அண்ணாமலைக்கு காத்திருந்த அதிர்ச்சி, முத்து எடுத்த முடிவு,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகினியின் அப்பா வராது காரணத்தினால் விஜயா சுருதிக்கு முதலில் தாலிக்கு பிரித்து போட்டு விடலாம் என முடிவெடுக்கிறார்.

சுருதியின் அம்மாவிடம் சென்று இந்த ஃபங்ஷனை நீங்க தான் நடத்துறீங்க அதனால உங்க பொண்ணுக்கு தான் முதல் மரியாதை கிடைக்கணும். சுருதிக்கு தாலி பிரித்து போட்ட பிறகு ரோகிணிக்கு போட்டுக்கலாம் என்று சொல்ல ஸ்ருதியின் நம்ம நேராக ரோகிணியிடம் வந்து உங்க அத்தை சுருதிக்கு தாலி பிரித்து போட்ட பிறகு உனக்கு போடலாம்னு சொல்றாங்க உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே? ஏதாவது பிராப்ளமா என்று கேட்கிறார்.

எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல, என்னோட அப்பா வந்துட்டு இருக்காரு அதனால சுருதிக்கு பிரிச்சு போடலாம்னு சொல்லிட்டு இருக்காங்க என்று சொன்னது விஜயாவின் திட்டத்தை புரிந்து கொள்கிறார். அதன் பிறகு மனோஜ் ரோகினி இடம் வந்து எங்க அப்பா வர்றாரா இல்லையா என்னிடமாவது உண்மையை சொல்லு என்று கேட்க ரோகினி கோபப்படுவது போல பேசி சமாளித்து விடுகிறார்‌.

பிறகு ஸ்ருதிக்கு தாலி பிரித்து போடும் பங்க்ஷன் நடக்கிறது. மறுபக்கம் ரோகினி ஏற்பாடு செய்த ஆள் முத்துவை மைண்ட் வாஸ் செய்ய தொடங்குகிறார். ஸ்ருதிக்கு தாலி பிரித்து போடும் பங்க்ஷன் முடிந்ததும் அண்ணாமலை ரோகினியோட அப்பா வரார்னு சொன்ன என்ன ஆச்சு ஆள காணோம் என்று கேட்க பரசு அந்த மலேசியா சம்மந்தி வருவாரா இல்லையா அவரை பார்க்கவே முடியாது போலையே என்று கேட்க விஜயா பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார்.

பிறகு ரோகிணிக்கு மாலை போட்டு மேடைக்கு அழைத்து வருகின்றனர். விஜயா ரோகிணியை முறைத்த படி நிற்கிறார். அடுத்ததாக அந்த நபர் முத்துவை வாங்க வெளியே போய் நடந்துட்டு வரலாம் என்று கார் பார்க்கிங்க்கு கூட்டிச் சென்று கார் டிக்கியை ஓபன் பண்ணி சரக்கு பாட்டில்களை எடுத்து வைக்கிறார்.

ரெண்டு மூணு கட்டிங் போட்டுட்டு போய் சாப்பிட்டால் சூப்பரா இருக்கும் என சொல்ல முத்து இங்கு எப்படி எனக்கு வேண்டாம் என்று மறுக்கிறார். ஆனால் அவர் கூச்சப்படாதீங்க பாஸ் யாரும் பாக்க மாட்டாங்க என்று சொல்லி முத்து கையில் சரக்கை கொடுக்கிறார்.

அடுத்ததாக வாசுதேவனிடம் அவரது உறவினர் ஒருவர் உங்களுக்கு பெரிய மனசு இந்த பொண்ணுக்கு மட்டுமில்லாமல் அவங்க பெரிய மருமகளுக்கும் தாலி பிரிச்சு போட ஒத்துக்கிட்டு இருக்கீங்க என்று சொல்ல அவங்களுக்கு வசதி இல்ல நம்ம சாப்பிட்ட மிச்சத்தை இல்லாதவங்களுக்கு கொடுக்கிறது இல்லையா அப்படித்தான் என்று அவமானப்படுத்தியது போல பேசுகிறார்.

பரசு இந்த ஆளை சும்மா விடக்கூடாது வாப்பா நாளைக்கு கேள்வி அதுக்குன்னு கேட்கலாம் என்று அண்ணாமலையை கூப்பிட வேணாம் முத்து பார்த்தா பிரச்சனை ஆகிடும் என்று சொல்ல பின்னாடி முத்து ஆளில்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Siragadikka asai serial episode update
jothika lakshu

Recent Posts

Karuppu Tamil Trailer

Karuppu Tamil Trailer | Suriya | RJ Balaji | Trisha | ‪Sai Abhyankkar‬ | Dream…

5 hours ago

Naan Dhaan King Lyric Video

Naan Dhaan King Lyric Video | Con City | Arjun Das | Anna Ben |…

5 hours ago

‘சியான் 63’ படப்பிடிப்பு எப்போது? வெளியான புதிய அப்டேட்!

‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…

3 days ago

“டிரெய்லர் தெறிக்கும்”… ‘கருப்பு’ படம் குறித்து சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட்!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…

3 days ago

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கண் அறுவை சிகிச்சை!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

3 days ago

ஆகஸ்டில் திரைக்கு வரும் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…

3 days ago