வீட்டுக்கு வந்த ஸ்ருதியின் அம்மா. கோபத்தில் முத்து. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி பேசியது கேட்டு அவருடைய அம்மா ரூம் இல்லாமல் மொட்டை மாடியில் படுத்து தூங்கியதாக தவறாக புரிந்து கொண்டு வாசுதேவனிடம் சொல்லிவிட்டு அண்ணாமலை வீட்டிற்கு கிளம்பி வருகிறார்.

அவர் வீட்டுக்கு வந்ததும் வாட் எ சர்ப்ரைஸ் என்று சொல்லி அம்மாவை கட்டி பிடித்துக் கொண்டு வாங்க உட்காருங்க என்று கூப்பிட எங்க மொட்டை மாடிலயா என்று கேட்க ஸ்ருதி எதுவும் புரியாமல் இருக்கிறார். இனிமேல் நீங்க வீட்ல இருக்க வேண்டாம் கிளம்பு என்று கூப்பிட ரவியும் இவர்கள் பேசுவது தெரியாமல் குழம்பு போகிறார்.

வீட்டில் உள்ள எல்லோரும் ஒன்று கூடி விட ஸ்ருதியின் அம்மா விஜயாவிடம் கணக்கெல்லாமே பிள்ளைகளை பெத்து போட தெரியுது இல்ல அதுக்கு ஏத்த மாதிரி ரூமை கட்ட தெரியாதா என்று கொச்சையாக பேச அந்த சமயம் வீட்டிற்குள் என்னுடைய முத்து இதைக் கேட்டுவிட்டு அவர்களுக்கு பதிலடி கொடுக்க வீட்டிற்குள் வாக்குவாதம் உருவாகிறது.

யார் சொல்வதையும் கேட்காமல் இனிமே நீ இங்கே இருக்க வேண்டாம் எனக்கு நல்ல மரியாதை கிடைச்சிருச்சு என்று சொல்லி சுருதியை இழுத்துச் செல்ல எதிரே அண்ணாமலை வந்து வாங்க வாங்க எப்ப வந்தீங்க என்று கேட்க அவரிடமும் கோபப்படுகிறார் ஸ்ருதியின் அம்மா.

அதன் பிறகு அண்ணாமலை கூட்டிச்சென்று என்ன பிரச்சனை என்னது என்று விசாரிக்க பிறகு ரூம் விஷயம் முழுவதுமாக தெரியவர ஸ்ருதியின் அம்மா பதில் பேச முடியாமல் நிற்க முத்து இப்ப பேசுங்க என்ன நடந்துச்சு என்பது முழுசா தெரிஞ்சுகிட்டு பேசணும் என்று கோபப்பட அண்ணாமலை பெரியவங்க கிட்ட எப்படி பேசணும்னு தெரியாதா என்று திட்டுகிறார். ஆனாலும் முத்து இவங்க என்ன பேசினாங்கன்னு தெரியுமா என்று கோபப்பட என்ன பேசி இருந்தாலும் சரி வீட்டுக்கு வந்தவங்க கிட்ட நீ படி பேசக்கூடாது நீ பண்ணது தப்பு மன்னிப்பு கேளு என்று கூறுகிறார் அண்ணாமலை.

ஆனால் முத்து இந்த விஷயத்தில் நான் தப்பே பண்ணல தப்பு பண்ணாம நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கிளம்பி செல்கிறார். பிறகு அண்ணாமலை அவன் இப்படித்தான் படப்படனு மனதில் இருக்கிறது பேசிட்டு வா நீங்க தப்பா எடுத்துக்காதீங்க என்று சொல்கிறார்.

அடுத்ததாக ஸ்ருதி அம்மாவை ரூமுக்கு அழைத்துச் செல்ல முத்து செட்டுக்கு வந்து செல்வத்திடம் நடந்த விஷயங்களை சொல்லி புலம்ப பிறகு இருவரும் சேர்ந்து இன்னொரு டிரைவரை அழைத்துக் கொண்டு பாருக்கு செல்கின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

siragadikka aasai serial episode update 18-12-23
jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

2 days ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

2 days ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

2 days ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

3 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

3 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

3 days ago