தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ராமமூர்த்தி ஆகியோர் வீட்டுக்கு வரும் பெண் வீட்டாரிடம் என்ன பேசணும்? என்ன பேசக்கூடாது என பேசிக்கொள்கின்றனர்.
பிறகு செழியனை பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வர அவர்களை வரவேற்று உட்கார வைத்து செழியனை பற்றியும் முடிந்த வாழ்க்கை பற்றியும் பேசுகின்றனர். பெண் வீட்டாரும் போட்டோ பார்த்தோம், வேலைய பத்தி எல்லாம் சொன்னாங்க எங்களுக்கு எல்லாம் ஓகே தான் என்று சொல்ல ஈஸ்வரி ராமமூர்த்தி ஆகியோர் சந்தோஷப்படுகின்றனர்.
ராதிகாவை கூப்பிட்டு உட்கார வைத்து இது என்னுடைய மருமக ராதிகா என அறிமுகம் செய்து வைக்கின்றனர். பிறகு மாப்பிள்ளை வீட்ல இருக்காரா பார்க்கலாமா என்று கேட்க செழியனை கீழே கூப்பிட்டு உட்கார வைத்து பேச இதை எல்லாம் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பிறகு பொண்ணு போட்டோவை வாங்கி பார்த்து பொண்ணு ரொம்ப அழகா இருக்கா செழியனுக்கும் ஏத்தபடி இருப்பா என பேசுகின்றனர். செழியன் போட்டோ காட்ட பதில் ஏதும் பேசாமல் எழுந்து சென்று விடுகிறார்.
மாப்பிள்ளை எதுவும் சொல்லாம போயிட்டாரு என்று கேட்க அவன் கொஞ்சம் குழப்பத்துல இருக்கான் என்று கோபி பேசி சமாளிக்கிறார். பிறகு பாக்கியாவும் இனியாவும் வீட்டுக்கு வர இது யார் என்று கேட்க ராமமூர்த்தி இது என்னுடைய மருமக என்று சொல்ல உங்களுக்கு ரெண்டு பையனா என்று கேட்க இல்ல ஒரே பையன் கோபி தான் என சொல்கின்றனர். அது செழியனோட அம்மா என்று சொன்னதும் அப்ப இவங்க யாரு என்று கேட்க இது என்னுடைய வைஃப் அது என்னுடைய எக்ஸ் ஒய்ஃப் என கோபி விளக்கம் கொடுக்கிறார்.
பிறகு பாக்கியா மேலே சென்று செழியனிடம் நீ என்ன நெனச்சிட்டு இருக்க என்று கேட்க செழியன் ஜெனியை தவிர வேற யாரையும் என்னால நினைச்சு கூட பாக்க முடியாது என்று சொல்ல கீழே கூட்டி வந்து பாக்கியா எனக்கும் செழியனுக்கும் இந்த கல்யாணத்துல விருப்பமில்லை இன்னும் அவனுக்கு விவாகரத்து கூட ஆகல. செழியனுக்கு இன்னொரு கல்யாணம் செய்யணும்னு எண்ணம் கூட கிடையாது அவனுக்கு ஜெனி கூடவும் குழந்தை கூடவும் சேர்ந்து வாழணும் என்பதுதான் ஆசை என்று உண்மையை உடைக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…