ரோகினிக்கு வந்த அடுத்த சிக்கல், விஜயா கொடுத்த ஷாக்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ரோகினி இடம் என்று மீனா பூக்கட்டியே புருஷனுக்கு கார் வாங்கிக் கொடுத்திருக்கா இதலயும் அவ புருஷன் அவளை ஒரு நாள் கொஞ்சுறான் ஒரு நாள் கோபப்படுவான். ஆனா மனோஜ் உன்கிட்ட எவ்வளவு அன்பா இருக்கான் இதுவரைக்கும் ஒரு நாள் கூட உன்கிட்ட கோபமா பேசுனது கிடையாது ஆனால் அவனுக்காக நீ என்ன பண்ணி இருக்க? அவளுக்குன்னு ஒரு வேலை இருக்கா என்று பேச மனோஜ்க்கும் கண்டிப்பாக சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும் என ரோகிணி சொல்ல இப்ப கூட அவனுக்கு ஏதாவது நான் பண்றேன்னு உன்னால சொல்ல முடியல என்று கோபப்படுகிறார்.

உடனே ரோகினி நான் என்ன பண்ணனும் ஆன்ட்டி என்று கேட்க உங்க அப்பாகிட்ட உடனே பேசி மனோஜ்க்கு ஒரு பிசினஸ் ஆரம்பிச்சு தர சொல்லு என சொன்னதும் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். என் கண்ணு முன்னாடியே பேசி இல்லனா நான் உன் மாமாகிட்ட பேசுறேன் என்று சொல்ல மாமா இப்போ பிஸியா இருப்பாரு என்ன ரோகினி சொல்ல எனக்கு புடவை எல்லாம் எடுத்து கொரியர் பண்ண முடியாது போன் பேச முடியாதா என்று கேள்வி கேட்டு திணற விடுகிறார்.

ரோகிணி நான் முதல்ல அப்பா கிட்ட பேசிட்டு உங்கள பேச வைக்கிறேன் என சொல்ல இன்னைக்கு பேசணும் இல்லனா அவ்வளவுதான் என வார்னிங் கொடுத்து வெளியே செல்கிறார் விஜயா. பிறகு ரோகிணி மீனாவிடம் வந்து டீ கேட்டு எதுக்கு நீங்க காரெல்லாம் வாங்கி கொடுத்தீங்க எப்படி வாங்கினீங்க மொத்த பணமும் கட்டுனீங்களா என்று கேள்வி மேல் கேள்வி கேட்க அங்கு வந்த ஸ்ருதி விட்டா அவங்களோட பேங்க் ஸ்டேட்மென்ட் எல்லாம் கேப்பீங்க போல என நக்கல் அடிக்கிறார்.

அதைத்தொடர்ந்து மீனா வெளியே போயிருக்க ஸ்ருதியின் அம்மா வீட்டுக்கு வந்து ஸ்ருதிக்கு தாலி பிரித்து போடும் பங்க்ஷன் கிராண்டா செய்ய முடிவெடுத்து இருப்பதாக சொல்ல விஜயா சந்தோஷப்படுகிறார். ரோகிணிக்கும் இன்னும் தாலி பிரித்து படல நீங்க சம்மதம் சொன்னா ரெண்டு பேருக்கும் சேர்த்து ஒன்னா தாலி பிரித்து போடலாம் என்று கேட்க ஸ்ருதியின் அம்மாவும் ஓகே சொல்லி வீட்டுக்கு கிளம்புகிறார். பிறகு விஜயா ரோகினியிடம் உடனே உங்க அப்பா கிட்ட விஷயத்தை சொல்லி கிளம்பி வர சொல்லி பங்க்ஷனுக்கு அவர் கண்டிப்பா வரணும் அப்பதான் உனக்குனு ஒரு மரியாதை இருக்கும் என சொல்கிறார்.

அப்பா பிஸியா இருப்பாரு வர முடியாது என ரோகிணி சொல்ல இதுக்கு கூட உங்க அப்பாவால வர முடியாதா பொண்ணுக்காக ரெண்டு நாள் லீவு போட முடியாதா என கோபப்படுகிறார். இப்பவும் உங்க அப்பா வரலைன்னா வேற ஏதோ பிரச்சனை இருக்குன்னு தானே அர்த்தம் என்று கேட்க அப்படி எல்லாம் ஒரு பிரச்சனை இல்லாட்டி நான் அப்பாகிட்ட பேசி வர வைக்கிறேன் என ரோகிணி சமாளிக்கிறார்.

பிறகு பார்லருக்கு வந்து வித்தியாவிடம் நடந்த விஷயங்களை சொல்லி புலம்புகிறார். மறுபக்கம் ஸ்ருதியின் அம்மா இந்த ஃபங்ஷனில் முத்து பெரிய பிரச்சனையே உருவாக்க இருப்பதாக தன்னுடைய பிளானை கூறுகிறார். அடுத்ததாக வீட்டில் விஜயா மீனாவிடம் இந்த வேலை பண்ணியா அந்த வேலை பண்ணியா என கேள்வி மேல் கேள்வி கேட்க முத்து மீனா மட்டும்தான் வேலை பண்ணனுமா மத்த ரெண்டு பேர் என்ன பண்றாங்க என விஜயாவை கேள்வி கேட்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Siragadikka aasai serial episode update
jothika lakshu

Recent Posts

கர்ப்பகால உடற்பயிற்சி குறித்து சமந்தா நெகிழ்ச்சி

நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…

12 hours ago

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா கூட்டணியின் ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…

12 hours ago

‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் சிம்பு – அனிருத் சந்திப்பு; வைரலாகும் புகைப்படம்

நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…

13 hours ago

காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டி – நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகை சிம்ரன்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…

16 hours ago

எதிர்மறை விமர்சனங்களை பின்னுக்குத் தள்ளி வசூலில் அசத்தும் ‘டாக்சிக்’!

கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…

17 hours ago

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

2 days ago