கேள்வி மேல் கேள்வி கேட்கும் முத்து, அதிர்ச்சியில் ரோகினி இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கையில் புது துணிகளோடு வீட்டுக்கு வர என்னடா இவ்வளவு வாங்கிட்டு வர பொங்கல் தீபாவளி கூட இன்னும் வரல என்ன விஷயம் என்று கேட்க மனோஜ் எனக்கு தீபாவளி வந்துடுச்சு என்று சொல்கிறார்.

இந்த நேரம் பார்த்து முத்துவும் வீட்டுக்கு வந்து விட ரோகினி என்னுடைய அப்பா எனக்காக 15 லட்ச ரூபா பணத்தை அனுப்பி இருக்காரு என்று சொன்ன விஜயா சந்தோஷப்படுகிறார். என்னம்மா சொல்ற உண்மையாவா என்று கேட்க ஆமாம் ஆண்ட்டி என்று சொல்கிறார்.

முத்து உங்க அப்பா தான் ஜெயில்ல இருக்காரு அப்படி இருக்கும்போது எப்படி பணத்த அனுப்புனாரு என்று கேள்வி கேட்டு நடக்க அவர் ஏற்கனவே ஒருத்தர் கிட்ட எனக்காகன்னு சொல்லி பணத்தை கொடுத்து வச்சிருக்காரு என்று கூறுகிறார். அப்படின்னா அவருக்கு ஜெயிலுக்கு போக போறோம்னு ஏற்கனவே தெரிந்திருக்கா என்று மீண்டும் மடக்குகிறார். இதைக் கேட்ட ஸ்ருதி குட் கொஸ்டின் என்று சொல்ல அவர் இங்கே சென்னை கிளம்பும் போது பணத்தை எங்க மாமா கிட்ட கொடுத்து வச்சிருக்கார் என்று சொல்கிறார்.

அப்ப அவர் வரும்போது எடுத்து வந்திருக்கலாமே என்று மீனா கேள்வி கேட்க பிளைட்ல அவ்வளவு பணம் கொண்டுவர முடியாது அதுக்குன்னு ஒரு லிமிட் இருக்கு என்று ரோகிணி பதில் சொல்கிறார். உங்க மாமா தான் திருப்பதி போயிட்டு காளி கோயிலுக்கு போக போறதா சொல்லி தலைமறைவா இருக்காரு என்று விட்டு கேட்க வேற ஒருத்தர் மூலமா அனுப்புனாரு. போதுமா என்று கோபப்படுகிறார் ரோகிணி. விஜயா விடுமா அவ பொறாமையில் பேசிக்கிட்டு இருக்கான் என்று சொல்கிறார்.

அடுத்ததாக மனோஜ் இந்த பணத்தை வைத்து பிசினஸ் தொடங்கப்போறதா சொல்ல விஜய் அண்ணன் அண்ணாமலையும் சந்தோஷப்படுகின்றனர். நான் பரிகாரம் இருக்க சொல்லி காப்பு கட்டண நேரம் நல்லது நடக்க தொடங்கி இருக்கு கடவுள் கண்ணை தொறந்துட்டாரு என் பையன் இந்த 15 லட்சத்தை ஒரே மாசத்துல 15 கோடியாக கூட மாற்றுவான் என்று அளந்து விடுகிறார்.

முத்து சரி அது அப்பாவுக்கு சேர வேண்டிய பணம் தானே என்று சொல்லி ரவியையும் உனக்கு தான் அதுல பங்கு இருக்கு கேளுடா என்று கோர்த்து விடுகிறார். ரவி அதை நாம் எப்படி கேட்க முடியும் என்று சொன்ன சரி நமக்கு வேண்டாம் அப்பாவுக்கு தர வேண்டியது தரட்டும் அப்பா இந்த பணத்தை வாங்கி பேங்க்ல போட்டு வச்சுக்க என்று சொல்ல மனோஜ் ரோகிணி அதிர்ச்சி அடைகின்றனர்.

