மீனாவை சமாதானப்படுத்த மாலை போட்டு முத்து, ரோகினி கேள்வியால் கடுப்பான மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சபரிமலைக்கு முத்துமாலை போட,மீனா அண்ணாமலை இடம் பேசியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சத்யாவிடம் ஆபீஸ்க்கு மட்டும் பாஸா இருந்தா போதும் உனக்கு ஆயிடு போறாங்க என்று சொல்ல அப்படி எல்லாம் ஒன்னும் இல்லாம நீ இப்படி பேசிக்கிட்டு இருக்காத என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ரேகா வந்து விடுகிறார் என்ன சொன்னாங்க என்று சொல்ல டேப்லட்ஸ் கொடுத்திருக்காங்க திரும்பவும் வர சொல்லி இருக்காங்க சாதாரண வயிறு வலி தான் சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார் சரி நீங்க டேப்லட் வாங்கிட்டு கிளம்புங்க என்று சொல்லிவிட்டு சீதா சென்று விடுகிறார் உடனே ரேகா சத்யாவிடம் நீ கெளம்பு சத்யா அம்மா கிட்ட வந்துட்டு தான் சொல்லிட்டாங்க அம்மாவை கூட்டிட்டு வீட்டுக்கு போறேன் என்று சொல்ல அதுவரைக்கும் நான் இருக்கவா என்று கேட்க வேணா சத்தியமா வந்துட்டாங்க என்று சொல்லுகிறார் உடனே சத்யா கிளம்ப சிந்தாமணி உள்ளே வருகிறார். என்ன கண்ணு நீ வயித்து வலின்னு சொல்ற இந்த டைம்ல எல்லாம் நீ அம்மா கூட தான இருந்திருக்கலாமே அதுவும் இருக்க மாட்ட யார் கூட வந்த என்று கேட்க ஆபீஸ்ல வேலை செய்யறவங்க கூட சொல்ல கண்டவங்க கூட எல்லாம் எதுக்கு வர அம்மாவை கூப்பிட்டு இருக்கலாம் இல்ல என்று சொல்லுகிறார்.

நம்ம வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல வேண்டாமா நீ அங்க செய்ற பிசினஸ் எனக்கு புடிக்கல டெக்கரேஷன் என்ற பெயரில் ஆளு உங்களை வைத்து மிரட்டி தொழில் பண்றது புடிக்கல என்று சொல்ல சரி அதுல அப்புறம் பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு சரி உங்க அப்பா வீட்டில் விடுகிறேன் வாயென அழைத்துச் சொல்கிறார். மறுபக்கம் மீனா வீட்டுக்கு முத்து செல்வம் என அவரது நண்பர் மூவரும் மாலை போட்டுக்கொண்டு வருகின்றனர் சந்திரா அவர்களை வரவேற்று உட்கார வைக்க மாலை போட்டு செட்டில் பூஜை வைத்துள்ளதாகவும் நீங்கதான் வந்து விளக்கு ஏத்தணும் என்று சொல்லுகிறார் நான் எப்படி ஏத்த முடியும் வீட்ல வைக்க வேண்டிய தான மாப்பிள்ளை என்று சொல்ல அந்த வீட்ல என் மேல பாசம் இருக்கிறவங்க இல்லாம இருக்கும்போது அந்த வீட்ல நான் எப்படி வைக்க முடியும் என்று சொல்லுகிறார் உடனே மீனாவை பார்த்து பேசிக் கொண்டே இருக்க மீனா அமைதியாக இருக்கிறார் கண்டிப்பா குடும்பத்தோட பூஜைக்கு வாங்க என்று அழுத்தமாக சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

கீழே படிக்கட்டில் இறங்கும்போது அண்ணாமலை எதிரில் வர அப்பாசாமி என்று முத்து சொல்லுகிறார் என்னடா திடீர்னு மாலை போட்டு இருக்க என்று கேட்க போடணும்னு தோணுச்சு போட்டுட்டேன் என்று சொல்லுகிறார் சரி வந்த வேலை முடிஞ்சிடுச்சு இல்ல கெளம்பு என்று சொல்லி அனுப்பி விடுகிறார். அண்ணாமலை மேலே வர மீனா குடும்பத்தினரை அவரை வரவேற்ற உட்கார வைக்கின்றனர். பிறகு சந்திரா மீனாவிடம் பேசுவதை புரிந்து கொண்டு நாம் மேலே போய் துணி எடுத்துட்டு வரேன் என்று சொல்லி சத்யாவை அழைத்துச் சென்று விடுகிறார்.

அண்ணாமலை மீனா விடம் முத்துமேல நீ கோபப்படுறது ஞாயம் தாமா ஆனா வீட்ட விட்டு வருவதற்கு வேறு ஏதோ காரணம் இருக்குன்னு என் மனசாட்சி தோணுது உன்ன நான் மருமகளா பாக்கலாம் நினைக்கிறது தான் எனக்கு இப்படி தோணுது உண்மையை சொல்லுமா என்று சொல்ல மீனா கண்கலங்கி ரோகினி சொன்னதை நினைத்துப் பார்க்கிறார் உடனே அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா எத்தனை நாளைக்கு இவர் இப்படி பண்ணிட்டு இருப்பாரு அதனால்தான் கோபப்பட்டு இப்படி பண்ண என்று சொல்ல நீ முத்து மேல இருக்கிற கோபத்தை நான் தான் வந்த அப்படின்னா அவன் மாலை போட்டு இருக்கிறதே உனக்கு ஒரு உதாரணம் தான் உனக்கு எப்போது நம்ம வீட்டுக்கு வரணும்னு தோணுதோ வா என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். அண்ணாமலை கிளம்பிய உடனே ரோகினி போன் போட மீனா கோபத்தில் உனக்கு என்னடி பிரச்சனை என்று கேட்கிறார் உங்களை சந்திக்க வேண்டும் என்று சொல்லி சொல்ல முதலில் கோபப்பட்ட மீனா பிறகு வருவதாக சம்மதிக்கிறார்.

ஹோட்டலில் இருவரும் சந்திக்க மீனா என்ன கேட்கிறார்?அதற்கு ரோகினி பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய அப்டேட்

விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…

13 hours ago

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu!

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…

13 hours ago

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘SIGMA’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்​யின் கடைசிப்படமாக…

13 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…

13 hours ago

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்​வ​தேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…

14 hours ago

பராசக்தி படம் குறித்து வெளியான தரமான தகவல்..!

பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர்…

16 hours ago