siragadikka asai serial episode update 30-04-25
ரவி, ஸ்ருதிக்கு பாராட்டு கிடைக்க மீனா காரணமாக இருந்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை விஜயாவை கண்டிக்க விஜயா அவங்க தான் பணம் எடுத்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்க அவங்க வீட்ல இருந்து தான் பணத்தை எடுத்துட்டு வந்தோம் என்று சொல்லி அதுக்காக தான் இந்த ரைடு கெட்டப் என்று சொல்லுகிறார் அதற்கு ரோகிணி இதுவே ஒரு சீட்டிங் தான் என்று சொல்ல அவங்க வழியிலேயே போயி எங்களோட பணத்த எடுத்துட்டு வந்துட்டோம் என்று சொல்லுகிறார். அருணாச்சலம் இருந்தாலும் ஏதாவது பண்ணி மாட்டிருந்தா என்ன பண்றது என்று சொல்லி இதுக்கு மேல இது மாதிரி பண்ணாதீங்க என்று சொல்லுகிறார் நேர்மையான வழியில் போனால் நம்மளுக்கான பலன் கண்டிப்பா கிடைக்கும் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகின்றனர். மீனா சுருதிக்கு ரொம்ப தேங்க்ஸ் என்று சொல்ல நான் ரொம்ப என்ஜாய் பண்ண ரவி தான் பயம் தான் இன்னொரு ரைடு கூட ரெடி என்று சொல்ல ரவி ஸ்ருதியை இழுத்துச் சென்று விடுகிறார் உடனே முத்துவிடம் வந்த மீனா ரொம்ப தேங்க்ஸ்ங்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இன்னைக்கு உங்களுக்கு ஏதாவது ஸ்வீட் செஞ்சு கொடுக்கவா என்ன வேணும்னு கேளுங்க என்று சொல்ல அப்படியா அதுவும் ஸ்வீட் தான் என்று சொல்லி சக்கரை வேணும் என கேட்கிறார் உடனே மீனா அமைதியாக இப்ப என்ன இது வீடு யாராவது வந்துருவாங்கன்னு சொல்ல போறது தானே என்று சொல்லி முடிப்பது போல் மீனா கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு கிச்சனுக்கு ஓடிவிடுகிறார்.
மறுபக்கம் சீதா பூ கட்டிக் கொண்டிருக்க மீனா வந்து பணத்தை கொடுக்கிறார். எப்படிக்கா கிடைச்சது என்று கேட்க,பணத்தை சிந்தாமணி தான் ஆள வச்சு திருடி இருக்கா மாமா பிளான் பண்ணி அவங்க வீட்டிலேயே போய் எடுத்துட்டு வந்துட்டாரு என்று சொல்லிவிட்டு இந்த பணத்தை நீ வாங்கின பிரண்டு கிட்ட கொடுத்துடு சீதா என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். மீனா கிளம்பிய உடனே அருண் வர நீங்க எதுக்கு இங்க வந்தீங்க யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க அம்மா இருந்தா என்ன ஆகிறது என்று கேட்க பஸ்ஸ்டாண்ட்ல தான் வெயிட் பண்ண உனக்கு போன் பண்ணா நீ எடுக்கல அதனாலதான் வந்தேன் என சொல்ல போன் சைலன்ட்ல இருந்தது என்று சொல்லுகிறார். உடனே பணத்தை எடுத்து கொடுக்க தொலைஞ்சிடுச்சுன்னு சொன்ன சொல்ல எங்க மாமா கண்டுபிடிச்சிட்டாரு என்று சொல்லுகிறார் போலீஸ்கிட்ட சொல்லிருந்தா கூட இவ்ளோ சீக்கிரம் கண்டுபிடித்து இருக்க முடியாது என்று சொல்ல உங்க மாமாவும் அக்காவும் பத்தி பெருமையா பேசுற என்னைக்கு அறிமுகப்படுத்தி வைக்க போற என்று சொல்ல, அதுக்கான நேரம் வரும்போது கண்டிப்பா செய்றேன் இப்ப நீங்க கிளம்புங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
மறுபக்கம் ரவியும் சுருதியும் வேலை பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து நீத்து வந்து இன்னைக்கு சீக்கிரமே சமச்சிடனும் ரவி இன்னைக்கு ஒரு முக்கியமானவங்க ஹோட்டலுக்கு வராங்க என்று சொல்ல ரவி யார் என்று கேட்க யூடியூபர் ஒருத்தர் வராரு பண்றதுக்காக அதனால நீங்க சீக்கிரமா எல்லாமே சமைச்சுருங்க என்று சொல்ல, ரவி சமைக்க சென்று விடுகிறார் ஸ்ருதி கிளீன் பண்ணிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மீனா வருகிறார். இருவருக்கும் பூசணிக்காய் ஸ்வீட் மற்றும் வாழைப்பூ வடை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க எதுக்கு அண்ணி என்று கேட்க நீங்க எனக்காக இவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்கீங்க உங்களுக்காக பண்ணனும்னு தோணுச்சு என்று சொல்லி கொடுக்கிறார். இப்போ ஒரு முக்கியமான கெஸ்ட் வராங்க நாங்க அப்புறம் சாப்பிட்டுக்குறோம் என சொல்ல, சூடு ஆறுறதுக்குள்ள சாப்பிடுங்க என சொல்லிவிட்டு மீனா கிளம்புகிறார். கொஞ்ச நேரத்தில் கெஸ்ட் வந்துவிட அவரை வரவேற்று வர வைக்கின்றனர்.
