’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ – இசையமைப்பாளர் சாம் சி.எஸ்

’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ – இசையமைப்பாளர் சாம் சி.எஸ்

தமிழ் சினிமாவில் ‘ஓர் இரவு’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் சாம் சி.எஸ். இதனைத் தொடர்ந்து, விக்ரம் வேதா, அடங்கமறு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி ஆகிய படங்களுக்கு இசையமைத்து கவனத்தை ஈர்த்தார். மேலும் இந்தி, தெலுங்கு மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

அடுத்து அவர் அஜித் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்துப் பேசிய சாம் சி.எஸ், ‘அஜித்துடன் பணிபுரிய உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஆனால், நான் அஜித் சாருடன் கண்டிப்பாக ஒரு படம் பண்ணுவேன். நான் அவருடைய தீவிர ரசிகன். அவரை ஒரு நடிகராக மட்டுமல்லாமல், ஒரு மனிதராகவும் எனக்குப் பிடிக்கும். அவர் அனைவருக்கும் ஒரு முன்மாதிரி. தளபதி விஜய்யுடனும் பணியாற்ற விரும்புகிறேன், ஆனால், அவர் மீண்டும் நடிப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் மீண்டும் நடிக்க வருவார் என்று நம்புகிறேன்’ என்றார்.

அஜித், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கடைசிப் படமாக ‘ஜனநாயகன்’ ஜனவரி 19-ந்தேதி ரிலீஸாகிறது. இதனைத் தொடர்ந்து அவர் முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளார்.

‘I am a big fan of Ajith’ – Music composer Sam CS
dinesh kumar

Recent Posts

Baththa Trailer

Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

21 minutes ago

லெனின் பாண்டியன் – திரைவிமர்சனம்

கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…

1 hour ago

நடிகைகளை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை – நடிகை ரோஜா

கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…

2 hours ago

அக்கா மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார் – விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா!

நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…

2 hours ago

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – கமல்ஹாசன், குஷ்பு கருத்து

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…

2 hours ago

லவ்வர் பாய் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் நடிகர் ஜீவன்!

தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…

3 hours ago