உண்மையை கண்டு பிடித்த மீனா, கண் கலங்கிய முத்து,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து போலீஸ் ஸ்டேஷனில் காத்துக் கிடக்க இன்ஸ்பெக்டர் வந்ததும் அவரிடம் சென்று நான் குடிக்கவே இல்லை என்று சொல்லியும் இன்ஸ்பெக்டர் நம்பாமல் எதுவாக இருந்தாலும் கோர்ட்ல பாத்துக்க என்று அனுப்பி விடுகிறார்.

அதைத்தொடர்ந்து மீனா ஆதாரத்தை திரட்டுவதற்காக ஒயின்ஷாப் வருகிறார். ஒயின் ஷாப்பில் ஆண்கள் எல்லோரும் காத்திருக்க மீனாவும் அங்கு வந்து காத்திருக்க இதை பார்த்த youtuber ஒருவர் செம கன்டென்ட் கிடைச்சிருக்கு என்று லைவ் வீடியோவில் ஒரு இந்திய குடிமகன்களுக்கு முன்னாகவே வந்து ஒயின் ஷாப்பில் காத்துக்கிட்டு இருக்காங்க என்று சொல்லி மீனாவை வீடியோ எடுப்பதோடு எவ்வளவு நாளா உங்களுக்கு இந்த குடிப்பழக்கம் இருக்கு? எப்படி இந்த குடிப்பழக்கம் வந்தது? குடிக்காமல் இருந்தால் உங்களுக்கு கை கால் எல்லாம் நடுங்குமா? அதனால் தான் இவ்வளவு சீக்கிரம் இங்கு வந்துட்டீங்களா என்று கேள்வி மேல் கேள்வி கேட்க மீனா இதெல்லாம் ரெக்கார்ட் ஆகிட்டு இருக்கா என்று கேட்க அவரும் ஆமாம் என சொல்கிறார். அதன் பிறகு சரி கொஞ்சம் கிட்ட வாங்க என்று கூப்பிட்டு கன்னத்தில் பளாரென அறைகிறார்.

என்ன எதுவுமே தெரியாம உங்களை மாதிரி ஆளுங்க இந்த மாதிரி வீடியோ எடுத்து போட்டதுனால தான் இன்னைக்கு என் புருஷன் பிரச்சனையில் மாட்டி இருக்காரு, அவர் தப்பு பண்ணலனு நிரூபிக்க தான் நான் இங்க வந்து இருக்கேன் என்று சொல்ல ஒரு நிமிஷம் மேடம் என்று அப்படியே சிங்க பெண், புருசனை காப்பாற்ற வந்த பெண் என அப்படியே மாற்றி பேசுகிறார்.

அதன் பிறகு ஒயின்ஷாப் திறந்ததும் மீனா உள்ளே சென்று ஓனரை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்லி என் புருஷன் தப்பு பண்ணலன்னு நிரூபிக்கணும் அதுக்கு உதவுங்கள் என்று சொல்லி கேட்க அவர் அதெல்லாம் பண்ண முடியாதுன்னு சொல்ல உங்க பொண்ணா நினைச்சு கேட்கிறேன் என்று வேண்டுகிறார். பிறகு மீனாவுக்கு சிசிடிவி ஆதாரங்களை காட்ட அதில் முத்து குடிக்கவில்லை என்பது உறுதியாகிறது. அதுமட்டுமின்றி சிட்டி தான் இந்த வேலையை பார்த்தது என்பதும் தெரிய வருகிறது.

உடனே மீனா இந்த வீடியோவை ரவிக்கு அனுப்ப சொல்லி நம்பர் கொடுத்துவிட்டு ரவியை முத்துவின் கார் செட்டுக்கு வரச் சொல்லி மீனாவும் கிளம்பி செல்கிறார். ரவி செட்டுக்கு வந்ததும் முத்து என்னடா என்ன ஆச்சு ஏன் இங்க வந்திருக்க வீட்ல ஏதாவது பிரச்சனையா என்று கேட்க அண்ணி தான் வர சொன்னாங்க என்று சொல்ல முத்து என்ன ஏது எது தெரியாமல் தவிக்கிறார்.

இங்கே வந்த மீனா முத்துவை ஓடி வந்து கட்டிப்பிடித்து என்னை மன்னிச்சிடுங்க நீங்க அவ்வளவு சொல்லியும் நானும் உங்களை நம்பாமல் விட்டுவிட்டேன். நானாவது உங்களை நம்பி இருக்கணும் என அழுது புலம்ப முத்து என்ன மீனா என்று கேட்க ரவி அண்ணி பாருக்கு போய் நீ குடிக்கலன்னு வீடியோ ஆதாரத்தோட நிரூபிச்சிருக்காங்க என்று சொல்கிறார்.

முத்துவிடம் இந்த வீடியோவையும் போட்டு காட்டி பிறகு முத்துவையையே பேசவைத்து வீடியோவாக எடுத்து அதையும் இணைத்து இன்டர்நெட்டில் விடுகின்றனர். முத்து நான் குடிக்கல என் மேல சுமத்தப்பட்ட பழியிலிருந்து என்னை வெளியே கொண்டு வந்தது என் பொண்டாட்டி மீனாதான் என்று பெருமையாக சொல்லி கண்கலங்குகிறார்.

இந்த வீடியோவை பார்த்து மீனாவின் அம்மாவும் கண்கலங்க மறுபக்கம் அண்ணாமலைக்கும் விஷயம் தெரிந்து அவரும் வீடியோவை பார்த்து கண் கலங்குகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோடு முடிவடைகிறது. ‌

Siragadikka aasai serial episode update
jothika lakshu

Recent Posts

Nightu Nila Lyric Video

Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses

7 hours ago

The India Story Official Film Teaser

The India Story Official Film Teaser Tamil | Kajal A Kitchlu |Shreyas Talpade |Chettan DK…

7 hours ago

ஆர்யாவின் ‘அனந்தன் காடு’ – திரை விமர்சனம்

கதைக்களம்: 1990-களின் பின்னணியில் நகரும் ‘அனந்தன் காடு’, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளியின் வாழ்க்கையை மையமாகக்…

10 hours ago

ப்ராமிஸ் – திரை விமர்சனம்

கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…

10 hours ago

‘பாகுபலி 3’ உருவாகிறதா?… மரண மாஸ் அப்டேட்!

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…

10 hours ago

உலக அரங்கில் மீண்டும் இந்தியாவுக்கு பெருமை… ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘கோல்டன் பிளேட்’ விருது!

இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான…

10 hours ago