தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து குடித்துவிட்டு மீனாவிடம் வந்து புலம்ப அண்ணாமலை இதை பார்த்துவிட முத்து என மன்னிச்சிடுப்பா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று மன்னிப்பு கேட்கிறார். கொஞ்ச நேரத்தில் எல்லோரும் கூடி விட முத்து மனோஜ் பார்த்து நானாடா இந்த வீட்டை ஆள ஆசைப்படுறேன் என்ன பாத்து எப்படிடா நீ எப்படி கேட்ட என்று அடிக்க போகிறார்.
என் அப்பா இருக்கிற வரைக்கும் நான் இங்கதான் இருப்பேன் அப்பா இருக்கிற கோவில் இது. சாமி இருக்கிற வரைக்கும் தான் கோவில். சாமி இல்லன்னா அது வெறும் கட்டிடம் தான், என்னை சின்ன வயசுலயே கூட்டிட்டு போய் பாட்டி வீட்ல தள்ளிட்டீங்க. அப்போ இருந்து இப்ப வரைக்கும் எனக்கு வீட்டு மேலையோ ரூம் மேலையோ ஆசை வந்தது கிடையாது என்று சொல்கிறார்.
என் அப்பாவுக்காக தான் நான் இந்த வீட்டுக்கு வரேன் அவர் இல்லனா நான் இந்த வீட்டு பக்கம் தல வெச்சி கூட படுக்க மாட்டேன் என்று சொல்கிறார். பிறகு எல்லோரும் கலைந்து செல்ல அண்ணாமலை கண் கலங்க விஜயா அவன் போதையில் உளறிக்கிட்டு இருக்கான் போயிட்டு உங்க என்று படுத்து விடுகிறாள்.
அடுத்த நாள் காலையில் யாரும் எதிர்ப்பாராத விதமாக முத்து பக்தி மயமாக பூஜை செய்ய அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். என் நினைச்சதும் எல்லாத்தையும் செஞ்சாரு ஆனா இன்னைக்கு ஒரு ரூம் கட்ட முடியாம கஷ்டப்படுற பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு என்று வருத்தப்படுகிறார்.
விஜயா சம்பந்தி அம்மா பெரிய மனசு பண்ணி கொடுக்க வந்த பணத்தை தான் நீ கெடுத்து விட்டுட்டியே என்று திட்ட முத்து ஸ்ருதி அப்பா கிட்ட இருந்து ஒரு ரூபா கூட வாங்க கூடாது என்று சொல்கிறார். ஸ்ருதி ஏன் எதுக்கு என்று கோபப்பட முத்து அவர் அப்பாவ எவ்வளவு அவமானப்படுத்தி இருக்காருன்னு சொல்லுடா ரவி என்று சொல்கிறார்.
அதன் பிறகு இனிமே ரூம் பிரச்சனையை பத்தி நீ கவலைப்பட வேண்டாம் பா என்று சொல்ல மனோஜ் ஏண்டா நீயும் உன் பொண்டாட்டியும் வீட்டை விட்டு வெளியே போகப் போறீங்களா என்று கேள்வி கேட்பதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…