அண்ணாமலை அது ரோகினி வீட்டு பணம் ரோகிணிக்காக அவங்க அப்பா அனுப்பியிருக்கிறது. அதை வாங்கினால் நமக்கு மரியாதையாக இருக்காது என்று சொல்ல இருவரும் நிம்மதி அடைகின்றனர். பிறகு மனோஜிடம் என்ன பிசினஸ் பண்ண போற என்று கேட்க அத பத்தி இன்னும் யோசிக்கல என்று சொல்ல விஜயா ஷாக் ஆகிறார்.

பிறகு மீனாவை ஜூஸ் போட்டுக் கொண்டு வர சொல்ல முத்து ஒரு மண்டலம் இன்னும் முடியல, நீ அவங்களுக்காக வேலை செஞ்சினா அந்த பணம் திரும்பி போய்விடும் அப்புறம் அந்த பழி நம்ப மேல தான் வரும் எதுக்கு உனக்கு என்று சொல்லி மீனாவை தடுக்கிறார். விஜயா உன் கிட்ட பொண்ண பாரு நானே போட்டுட்டு வரேன் என்று கூறுகிறார்.

அடுத்ததாக ரூமுக்குள் முத்து மனோஜ் ஹோட்டல் எதுவும் சரியா அல்ல ஏதோ தகிடதத்தம் ஆட்டம் ஆடுறாங்க என்று சந்தேகப்படுகிறார். மீனா மேடம் இத பத்தி சொல்ல நீங்க போயிட்டு கார் ஓட்டுற வேலையை பாருங்க, உங்களுக்கு எல்லாத்துலயும் சந்தேகம் தான் இல்ல எல்லாத்துக்கும் கோபம் வரும் என்று திட்டுகிறார். கோபம் மட்டும் இல்ல இன்னொன்னு நல்லாவே வரும் என்று ரொமான்ஸ் ஆக நெருங்க வயதிலேயே ஒரு குத்து குத்தி எல்லாத்துக்கும் ஒரு நேரம் காலம் இருக்கு என்று திட்டுகிறார். மனோஜ் ரோகிணி விஷயத்தில் இருக்கும் உண்மையை கண்டு பிடிக்கணும் என முடிவெடுக்கிறார்.

அதன் பிறகு மீனா சமையலை முடிக்க எல்லோரும் சாப்பிட வர விஜயா மனோஜ் மற்றும் ரோகிணியை கூப்பிட்டு உட்கார வைத்து ரெண்டு முட்டையை எடுத்து வைக்க முத்து இன்னும் ஒரு மண்டலம் முடியல அதுக்குள்ள முட்டையை சாப்பிட்டு சொல்லி வைக்கிறீங்க அப்புறம் கடவுள் கோவிச்சுக்கிட்டு இன்னும் வரவேண்டிய 15 லட்சம் வராமல் போயிட்டா என்ன பண்ணுவீங்க என்று கேட்கிறார். உடனே விஜயா அதுவும் சரிதான் என்று வைத்த முட்டையை எடுத்து அதற்கு பதிலாக சட்னி ஊற்றி சாப்பிட சொல்கிறார்.

மனோஜ் நான் இப்பதான் சந்தோஷமா இருக்கேன் என் பேர்ல 15 லட்சம் ரூபா வந்திருக்கு உளற ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

siragadikka aasai serial episode update 30-04-24
jothika lakshu

Recent Posts

‘அரசன்’ முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு

கலைப்புலி V Creations எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம்…

7 hours ago

தமிழ் சினிமாவில் 50 வருட அனுபவம் கொண்டவர் பாக்யராஜ்

பிரபல இயக்குநரும், நடிகரும், திரைத்துறையின் பல்துறை கலைஞருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை கிரீம்ஸ்…

7 hours ago

திரைப்பட இயக்குநர் கே. பாக்யராஜ்- வாழ்க்கை வரலாறு சிறப்பு தொகுப்பு

தமிழ் சினிமாவின் “திரைக்கதையின் மன்னன்” என போற்றப்படும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (கிருஷ்ணசாமி பாக்யராஜ்) 1953…

7 hours ago

பாரதிராஜா மறைந்து 17 நாட்களில் காலமான பாக்யராஜ்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு…

7 hours ago

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் இன்று காலமானார்.…

9 hours ago

Nightu Nila Lyric Video

Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses

1 day ago