நீத்து சாப்பாடு எடுத்துக்கிட்டு வா ரவி என்று சொல்ல இல்ல நீத்து 15 நிமிஷம் ஆகும் என்று சொல்ல இப்ப என்ன பண்றது ரவி அவர் ஏதாவது தப்பா ரிவ்யூ போட்டா என்றால் நம்மளுக்கு பேர் கெட்டுப் போயிடும் என்று சொல்ல உடனே சுருதி மீனா வைத்திருந்த டிபன் பாக்ஸை பார்த்து உடனே வாழைப்பூ வடையும் பூசணிக்காய் ஸ்வீட்டோ ஸ்டார்ட்டர் என்று சொல்லி கொடுத்திடுவோம் என்று பிளான் போடுகிறார். நல்லா இருக்குமா ரவி செஞ்சாதானே என்று சொல்ல ரவி என்ன விட எங்க அண்ணி சூப்பரா சமைப்பாங்க என்று சொல்ல ஸ்ருதி நான் பாத்துக்குறேன் என அரேஞ்ச் பண்ணி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து இது ஸ்டார்டர் என்ன கொடுக்கிறார். வாழைப்பூ வடையை மல்லி பூ வடை என சொல்ல பிறகு வாழைப்பூ வடை பூசணிக்காய் ஸ்வீட் என கொடுக்க ரிவியூவர் அதை டேஸ்ட் பார்த்துவிட்டு சூப்பராக இருப்பதாகவும் இது போன்ற ஒருவடையை நான் சாப்பிட்டதே இல்லை என்று பாராட்டுகிறார்.
ஸ்வீட்டும் நன்றாக இருக்கிறது என்று சொல்ல நீத்து சந்தோஷப்படுகிறார். கொஞ்ச நேரத்தில் சாப்பாடும் சாப்பிட்டு இந்த ஹோட்டலில் எல்லாமே சூப்பரா இருக்கு பத்துக்கு 9.5 டேட்டிங் கொடுக்கலாம் என்று சொல்ல நீத்து ரொம்ப சந்தோஷப்படுகிறார் உடனே ஸ்ருதி மற்றும் ரவி கிளம்ப அந்த நேரம் பார்த்து ரொம்ப தேங்க்ஸ் என்று சொல்லுகிறார் நாங்கள் எங்களோட வேலையை தானே செய்தோம் என்று சொல்ல இருந்தாலும் அந்த வீடியோ வரும்போது நமக்கு ஒரு நல்ல ரீச் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு உங்களுக்கே ஒரு கிஃப்ட் என்று சொல்லி பணத்தை கொடுக்கிறார். ஆனால் ரவி வாங்க மறுக்க நான் சந்தோஷமா இருக்கேன் தயவு செய்து வாங்கிக்கோங்க என்று சொல்ல இருவரும் வாங்கிக் கொள்கின்றனர். பிறகு ஸ்ருதி ரவி வீட்டுக்கு வர மீனாவிடம் என்ன சொல்லுகின்றனர்? அதற்கு மீனாவின் பதில் என்ன. குடும்பத்தினர் என்ன சொல்லுகின்றனர்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி…
முத்துவை பற்றி அனைவரும் பெருமையாக பேச அருண் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…