siragadikka asai serial episode update 28-11-25
விஜயா சொன்ன வார்த்தைக்கு அண்ணாமலை பதில் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செல்வமும் முத்துவும் காரை நிறுத்திவிட்டு இளநீர் குடிக்கின்றனர். அந்த வழியாக சென்ற அருண் அவரது நண்பருடன் சேர்ந்து முத்துவை கவனித்து விட்டு வந்து இளநீர் குடிக்கின்றனர். உடனே அருண் வழக்கம் போல் முத்துவை வம்பு இழுத்து அசிங்கப்படுத்தி பேசுகிறார். பண்ற வேலை எல்லாம் பண்ணிட்டு மாலை போட்டுட்டா சாமி மன்னிச்சிடுவாருன்னு நினைக்கிறாங்க குடிக்காதன்னு பொண்டாட்டி சொன்னா அவளை விட்டு விட்டு அனுப்பி விடுவார்கள் என்றெல்லாம் பேச முத்துக்கு கோபம் வருகிறது ஆனால் செல்வம் அவரை கட்டுப்படுத்தி அவன் வேணும்னே வம்பு பண்றான் நீ இப்படி டென்ஷன் ஆகணும்னு தான் செய்றான் இது ஒன்னும் பிரச்சனை பெரிதாகும் போயிடலாம் என்று சொல்லி அழைத்து சென்று விடுகிறார்.
மறுபக்கம் விஜயா ரோகினி இடம் எங்க போயிருந்த என்று கேட்க புரியல என்று சொல்லுகிறார் தமிழ்ல தான் பேசுறேன் எங்க போயிருந்த இன்னைக்கு என்று கேட்க இரண்டு கிளைன்ட் பாத்துட்டு ஷோரூம் போயிருந்தேன் என்று சொல்லுகிறார் அவ்வளவுதானா என்று கேட்க அவ்வளவுதான் என சொல்லுகிறார் திருப்பி பழைய மாதிரி பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டியா என்று கேட்க என்னாச்சு என்று கேட்கிறார்.நீ எதுக்கு அந்த மீனாவை பார்த்து பேசிகிட்டு இருந்தா என்று கேட்க நான் அவங்கள வர வச்சி எல்லாம் பேசல நான் ஒரு ஹோட்டல்ல கிளையன்ட் பாக்க போல அங்க பூ கொடுக்க வந்திருந்தாங்க அதுவும் இல்லாம அவங்களே தான் வந்து பேசினாங்க அப்படி பேசும்போது நான் எப்படி பதில் பேசாம இருக்க முடியும் என்று மாத்தி பேசுகிறார். உடனே அண்ணாமலை வெளியிலிருந்து இதை கவனித்து விட்டு இப்ப எதுக்கு நீ திட்டி கிட்டு இருக்க அவங்க ஒரே வீட்டில் இருக்கிறவங்க அக்கா தங்கச்சியா பழகுறவங்க அவங்க பார்த்து பேசினா என்ன தப்பு இருக்கு என்று கேட்கிறார். உடனே சுருதி கரெக்டா அங்கிள் நானும் போய் பாத்துட்டு தான் வந்தேன் என்று சொல்லு விஜயா நீயுமா என்று கேட்டு முடிப்பதற்குள் அண்ணாமலை நானும் தான் போயிட்டு வந்தேன் என்று சொல்லுகிறார்.
அவ திமிரு புடிச்ச யாரையும் மதிக்காமல் இந்த வீட்டை விட்டுப் போயிருக்கா. நீங்க எதுக்கு போய் பார்க்கணும் நீங்க பண்றது பெரிய தப்பு என்று விஜயா திட்டுகிறார். முத்து குடிக்காம இருக்கணும் அப்பதான் அவ இங்க வருவா என்று சொல்ல உடனே மனோஜ் இந்த ஜென்மத்துல அவன் குடிக்காம இருக்க மாட்டான் என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து வாசலில் முத்து சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சத்தம் போடா குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியாகி பார்க்கின்றனர். என்னை திடீர்னு மாலை போட்டுக்கிட்டு வந்து நிற்கிறான் யாரு கேட்டு இதையெல்லாம் செய்றான் என்று கேட்கின்றேன் என்கிட்ட சொல்லி தான் பண்ண என்று அண்ணாமலை சொல்லுகிறார் அவனுக்காக தான் நான் காய்கறி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன் சாப்பாடு எல்லாம் செய்யக்கூடாது என்று சொல்ல உடனே மனோஜ் என்னால் அப்படி எல்லாம் இருக்க முடியாது என்று சொல்லுகிறார் விஜயாவும் இது என்னோட வீடு எங்கிட்ட கேட்காம இவனை எப்படி மாலை போடலாம் என்று சொல்லிவிடுகிறார். வெறுவழி இல்லாமல் முத்து நான் செட்டில் தங்கிக்கிறேன் பா இவர்கள் இங்கே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
பிறகு முத்து கோவிலுக்கு போவதற்கான ஏற்பாடுகள் செய்து பூஜை தொடங்குகிறது மீனாவின் குடும்பத்தினர் வருகிறார்களா? முத்து என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…