தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம் இந்த கறிக்கடைக்கார குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு என்று வெளியே வர அதற்குள் அவரை வித்யா அனுப்பி வைத்துவிட்டு அது எங்க ஏரியா கடைக்காரர் என்று சொல்லி சமாளிக்கிறார்.
மறுபக்கம் கிரிஷ்க்கு ரோகினி தான் தான் அம்மா என்ற உண்மையை சொன்ன நிலையில் கிருஷ் ஏன் மா இவ்வளவு நாளா என்கிட்ட உண்மைய சொல்லல, நான் சின்ன வயசுல ஏதாவது தப்பு பண்ணிட்டேனா? அதனாலதான் என்கிட்ட உண்மைய சொல்லலையா? என்று கேட்க ரோகிணி பெரியவங்க பண்ண தப்புக்கு நீ தண்டனை அனுபவிக்கிற என்று சொல்கிறார்.
ஸ்கூல்ல எல்லாரும் என்னை அம்மா இல்ல அப்பா இல்லனு கிண்டல் பண்ணிட்டே இருப்பாங்க நீ வந்து அவங்க கிட்ட என்னன்னு கேளு மா.. என்ன சொன்ன ரோகிணி இப்போ அதெல்லாம் வந்து கேட்க முடியாது அதுக்கான நேரம் வரும் என்று சொல்கிறார். க்ரிஷ் நான் உன் கூடவே இருக்கேன் என்று சொல்ல ரோகினி கூடிய சீக்கிரம் நான் உன்னை கூட்டிட்டு வந்துடுவேன் என்று சொல்கிறார். அதுவரைக்கும் நான்தான் உன் அம்மா என்று சொல்லக்கூடாது என்று ரோகினி சொல்ல சொல்ல மாட்டேன் ஆனால் எனக்காக நீங்க ஒன்னும் பண்ணனும் நாளைக்கு எனக்கு கட்டு பிறக்கும்போது நீங்கதான் முன்னாடி வந்து நிக்கணும். நான் உங்களை தான் முதல்ல பாக்கணும் என்று சொன்னதும் ரோகினி வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறார்.
இதையடுத்து ரோகிணி எல்லாவற்றையும் பேக் பண்ண சொல்லி சீக்கிரம் கிளம்ப சொல்ல ரோகினியின் அம்மாவும் தயாராக இவர்கள் வெளியே கிளம்பும்போது முத்து வீட்டுக்குள் வந்து விடுகிறார். இதை எடுத்து ரோகினி பேக்கை கொண்டு போய் மறைத்து வைத்துவிட்டு எதுவும் தெரியாதது போல் நின்று கொள்கிறார். இதைத் தொடர்ந்து முத்து சாப்பாடு வாங்கி வந்து கொடுத்து சவாரி முடிந்தது. இனிமே வீட்டுல கிரிஷ் கூட சேர்ந்து விளையாடிட்டு இருப்பேன் என்று சொல்கிறார். ரோகிணி வீட்ல இருப்பதை பார்த்து நீ என்ன இங்க இருக்க வேலைக்கு போகலையா என்று கேட்க லேட்டா தான் போவேன் என்று சொன்ன நீதானே எப்பவும் முதல் ஆளா போவ நான் எப்ப போனா உனக்கு என்ன என்று கேட்கிறார்.
பிறகு முத்து சாப்பாட்டை கொடுத்து நீங்க போய் சாப்பிடுங்க என்று சொல்கிறார். ரோகிணி கிரிஷ்க்கு சாப்பாடு ஊட்டி விட முத்து அதைப்பாரத்து ஷாக் ஆகி இது என்ன நடக்குது என்று கேட்டு ரோகிணி நம்ம எதையோ சொல்லி சமாளிக்க முயற்சி செய்ய இதுக்கு பேரு தான் கல்லுக்குள் ஈரம்னு சொல்லுவாங்க போல, இதுவும் நல்லாதான் இருக்கு என்று செல்கிறார்.
மீனா வித்யாவிடம் தனக்கு ஆசை தன்னுடைய குடும்பம் சந்தோஷமா இருக்கணும் அவ்வளவுதான். என் அத்தை என்ன என்னதான் பேசினாலும் எனக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல மனிதனை பெற்றுக் கொடுத்திருக்காங்க என்று சொல்கிறார். முத்து செல்வது போல கண்ணதாசன் கவிதை ஒன்று சொல்லி பொறுமையா இருக்கிறது தப்பில்ல என்று சொல்கிறார். வித்யா ரோகினி சொன்ன மாதிரி ஒன்னும் தெரியல மீனா ரொம்ப நல்லவங்க என்பதை புரிந்து கொள்கிறார்.
அதைத் தொடர்ந்து மீனா வீட்டுக்கு வர முத்து என்ன இவ்வளவு நேரம் என்று கேட்கிறார். வித்யா கிட்ட பேசிட்டு இருந்ததில் நேரம் போனதே தெரியல, எனக்காக கறியெல்லாம் வாங்கி சமைச்சாங்க என்று சொல்கிறார். பிறகு முத்து ரோகிணி கிரிஷுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட விஷயத்தைச் சொல்ல இதில் என்னங்க இருக்கு அவங்களும் பொண்ணு தானே அவங்களுக்குள்ள ஒரு தாய்மை இருக்கும்ல என்று பேசுகிறார்.
பிறகு நீ நான் கிரிஷ்காக ஒரு கண்ணாடி வாங்கி வந்திருப்பதாக எடுத்து கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…
Veiyil Lyrical Video – Pulse Movie | Master Mahendran | Rishika Rajveer | Nawin Ghanesh…
God Mode Lyric Video | Karuppu | Suriya | RJB | Trisha | SaiAbhyankkar |…
Pagal Kanavu Official Teaser | Faisal Raj | Krishnanthu | Athira Santhosh | Shakeela |…
Aaryan Trailer Tamil | Vishnu Vishal | Praveen K | Ghibran | Selvaraghavan | Shraddha…
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…