வருத்தத்தில் விஜயா, கலாய்த்த முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஸ்ருதியின் அம்மா விளக்கேற்றி விஜயாவின் நடன பள்ளியை தொடங்கி வைத்து வாழ்த்து சொல்லிவிட்டு நீங்க பரதம் ஆடி நான் பார்த்ததே இல்லை என்று சொன்னது விஜயா குரு வணக்கம் செய்து பரதம் ஆடி காட்டுகிறார்.

பிறகு எல்லோரும் கிளம்பிச் சென்றதும் விஜயா ஒரு நூறு அட்மிஷன் வந்துட்டா போதும் என்று ஆவலோடு காத்திருக்க தண்ணீர் கேன், மளிகை சாமான் போட வந்தவர் என ஒவ்வொருத்தராக வந்து ஏமாற்றத்தை கொடுக்கின்றனர்.

பிறகு ஒருவர் வந்து இங்கே பரதநாட்டியம் சொல்லி தரீங்களா பேனர் எல்லாம் வச்சிருக்கீங்க என்று கேட்க விஜயா ஆமாமா நான் தான் பரதநாட்டிய டீச்சர் என்று சொல்கிறார். நிறைய ஏசி எல்லாம் போட்டு இருக்கீங்க என்று கேட்க வரவங்க சௌகரியமா இருக்கணும்ல என்று சொல்லி நீங்க உள்ள வந்து பாருங்க என்று அழைத்துச் செல்ல அவர் eb-யில் இருந்து வந்திருப்பதாக சொல்லி ஷாக் கொடுக்கிறார்.

இனிமே இது கமர்சியல் ஏரியா. நீங்க விளக்கமா கட்டுறத விட மூணு மடங்கு அதிகமா கரண்ட் பில் கட்டணும் என்று அதிர்ச்சி கொடுத்து விட்டு கிளம்பி செல்கிறார். இதை அடுத்து பார்வதி கரண்ட் பில் அதிகமாக கட்டணுமா என்று புலம்ப விஜயா பசங்க சேர்ந்தா போதும் நிறைய சம்பாதிக்கலாம் நான் கட்டுகிறேன் என்று சமாளிக்கிறார்.

பிறகு ஒருவர் வந்து இங்க பரதநாட்டியம் கிளாஸ் எடுக்கறீங்களா என்று கேட்க பார்வதி வேற யாராவது ஏதாவது பில்லு கட்ட சொல்ல போறாங்க என்று பயந்து கொண்டு அப்படியெல்லாம் எதுவும் எடுக்கல என்று சொல்கிறார். இதனால் மகளுடன் வந்த நபர் இங்கு கிளாஸ் எடுக்கலயாம், உன்ன வேற எங்கேயாவது சேர்த்து விடுகிறேன் என்று சொல்லி அழைத்துச் செல்ல விஜயா ஓடி வந்து கிளாஸ் எடுக்கிறோம் நான் தான் பரதநாட்டிய டீச்சர் என்று சொல்கிறார்.

ஆளாளுக்கு ஒவ்வொன்னு பேசுறீங்க இது சரியா தெரியல நாங்க நல்ல கிளாஸா பார்த்துக்கிறோம் என்று கிளம்பிச் செல்ல பார்வதி மீது விஜயா கோபம் கொள்கிறார். வீட்டுக்கு வந்து முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சாப்பிடாமல் இருக்க அண்ணாமலை என்னாச்சு என்று கேட்க கிளாஸ்ல யாருமே சேர வரல, ஒரு புழு பூச்சி கூட பரதம் கத்துக்க வரல என்று சொல்ல அதுக்கெல்லாமா நீ பரதம் கற்றுத்தர என்று கலாய்க்கிறார் அண்ணாமலை.

பிறகு முத்து வீட்டுக்கு வர விஜயாவை பார்த்து என்ன நாட்டிய சிகாமணி முகத்துல சந்தோஷமே காணோம் என்று கேட்க அண்ணாமலை உங்க அம்மாவோட கிளாஸ்ல ஒருத்தர் கூட சேரவில்லையாம் என்று சொல்கிறார். என்னப்பா 40 பேர் வாங்க 80 ஆயிரம் சம்பாதிப்பேனு பெருமையா பேசிகிட்டு இருந்தாங்க என்று கேட்க விஜயா இங்கே இருக்க யாருக்கும் பரதத்தோட அருமை தெரியல என்று சொல்கிறார்.

முத்து திரும்ப திரும்ப கலாய்க்க உனக்கு கலையை பத்தி என்ன தெரியும்? அதுல எத்தனை பாவம் இருக்கு தெரியுமா என்று கேட்க நீங்க இப்படி உட்காந்து இருக்குறது பாக்க பாவமா தான் இருக்கு என்று மீண்டும் கலாய்க்கிறார். விஜயா எல்லாத்துக்கும் மீனா தான் காரணம் என்று திட்டிவிட்டு சென்று விடுகிறார். எனக்கு ஒரு நாள் பூ விக்கலைன்னாலே கஷ்டமா இருக்கும் அத்தைக்கும் அப்படித்தானே இருக்கும் என்று மீனா வருத்தப்பட முத்து அவங்க வருத்தத்தை போக்க என்கிட்ட ஒரு வழி இருக்கு என்று சொல்கிறார்.

மறுநாள் விஜயா பார்வதி வீட்டில் காத்திருக்க காலிங் பெல் அடிக்க பார்வதி கதவை திறக்க முத்து மீனாவும் பூப்பழத் தட்டோடு நிற்கின்றனர். இதை பார்த்து விஜயா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

jothika lakshu

Recent Posts

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

2 days ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

2 days ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

2 days ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

2 days ago

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…

2 days ago

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…

2 days ago