மீனாவுக்கு வந்த சந்தேகம், முத்து கொடுத்த வார்னிங், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதாவிடம் அருண் டிராமா போட, உண்மை தெரிந்து முத்துவிற்கு கோபம் வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா குடும்பத்தாரிடம் ரோகிணியின் அம்மாவை சந்தித்த விஷயத்தையும் அவர் பேசிய விஷயத்தையும் சொல்லுகிறார் உடனே முத்து அவர்கள் வேறு எதையும் சொல்லலையா என்று கேட்க இல்லைங்க அவங்க பேசுனது எல்லாமே ஒரு குழப்பமா தான் இருந்தது எனக்கு ஒண்ணு மட்டும் புரியுது அவங்க வந்து ஏதோ ஒரு பெரிய உண்மையை மறைக்கிறாங்க நம்மகிட்டயும் பொய் சொல்லி இருக்காங்க அதனால தான் அவங்க அத்தனை தடவை மன்னிச்சுடுங்க நான் பொய் சொல்லிட்டேன்னு சொன்னாங்க என்று சொல்லுகிறார்.

இது மட்டும் இல்லாம அவங்க பொண்ணு வெளிநாட்டில் எல்லாம் இல்ல இங்க இருக்கு அதனால தான் என் பொண்ணு கிட்ட இருக்கட்டும்னு விட்டுட்டு போனேன் என்று சொன்னாங்க என்று சொல்ல அதற்கு ரவி அது எப்படி உறுதியா சொல்றீங்க நீ என்று கேட்க அவங்க பேசுனத வச்சு தான் சொல்றேன்னு சொல்லுகிறார். உடனே விஜயா இந்த விஷயத்தை இதோட விட்ருங்க இதுக்கு அப்புறம் ரோட்ல இருக்குற குழந்தை வீட்ல இருக்கிற குழந்தை என்று யாரையும் கூட்டிட்டு வராதீங்க என்று சொல்லிவிட்டு அனைவரும் சென்று விடுகின்றனர். கிருஷ் அம்மாவை கண்டுபிடிச்சே ஆகணும் அந்த பொண்ண கண்டுபிடிச்சா எல்லா உண்மையும் வெளியே வந்துடும் அதுவும் இல்லாம கிரிஷ் பாட்டி இன்னொருவாட்டி நம்மகிட்ட மாட்டினா நம்மளே அவங்க கிட்ட இருந்து உண்மையை தெரிந்து கொள்ளலாம் என்று சொல்லி பேசிக்கொண்டிருக்க ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

மறுபக்கம் அருண் சோகமாக வீட்டுக்கு வர சீதா என்ன ஆச்சு என்ன விஷயம் என்று கேட்கிறார் அதற்கு அருண் கொஞ்சம் வேலை மேல பிரச்சனை என்று சொல்லுகிறார் என்ன விஷயம் என்று கேட்க முதலில் சொல்ல மறுத்த அருண் பிறகு முத்துவோட ஃப்ரெண்ட் செல்வம் வந்து ஒரு ஆள கூட்டிட்டு பைக்ல வந்து இருந்தா அவர் ஹெல்மெட் போடல அதனால நான் கேட்டேன் அதுக்கு முத்துவோட பிரண்டு நாங்க நீ முத்துக்கு சகல தானே கண்டுக்காத அப்படின்னு மரியாதை இல்லாம பேசின மாதிரி சீதாவிடம் சொல்லுகிறார். உடனே சீதாவும் நீங்க உங்க டியூட்டி பார்க்கும்போது உங்களை யாராவது இப்படி பேசினா நீங்க அவங்க மேல ஆக்சன் எடுங்க என்று சொல்ல உடனே அருண் இதல முத்துவோட பேருன்னு தான் கெட்டுப் போயிடும் என்று ஆக்டிங் கொடுக்கிறார். பிறகு செல்வம் கார் செட்டில் உட்கார்ந்து நண்பர்களுடன் அருண் அடித்த விஷயத்தையும் நாங்க பைன் கட்டிடோம்னு சொன்னாலும் நடுரோட்டிலேயே உட்கார வச்சுட்டாங்க என்று சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க இந்த விஷயத்தை முத்து கிட்ட யாரும் சொல்லாதீங்க என்று சொல்லிவிடுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் முத்துவும் வந்துவிட செல்வம் முத்துவை பார்த்து பேச முடியாமல் நான் போய் டீ குடிக்க போறேன் என்று சொல்லி கிளம்ப முத்து என்னாச்சு செல்வமும் என்கிட்ட ஏதாவது மறைக்கிறியா என்று கேட்கிறார்.

அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்ல அப்போ எதுக்கு என் முகத்தை பார்த்து பேச மாட்டேங்குற என்ன ஆச்சு என்ன பிரச்சனை என முத்து கூட இருப்பவர்களை கேட்கிறார். செல்வம் ஒன்னும் பிரச்சனை இல்லா டி குடிச்சிட்டு வீட்டுக்கு போறேன் என்று சொல்லிவிட்டு கிளம்ப கூட இருப்பவர்கள் அருண் செய்த விஷயத்தை சொல்லி விடுகின்றனர்.உடனே முத்து கோபப்பட்டு அங்கிருந்து கிளம்ப போக செல்வம் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கோபமாக கார் எடுத்துக் கொண்டு போய் விடுகிறார்.இதுக்கு தான் நான் உன்கிட்ட சொல்லுங்க நானும் சொன்னேன் என்று செல்வம் இருப்பவர்களிடம் கோபமாக பேசுகிறார் பிறகு ஹாஸ்பிடலுக்கு வந்து சீதாவை சந்தித்த முத்து உன் புருஷனுக்கு என் மேல கோவம் இருந்தா என் மேல காட்ட சொல்லு அத விட்டுட்டு என் பிரண்டு மேல காட்டுறதுல என்ன விதத்திலும் நியாயம் இருக்கு உன்னை கல்யாணம் பண்ணிட்டா என்ற ஒரு காரணத்துக்காக தான் விலகி போய்கிட்டு இருக்கேன் அங்க என்ன நடந்துச்சுன்னா என்று சீதா ஆரம்பிக்க என்ன நடந்துச்சுன்னு எனக்கும் தெரியும் அதனால அமைதியாக இருக்கச் சொல்லு இல்லன்னா இதே மாதிரி எப்பவுமே நான் அமைதியா இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு வார்னிங் கொடுத்துவிட்டு சென்று விடுகிறார்.

பிறகு ரோகிணிக்கு அவரது தோழி மகேஸ்வரி போன் போட்டு க்ரிஷ் சரியா சாப்பிட மாட்டேங்குறான் படிக்க மாட்டேங்குறான்னு கம்ப்ளைன்ட் பண்றாங்க என்று சொல்ல பிறகு கான்ஃபரன்ஸ் காலில் பேசுகின்றனர் ரோகினி என்ன சொல்லுகிறார்?அதற்கு கிருஷ் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 21-08-25
jothika lakshu

Recent Posts

சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

5 hours ago

துஷார்..கம்ருதீன்.. நாமினேஷன் ஃப்ரீ கிடைக்கப் போகும் போட்டியாளர் யார்? வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

13 hours ago

காந்தாரா படத்தின் 14 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

காந்தாரா 2 படத்தின் 14 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

13 hours ago

அசிங்கப்படுத்திய மனோஜ், கோபப்பட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து உண்மையை கண்டுபிடிக்க,மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில்…

13 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை, நந்தினி பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

16 hours ago

பிக் பாஸ் சொன்ன வார்த்தை, வருத்தப்பட்ட துஷார், வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

16 hours ago