நீ பார்க்க வேண்டாம் வா என்று சொல்லி வீடியோ காட்டுகிறார். உன் கொழுந்தனுக்கு அவனோட அண்ணனோட மனைவியோட முதல் புருஷன் குழந்தைன்னு தெரியாதுல என்று சொல்லி ரோகிணியை பிளாக்மெயில் செய்கிறார். என்னால இவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று சொல்ல நான் இந்த வீடியோவை ரெகார்ட் பண்ணி வச்சிருக்க நாளைக்கு முத்துப்பாண்டி விட்டுட்டேனா அவ்வளவுதான் என சொல்ல சரி வேணும்னா உனக்காக ஒரு லட்சம் கம்மி பண்ணிக்கிறேன் 2 லட்சம் கொடு என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார் பிறகு ரோகிணி பணத்துக்கு என்ன செய்வது என யோசித்து விட்டு பிறகு வேறு வழி இல்லாமல் மனோஜ் லாக்கரை பார்க்கிறார் அதில் சீட்டு கட்டி வைத்திருந்த பணம் 3 லட்சத்தை எடுத்து வைத்திருந்தனர் உடனே எல்லாரையும் சாப்பிட அனுப்பிவிட்டு சிசிடிவி கேமராவை ஆப் செய்து விட்டு ரோகினி லாக்கரிலிருந்து பணத்தை எடுத்து விடுகிறார்.

அதில் மூன்று லட்சம் இருக்க ரெண்டு லட்சம் விஏவுக்காகவும் ஒரு லட்சம் கிரிஷ் ஸ்கூல் மாத்தி சேர்க்கணும் வேற வழியில என்ன மன்னிச்சிடு மனோஜ் என்று சொல்லி பணத்தை எடுத்து விடுகிறார். மறுபக்கம் முத்து சவாரியை கோவிலில் இறக்கிவிட்டு பேனர் இருப்பதை பார்க்கிறார் அதில் விஜயா அன்னதானம் என இருக்க என் அம்மா பெயர் போட்டு இருக்கு அவங்களா எதுவும் பண்ண மாட்டாங்க என நினைத்து விட்டு சென்று விடுகிறார். கொஞ்ச நேரத்தில் ஒரு வயதானவர் ரோடு கிராஸ் பண்ண முடியாமல் நிற்க முத்து உதவி செய்கிறார் என்று கேட்க கோவிலில் அன்னதானம் போடுறாங்க அதை சாப்பிட போகணும் என்று சொல்ல அவரை அழைத்து வந்து உட்கார வைக்கிறார். பார்க்கும் போது விஜயாவை பார்த்தவுடன் முத்து அமைதியாகி நிற்க அந்தப் பெரியவர் நாங்கல்லாம் எங்க பசங்க கைவிட்டுட்டாங்க இது மாதிரி அன்னதானம் கிடைக்கிற இடத்துல சாப்பிட்டுட்டு இருக்கோம் இந்த அம்மாவோட பசங்க எல்லாரும் நல்லா இருக்கணும் என்று வாழ்த்த முத்து என்ன சொல்லுகிறார்? விஜயா என்ன செய்கிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்ட ரம்யா பாண்டியன்.!!

ட்ரெண்டிங் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…

3 hours ago

குக் வித் கோமாளி சீசன் 6 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? வெளியான தகவல்.!!

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…

3 hours ago

ரோபோ ஷங்கருக்காக கமல்ஹாசன் செய்யப்போகும் விஷயம்..வைரலாகும் தகவல்.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடியனாக பயணத்தை தொடங்கி வெள்ளி திரையில் முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து தனக்கென…

4 hours ago

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த…

4 hours ago

முத்து மீனாவால் கடுப்பான விஜயா, மனோஜ்க்கு விழுந்த அடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து பிச்சைக்காரர்…

5 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை, எமோஷனலாக பேசும் நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

5 hours ago