siragadikka asai serial episode update 21-03-26
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை சாமி கும்பிட்டு விட்டு வந்து உட்கார வீட்டில் சந்தோஷமாக நடந்த விஷயங்களை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது பரசு வந்து கோவிலில் உன் பேர்ல அர்ச்சனை பண்ணி இருக்கேன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாமலை என்று சொல்ல உனக்கு ஞாபகம் இருக்கா என்று கேட்கிறார் அது எப்படி என்னால மறக்க முடியும் உங்க வீட்ல கொண்டாட்டமா இருக்கணும்னு நினைச்சு வந்தா எந்த கொண்டாட்டத்தையும் காணும் வெளியே ஏதாவது வச்சிருக்காங்களா என்று கேட்கிறார். இது உன்னோட 61 வது பிறந்தநாள் இதை எவ்வளவு கிராண்டா கொண்டாடனும் யாருக்கும் தெரியாதா என்று கேட்கிறார் கொஞ்ச நேரத்தில் விஜயா வர பரசுவிடம் இப்பதான் பால் பாக்கெட் வாங்கிட்டு வந்த டீ போடலாம் உங்களுக்கும் போடுறேன் என்று சொல்ல நான் இங்க காபி குடிக்கிறதுக்காக வரல உங்களுக்கு இன்னைக்கு என்ன நாள் என்று தெரியவில்லையா என்று சொல்லுகிறார் இன்னைக்கு என்ன சனிக்கிழமை எவ்வளவு தான் என்று விஜயா சொல்லுகிறார்.
உடனே ரூமில் இருந்து மனோஜ் வர அவரிடம் இன்னைக்கு என்ன நாள் என்ன கிழமை என்று கேட்க எனக்கு 21ஆம் தேதி சனிக்கிழமை என்று சொல்லுகிறார். வேற எதுவும் இல்லையா என்று கேட்க இப்ப எதுக்கு எல்லார்கிட்ட இதையே கேட்டுக்கிட்டு இருக்கீங்க என்று சொல்லுகிறார் ரவி ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வர பரசு எனக்கு ஸ்பெஷல் நாள் என்றதுனால ஹோட்டல்ல இருந்து சாப்பாடு எடுத்துட்டு வந்தியா ரவி என்று கேட்கிறார் இல்ல அங்கிள் கிராசரி செய்து இல்ல நான்தான் சமைக்கணும் டைம் ஆயிடுச்சு அதனால ஹோட்டல்ல டிபன் வாங்கிட்டு வந்துட்டேன் என்று சொல்லுகிறார் உனக்கும் இன்னைக்கு எந்த நாள் தெரியலையா என்று கேட்க மனோஜ் இன்னும் எல்லார்கிட்டயும் இதையே கேட்டுகிட்டு இருக்கீங்க என்று சொல்லுகிறார். அண்ணாமலை அமைதியாக இருக்கச் சொல்ல, உடனே பரசும் மனம் கேட்காமல் நீங்க இந்த நாள மறப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல அண்ணாமலைக்கு இன்னையோட அறுவது வயசு முடிஞ்சு 61 வது வயசு தொடங்கிடுச்சு அவனுக்கு இன்னைக்கு பிறந்தநாள் என்று சொல்ல விஜயா யோசித்து விட்டு ஆமாங்க போன வாரம் எல்லாம் யோசிச்சிட்டு இருந்தேன் ஆனா இப்ப மறந்துட்டேன் மன்னிச்சிடுங்க என்று சொல்லி அண்ணாமலையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார் உடனே மற்றும் ரவி இருவரும் விஷ் பண்ண அவர்களும் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுகின்றனர் அப்போது விஜயா உங்க செல்ல புள்ளை என்று சொல்லுவீங்க அவன் கூட எதுவுமே செய்யல என்று சொல்லுகிறார்.
