மீனா சொன்ன வார்த்தை, ரோகினியை சந்தித்த அம்மா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா கிச்சனில் இருக்கும்போது அங்கு வந்த விஜயா அவன வரவேணான்னு சொன்னா நீ வர மாட்டேன்னு சொல்லி பிரச்சனை பண்ற நீங்க ரெண்டு பேரும் வரலைன்னா அது தனியா பேசி முடிவு பண்ண வேண்டியதுதானே என்று சத்தம் போட நீங்கதானே சபைல வச்சு சொன்னீங்க என்று பதிலடி கொடுக்கிறார்‌. சரி வரதுன்னு முடிவாகி போச்சு அங்கு வந்து அவனை எதுவும் பேச வேண்டாம்னு சொல்லு சாப்பிட மட்டும் வாயைத் திறந்தால் போதும் என சொல்ல அதை நீங்களே சொல்லுங்க என்று மீனா பதில் கொடுக்க நான் சொன்னா அவன் கேட்க வா போறான் நீ தானே இப்ப சாவி கொடுக்கிற நீயே சொல்லு என சொல்லிவிட்டு நகர்கிறார்.

பிறகு மீனா மொட்டை மாடியில் இருக்கும் முத்துவிடம் வந்து பங்க்ஷன் ல நமக்கு பெருசா மரியாதை கிடைக்காது இருந்தாலும் நீங்க எதுவும் பேசக்கூடாது உங்களால பிரச்சனை எதுவும் வரக்கூடாது என்று சொல்ல முத்து கோபப்பட அத்தை தான் சொல்ல சொன்னாங்க என்றதும் நான் எதுவும் பேச மாட்டேன் ஆனால் அப்பாவுக்கு மரியாதைக்கு இல்லைன்னா நான் சும்மா இருக்க மாட்டேன் என முடிவெடுக்கிறார்.

அடுத்ததாக மீனா அம்மாவை பார்க்க பொன்னியம்மன் கோவிலுக்கு வர சத்யாவும் அங்கே இருக்க மீனாவிடம் மாப்பிள்ளை வரல என்று கேட்க அவர் இதுக்கு வரணும் என்று சத்தியா கேள்வி கேட்கிறார். இங்க பணம் தான் எல்லாம் என்று சொல்ல மீனா அவனுக்கு அட்வைஸ் கொடுக்க சத்தியா தன்னுடைய எண்ணத்தில் உறுதியாக இருக்கிறார். தாலி பிரித்துப் போடும் பங்க்ஷன் நடக்கப் போவதையும் அதற்கு மாமா உங்களையும் கூப்பிடாம இருந்தாரு நான் தான் வேணான்னு சொல்லிட்டேன் எனவும் மீனா சொல்கிறார்.

பிறகு ரோகிணி வித்யாவிடம் தாலி பிரித்து போடும் பங்க்ஷனுக்கு பணம் தேவை என்று பணம் இருக்கா என்று கேட்க இல்லை என சொல்கிறார். பிறகு அம்மாவுக்கு போன் போட்டு பணம் இருக்கா என்று கேட்க அவர் ஒரு நகை இருக்கு அதை வச்சு பணத்தை கொண்டு வரேன் என சொல்லி போனை வைக்கிறார். மறுநாள் ரோகினி பார்லரில் இருக்கும் போது அவருடைய அம்மா பணத்துடன் வருகிறார். ரோகிணி வித்யா வீட்டில் இருக்க வேண்டியதுதானே என்று கோபப்பட இன்னைக்கே ஊருக்கு கிளம்பும் அதான் உன்னை பார்த்துட்டு பணம் கொடுத்து போகலாம்னு வந்தேன் என சொல்லி பணத்தை கொடுக்கிறார்.

இந்த நேரம் பார்த்து விஜயா பார்லருக்கு வந்துவிட அவரை உள்ளே விட வேண்டாம் என்று ரோகிணி சொல்லிவிட விஜயாவை வெயிட் பண்ண வைக்கின்றனர். உள்ளே ரோகிணி உன்னை மட்டும் அவங்க பார்த்தா அவ்வளவுதான் ஏற்கனவே பார்லர்ல அவங்க பேர் இல்லன்னு தெரிஞ்சதுக்கே சுய ரூபத்தை காட்டிட்டாங்க இப்ப இங்க கத்தி கத்தரிக்கோல் வேற இருக்கு என்ன பண்ணுவீங்கன்னு தெரியல என பயந்து நடுங்குகிறார்.

வெளியில் வெயிட் பண்ண முடியாமல் விஜயா உள்ளே என்னுடைய ரோகினி அதற்குள் தன்னுடைய அம்மாவுக்கு மேக்கப் போட்டு முகத்தை மறைத்து வைத்திருக்கிறார். விஜயா உள்ளே வந்ததும் ஆன்ட்டி எதுக்கு வெளிய வெயிட் பண்ண வச்சீங்க நேரா உள்ள அனுப்ப வேண்டியது தானே என்று கோபப்படுவது போல டிராமா போடுகிறார். பிறகு உங்க அப்பா கிளம்பிட்டாரா என்று கேட்க கிளம்பிட்டார் ஆன்ட்டி பணமும் அனுப்பி வைத்து விட்டார் என்று பணத்தை எடுத்துக் கொடுக்க விஜயா சந்தோஷப்படுகிறார். உங்க அப்பா மட்டும் வராரா இல்ல அந்த டிக்கெட் வருதா என்று கேட்க எந்த டிக்கெட் என்று ரோகிணி கேட்க அதான் உங்க அப்பா கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணு என விஜயா கேட்க இல்ல அப்பா மட்டும்தான் வருகிறார் என கூறுகிறார்.

உங்க அம்மா இருந்திருந்தால் வந்திருப்பாங்க அதான் உங்க அல்ப ஆய்ஸ்ல போய்ட்டாங்களே என்று விஜயா சொல்ல அதைக் கேட்டு ரோகிணியின் அம்மா வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Siragadikka aasai serial episode update
jothika lakshu

Recent Posts

Rippipee Lyrical Video

Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…

22 hours ago

Sing Geetham Tamil Trailer

Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…

23 hours ago

Maaya Kanavo Video Song

Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…

23 hours ago

“அவன் விஷால் மாதிரியே இருக்கான்!”-ஆர்யா உடைத்த ‘அவன் இவன்’ படப்பிடிப்பு தளத்தின் ரகசியம்!

இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…

1 day ago

இறுதிக்கட்டத்தை எட்டிய விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…

1 day ago

‘வடசென்னை 2’ல் தனுஷ் – சிம்பு இணைகிறார்களா?

தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘வடசென்னை 2’ திரைப்படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்…

1 day ago