தவியாய் தவிக்கும் முத்து,விஜயாவுக்கு வந்த சிக்கல்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மீனாவை கூப்பிட்டு பால் காய்ச்சிட்டியா சாமான் துலைக்கிட்டியா? என கேள்வி மேல் கேள்வி கேட்க முத்து என்ன எல்லா வேலையும் அவகிட்டயே சொல்லிட்டு இருக்கீங்க மத்த ரெண்டு பேரு என்ன பண்றாங்கன்னு கேள்வி கேட்கிறார்.

மீனா அமைதியா இருங்க என்று சொல்ல விஜயா ரூமுக்குள் சென்றதும் நான் உனக்காகத்தானே பேசுகிறேன் என்று முத்து சொல்ல நீங்க பேசுனதும் அதுக்கும் என்னதான் சேர்த்து திட்டுவாங்க என்று சொல்கிறார். அதன் பிறகு முத்து உனக்காக ஒண்ணு வச்சிருக்கேன் என்று மல்லி பூவையும் அல்வாவையும் ஒரு கவரில் எடுத்துக் கொடுக்க மல்லிப்பூவை என்னங்க இங்க வச்சிருக்கீங்க என்று கேட்டதும் சரி தலைல வச்சிடுவோம் என எடுத்து தலையில் வைத்து விடுகிறார்.

அதன் பிறகு முத்து ஆசையாக அல்வாவை ஊட்டி விடப் போக ஸ்ருதி வந்துவிட மீனா என்னங்க இந்த நேரத்துல வெளியே போறீங்க என்று கேட்க பிரியாணி ஆர்டர் பண்ணி இருந்தேன் அதை வாங்க போறேன் என சொல்கிறார். இதனால் முத்து இன்னைக்கு நான் நெனச்சது நடந்த மாதிரி தான் என புலம்புகிறார். மீனா என்ன நினைச்சீங்க என்று கேட்க ஒன்னும் இல்லை என போர்வையை போர்த்திக்கொண்டு படுக்கிறார்.

பிறகு சுருதி பிரியாணி வாங்கி வந்து சாப்பிட்டு கொண்டு இருக்க தண்ணீர் எடுக்க வெளியே வரும் விஜயா என்னமா இந்த நேரத்தில் என்ன பண்ற என கேட்க பிரியாணி சாப்படறிங்களா என்று கேட்டேன் விஜயா வாசனை நல்லா தான் இருக்கு எனக்கும் லைட்டா பசிக்குது என்ன உட்கார்ந்து சாப்பிடுகிறார்.

பிறகு விஜயா உள்ளே போனதும் ஏன் இவ்வளவு நேரம் என அண்ணாமலை கேட்க சுருதி பிரியாணி வாங்கி இருந்தா அதான் சாப்பிட்டு வந்தேன் என்று சொன்னது அண்ணாமலை நைட்ல பிரியாணி சாப்பிடலாமா உனக்கு வயசு ஆகிடுச்சு ஜீரணம் ஆகுமா என்று கேட்க அதெல்லாம் எனக்கு ஒன்னும் வயசாகல உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகும்போது ஒன்பது வருஷம் வித்தியாசம். என்னை எல்லாம் சின்ன பொண்ணு தான் சொல்லுவாங்க. கல்ல சாப்பிட்டாலும் செரிச்சுடும் என படுக்கிறார்.

பிறகு முத்து மீண்டும் எழுந்து மீனாவுக்கு அல்வா கொடுக்கப் போக இருங்க தட்டுல போட்டு எடுத்து வரேன் என மீனா டைனிங் டேபிளில் வைத்துவிட்டு தட்டை எடுக்க கிச்சனுக்குள் போக வெளியே வந்த மனோஜ் அல்வாவை பார்த்ததும் ரோகினியை கூப்பிட்டு உட்கார வைத்து இருவரும் மாறி மாறி கூட்டிக் கொள்கின்றனர்.

இதனால் முத்து அப்செட் ஆகிறார். பிறகு அவர்களும் ரூமுக்குள் சென்ற பிறகு மீண்டும் முத்து மீனாவுடன் ரொமான்டிக்காக பேசி நெருங்க பிரியாணி சாப்பிட்ட விஜயா ஏப்பம் விட முடியாமல் வெளியே வந்து இங்கும் அங்குமாக நடந்து தவியாய் தவிக்கிறார். விடியும் வரை நடந்தே கழிக்கும் விஜயா விடிந்தது பார்வதியை கூப்பிட அவர் முதுகில் குத்து குத்து என குத்துகிறார்.

இதை எல்லாரும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கின்றனர். ரோகினி ஹாஸ்பிடல் போயிடலாம் என்று சொல்ல விஜயா என்னால எங்கேயும் வர முடியாது என்னால முடியல என தவிக்க ஸ்ருதி நீங்க என்ன குத்து குத்துங்க நான் குத்துகிறேன் இருங்க என விஜயாவை ஓங்கி குத்த வருகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

siragadikka aasai serial episode update 21-03-24
jothika lakshu

Recent Posts

Cottage Teaser

Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar

4 days ago

Bindaas Lyric Video

Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…

4 days ago

Yaaridho Video Song

Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…

4 days ago

Straight Outta Sarpetta Video Song

Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…

5 days ago

Don’t Trouble The Trouble Title Song

Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava

5 days ago

Mozhiye Lyric Video

Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Sid Sriram | Balaji…

5 days ago