தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ், ரோகிணி வீட்டுக்கு வர மொத்த பேரோட கண்ணும் உங்கள் மேல தான் இருக்கும் என திருஷ்டி சுத்தி போட அதை பார்த்து அண்ணாமலை, முத்து ஆகியோர் நக்கல் அடிக்கிறார்கள்.
பிறகு மனோஜ் ரொம்ப டயர்டா இருக்கு என சொல்ல ஒரு நாளைக்கே இப்படியா என்று அண்ணாமலை கேட்க விஜயா என் பையன் பிசினஸ் பண்றான். உங்களை மாதிரி ஈசியான வேலையா பண்றான் என்று பேசுகிறார்.
அடுக்கு ரூமுக்கு சென்ற மனோஜ் அசந்து தூங்க ரோகினி சாப்பிட எழுப்பியும் எழாமல் தூங்குகிறான். விஜயா வந்து சாப்பிட கூப்பிட்டும் எழவில்லை. இதையடுத்து ரோகினி நாம வெளிய போய் தூங்கணும் எந்திரி என எழுப்பியும் எழவில்லை .
லேட்டானதும் முத்து கதவை தட்ட ரோகிணி அவர் நல்லா தூங்குகிறாரு.. எழுந்து வருவாரு ஏன் சொல்ல முத்து போட்ட சத்தத்தில் அண்ணாமலை விஜயா ஆகியோர் வெளியே வந்து விடுகிறார்கள்.
முத்து பஞ்சாயத்தை கூட்ட அண்ணாமலை என்னுடைய ரூமில் படுத்துக்க என்று சொல்ல விஜயா மீனாவை திட்ட முத்து வேண்டாம் பா நாங்க மேலயே படுத்துக்கிறோம் எனவும் சொல்லி மேலே வந்தபின் ஒரு ட்ரைவர்னு இப்படி எல்லாம் நடத்துறாங்க உன்னை வேற இப்படி கோட்டை மாடியில் படுக்க வச்சிட்ட என்று வருத்தப்பட மீனா நீங்க எனக்கு என் கூட இருக்கிறதே சந்தோஷ் தான் என்று சொல்கிறார்.
மறுநாள் காலையில் மனோஜ் வேலைக்கு கிளம்பாமல் தூங்கி கொண்டே இருக்க அண்ணாமலை இன்னும் பொறுப்பு வரல என்று திட்டுகிறார்.விஜயா இந்நேரம் அவன் குளித்து ரெடியாகி இருப்பான் என்று ரூமுக்கு வர மனோஜ் அசந்து தூங்கி கொண்டிருப்பதை பார்த்து ஷாக் ஆகிறார்.
Lkg குழந்தையை எழுப்புவது போல் எழுப்ப அண்ணாமலை பிடித்து திட்டி விடுகிறார். மனோஜ் ரொம்ப டயர்டா இருக்கு என தூங்கி கொண்டே இருக்க முத்துவும் அங்கு வந்து விடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…
‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்,…
இன்று'அங்கம்மாள்' கீதா கைலாசம்; நாளை 'தாய் கிழவி' ராதிகா நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள 'தாய் கிழவி'…
விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்' வெளியிட திட்டம்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தில் மமிதா பைஜூ,…
'புருஷன்' பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது…