மனோஜ் மீது கோபத்தில் முத்து, பயத்தில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து காபி நல்லாவே இல்ல என்று சொல்லி சத்தம் போட கடைக்காரர் ஜூஸ் எடுத்துட்டு வந்து கொடுக்க சொல்லும் நேரத்தில் நகையை பரிசோதனை செய்தவர் இது கவரிங் நகை என்று சொன்னதும் கடைக்காரர் கவரிங் நகை கொண்டு வந்து தங்க நகை வேண்டுமா? எத்தனை கடைக்கு இப்படி போய் ஏமாற்றி இருக்கீங்க என்று கோபப்பட முத்து பார்த்து பேசுங்க என்று கடைக்காரரின் சட்டையை பிடிக்க போலீசுக்கு போன் போடப்போகும் சமயத்தில் கடை ஓனர் அங்கு வருகிறார்.

மீனாவை பார்த்ததும் அவர் என்னமா? என்ன பிரச்சனை என்று கேட்க? கடையில் நடந்த விஷயங்கள் தெரிய வர முத்து நீங்கதான் நகையை மாற்றி இருக்கீங்க என்று கோபப்பட இந்த கடைக்குன்னு மக்கள் கிட்ட ஒரு பேர் இருக்கு இங்கு அப்படியெல்லாம் பண்ண மாட்டோம். நடுவுல ஏதோ தப்பு நடந்து இருக்கு என்று சொல்லி இருவரையும் விட சொல்கிறார். முத்து அண்ணாமலைக்கு போன் போட போனை எடுக்க தடுத்து நிறுத்தும் மீனா விஷயம் என்னன்னு முழுசா தெரியாம எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்கிறாள்.

முத்து மனோஜை அடித்து கேட்டால் உண்மை தெரிந்து விடும் என்று கோபப்பட மீனா பாட்டி பிறந்தநாள் முடியுற வரைக்கும் இத பத்தி யார்கிட்டயும் எதுவும் கேட்கக் கூடாது என தன் மீது சத்தியம் வாங்குகிறாள். மறுபக்கம் அண்ணாமலை அலங்கார ஏற்பாடுகளை ஆனந்தத்தோடு கவனிக்க விஜயா நகையோட எங்க போனான்னு தெரியலையே என்று பதற்றத்தோடு இருக்கிறார்.

கோபமாக வீட்டுக்கு வந்த முத்து அண்ணாமலை ஆனந்தத்தோடு இருப்பதை பார்த்து ஆஃப் ஆகி நிற்கிறார். பிறகு விஜயா கீழே வந்து மீனாவை பார்த்து எங்க ஊரை சுத்த போன! சமைக்க வேண்டாமா? நீ வந்து சமைக்கிற வரைக்கும் காத்துக் கொண்டே இருக்கணுமா என்று சத்தம் போட முத்து போய் சமைக்க வேண்டியது தானே என்று கோபமாக பேச விஜயா முத்துவைப் பார்த்து பதறுகிறார். பிறகு முத்து ஒரு பலூனை எடுத்து மனோஜை பயங்கர கோபத்துடன் பார்த்து பலூனை ஊதி வெடிக்கிறார்.

மனோஜ் ரூமுக்கு வந்த பிறகு ரோகினியிடம் முத்து உங்கிட்ட ஏதாவது கேட்டானா என்று விசாரிக்க நீ எதுக்கு முத்து பத்தி கேக்குற என்று ரோகிணி திருப்பி கேட்க மனோஜ் ஒன்னும் இல்ல சும்மா கேட்டேன் என்று சமாளிக்கிறார். பிறகு மனோஜ் பாத்ரூம் சென்ற நேரத்தில் அம்மா போன் செய்ய ரோகிணி போனை எடுக்க க்ரிஷ் நான்தான்மா பேசுறேன். ஸ்கூல்ல நான் இப்ப நல்லா படிச்சு மார்க் எடுத்து இருக்கேன். டீச்சர் என்னை பாராட்டுனாங்க எல்லாத்துக்கும் நீதான் காரணம்.. உன்னை பாக்கணும் போல இருக்கு என்று சொல்ல ரோகினி சீக்கிரம் வரேண்டா செல்லம் என்று பேசிக் கொண்டிருக்க மனோஜ் வெளியே வர போனை கட் பண்ணி விடுகிறார்.

செல்லமா யார் அது என்று கேட்க என் பிரண்டு அவ பேரு செல்லம்மா நாங்க ஷார்ட்டா அப்படித்தான் கூப்பிடுவோம் என்று ரோகினி சமாளித்து மனோஜிடம் ரொமான்ஸாக பேசி அவனை திசை திருப்பி பிறகு பாட்டிக்கு என்ன கிப்ட் வாங்கலாம் என்று கேட்க மனோஜ் முதலில் வேண்டாம் என்று சொல்கிறார். பிறகு ரோகிணி ஏதாவது கொடுக்கனும்ல என்று சொன்னதும் சரி ஒரு புடவை எடுத்துக் கொடுக்கலாம் என்று முடிவெடுக்கிறார்.

அதேபோல் மறுபக்கம் ரவி மற்றும் ஸ்ருதி என்ன கிப்ட் கொடுக்கலாம் என்று டிஸ்கஸ் செய்து ஆளுக்கு ஒரு முடிவு எடுக்கின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

jothika lakshu

Recent Posts

The Wedding Song Lyric Video

The Wedding Song Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…

10 hours ago

சான் டியேகோ காமிக்-கானில் ‘ராமாயணம்’ டிரெய்லர் வெளியீடு – இந்தியாவில் எப்போது ரிலீஸ்?

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில்…

11 hours ago

நிர்வாணக் காட்சி படப்பிடிப்பில் பழுதான கேமரா – ஃப்ளோரன்ஸ் பியூ பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சங்கடமான அதேசமயம் சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகை ஃப்ளோரன்ஸ்…

11 hours ago

அனிருத் இசையில் லோகேஷ் நடித்த ‘டிசி’ படத்தின் மியூசிக் ஆல்பம் வெளியீடு!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘டிசி’. ‘ராக்கி’,…

11 hours ago

சென்னை பாலன் இல்லத்தில் நடக்கும் மாணவர்கள் போராட்டம் போலியானது – சனம் ஷெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டாவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் நடிகை…

11 hours ago

தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து கலக்கிய நடிகைகள்!

சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகிய பிறகு, மீண்டும் திரும்பும் நடிகைகளுக்கு முன்பு இருந்த அதே வரவேற்பு கிடைக்குமா என்பது…

12 hours ago