உடனே பரசுவோம் ஆமா முத்து ஏன் எதுவுமே பண்ணல இவங்களுக்கு தெரியாதது கூட வருத்தமா தெரியல முத்து மறந்தது தான் கஷ்டமா இருக்கு என்று சொல்ல அண்ணாமலை முகம் மாறுகிறது கொஞ்ச நேரத்தில் முத்து வீட்டுக்கு வர எதுவும் சொல்லாமல் ரூமுக்கு சென்று விடுகிறார் பாருங்கள் இவனும் மறந்துட்டான் என்று சொல்ல உடனே பட்டு வேஷ்டி சட்டை போட்டுக் கொண்டு வெளியில் வர எங்கடா கிளம்புற என்று கேட்க கல்யாணத்துக்கு என்று சொல்லுகிறார் உங்க பிறந்தநாளை ஞாபகத்துல கல்யாணத்துக்கு போக போறானாம் பாருங்க என்று சொல்லுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் மேளதாளத்துடன் முத்து மீனாவும் டிரஸ் மற்றும் மாலையை எடுத்து வருகின்றனர். உடனே அண்ணாமலை சந்தோஷப்படுகிறார். குடும்பத்தில் இருப்பவர்களும் சந்தோஷப்பட நல்ல வேலை நீயாவது மறக்காமல் இருக்கியே என்று பரசு சொல்லுகிறார் என்னோட அப்பா பிறந்த நாளை எப்படி என்னால மறக்க முடியும் என்னோட பிறந்த நாளை கூட நான் மறந்துவிடுவேன் என்று சொல்லுகிறார். முத்துவும் மீனாவும் விஷ் பண்ணிவிட்டு மாலையை மாற்றிக் கொள்ளச் சொல்லுகின்றனர் உடனே இருவரும் மாலை மாற்றிக்கொள்ள கொஞ்ச நேரத்தில் சுருதி கேக் கொண்டு வருகிறார்.
உனக்கு எப்படி தெரியும் சுருதி என்று கேட்க மீனாதான் சொன்னாங்க என்று சொல்லுகிறார் என்கிட்ட சொல்லவே இல்லை என்று சொல்ல உங்க அப்பாவோட பர்த்டேவை நீதான் எனக்கு சொல்லணும் என்று சொல்லி சொல்லுகிறார். அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க ரோகிணி பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று வாசலில் நின்று சொல்ல உடனே விஜயா கோபப்பட்டு மாலையை கழட்டி வைத்து விட்டு வந்து திட்டுகிறார் உன்னால தான் எங்க குடும்பமே நிம்மதி இல்லாம இருக்கு நீ இப்ப எதுக்கு இங்க வந்த என்று கேட்டு திட்டுகிறார் அண்ணாமலையும் உன்னால இவ்வளவு பிரச்சனை வந்திருக்கு என்று சொல்ல உங்களோட அடுத்த பிறந்தநாளுக்கு நான் இந்த வீட்லதான் இருப்பேன் உங்க மனோஜ் கூட தான் வாழ்வேன் என்று சொல்லிவிட்டு வாங்கிக் கொண்டு வந்த கிஃப்டை கீழே வைத்துவிட்டு செல்ல விஜயா அதை எட்டி உதைத்து விடவெளியில் போய் விழுகிறது. உடனே முத்துவும் மீனாவும் எடுத்துக் கொண்டு வந்த டிரஸ்ஸை அண்ணாமலை இடம் கொடுத்து முதலில் நீங்கள் அம்மாவோடு மாத்திட்டு வாங்க நம்ம கேக் வெட்டலாம் என்று சொல்லுகின்றனர். அவர்கள் டிரஸ் மாத்தி கொண்டு வந்த பிறகு கேக் வெட்டி குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர்.
மறுபக்கம் முத்து வாங்கியுள்ள வேன் பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்கிறது குடும்பத்தினர் அனைவரும் இந்த பூஜையில் கலந்து கொள்ள பூஜை நல்லபடியாக நடக்கிறது. பிறகு அண்ணாமலை என்ன சொல்லுகிறார்?சீதாவுக்கு என்ன நடக்கிறது? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…