siragadikka aasai serial episode update 29-06-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை.. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து, மீனா செங்கல்களை அடுக்கி அழகு பார்த்து கற்பனையிலேயே ரூமை கட்டி முடிக்கின்றனர்.
அடுத்ததாக மனோஜ் கடையில் உட்கார்ந்து இருக்கேன் அவரிடம் ஃபோனில் பேசிய இருவர் வந்து சொன்னபடி எல்லாவற்றிலும் ஐந்து ஐந்து பொருட்களை வாங்க மனோஜ் ரொம்ப சந்தோஷப்படுகிறார். கடைசியாக பில் போடலாமா என்று கேட்க பில் போட வேண்டாம் இது எல்லாமே கணக்குல வராத பணம் அதனால பில்லு போடாம பொருளை கொடுங்க, உடனே வாங்கிக்கிறோம் இல்லனா வேற கடைய பாத்துட்டு போறோம் என்று சொல்ல பணத்துக்கு ஆசைப்படும் மனோஜ் மொத்தமா இவ்வளவு பொருள் வாங்கறீங்க உங்களுக்காக இதைக் கூட பண்ணி தர மாட்டேன்னா என்று சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டு பொருட்களை ஏற்றி அனுப்பி வைக்கிறார்.
அடுத்ததாக வீட்டுக்கு வந்த ஸ்ருதி டயர்டாக இருப்பதாக சொல்லி ரவியை காலை பிடிக்க வைத்து நெயில் பாலிஷ் போட வைக்க இதை பார்த்த விஜயா அதிர்ச்சியாகி டேய் ரவி என்னடா பண்ற யாராச்சு பார்த்தா என்ன சொல்லுவாங்க என்று கோபப்படுகிறார். ஸ்ருதி யார் என்ன சொல்ல போறாங்க? புருஷன் பொண்டாட்டியோட கால் அமுக்கிவிட்டு நெயில் பாலிஷ் போட்டு விடுறான். இதுல என்ன தப்பு இருக்கு? புருஷன் பொண்டாட்டிக்கு நெயில் பாலிஷ் போட்டு விட்டா அதுல ஒரு தனி சந்தோஷம் இருக்கு நீங்க வேணா ட்ரை பண்ணி பாருங்க என நெயில் பாலிஷ் கொடுத்து அங்கிளை உங்களுக்கு போட்டு விட சொல்லுங்க என்று பல்பு கொடுக்கிறார்.
இங்கு நடந்ததை விஜயா அப்படியே அண்ணாமலையிடம் வந்து புலம்பி நீங்க வந்து என்னன்னு கேளுங்க.. ஏன் நீ போய் வாங்கிட்டு வந்தது போதாதுன்னு என்ன வேற கேட்டு செருப்படி வாங்க சொல்றியா என்று அண்ணாமலை திட்டுகிறார். இப்ப எல்லாம் உன்ன மாதிரி கிடையாது காலம் மாறி போச்சு.. இப்ப இருக்கிறவங்க எல்லாம் ஆண்களுக்கு நிகரா சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நாமளும் காலத்துக்கேற்ற மாதிரி மாறித்தான் ஆகணும் என்று சொல்கிறார்.
விஜயா அந்த ஸ்ருதி பண்றது எல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு.. அவ பண்றது என்னால பார்க்கவும் முடியல, எதுவும் கேட்கவும் முடியல.. பேசவும் முடியல என்று சொன்னதும் அண்ணாமலை எல்லாத்துக்கும் ஒரு வழி இருக்கு, இதோ இப்ப வந்துடறேன் இரு என்று சொல்லி வெளியே கிளம்புகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…