siragadikka aasai serial episode update 18-03-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முடியை வெட்டி தூக்கி போடுற மாதிரி என் பேரை மாத்திட்டியா? இந்த பார்லரை எப்படி ஆரம்பித்தனு நியாபகம் இருக்கா? நீ பணக்கார வீட்டு பொண்ணா இருக்கலாம், இந்த விஜயா சிரிச்சி சிரிச்சி பேசுறதுனால சாதாரணமா நினைச்சிடாத, இந்த வீட்டுல விஜயா மருமகள், முதல்ல அதை மறந்துடாத என வார்னிங் கொடுக்கிறார்.
உனக்காக வட்டிக்காரன் கிட்ட பணம் கட்ட முடியாமல் அவமானப்பட்டு நின்னு இருக்கேன், அதையெல்லாம் மறந்துட்டியா என்று கேட்க ரோகினி எதையும் மறக்கல ஆன்ட்டி, சர்ப்ரைஸாக சொல்லலாம்னு தான் இருந்தேன் என்று சொல்ல விஜயா இது சர்ப்ரைஸ் இல்ல, ஷாக் என அதட்டுகிறார். ரோகினி இப்போ எதுக்கு ஆண்ட்டி கத்துறீங்க, அதான் நான் என் அப்பா கிட்ட இருந்து பணத்தை வாங்கி கொடுத்துட்டேன்ல என சொல்ல விஜயா என்னை குரலை ஒசத்துற, இதுவரைக்கும் உங்க அப்பா உன்னை பார்க்க வரல, இதுவே வேற யாராவது இருந்தா சும்மா விட்டு இருப்பாங்களா என கேள்வி கேட்டு ஆஃப் ஆக்குகிறார்.
நீ நான் பார்த்து கூட்டி வந்த மருமகள், மனோஜ்க்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு அதனால் தான் உன்னை விட்டு கொடுக்காமல் பேசுன, வேற ஏதாவது எனக்கு தெரியாமல் மறைச்ச வேற விஜயாவை பார்ப்ப என சொல்லி அனுப்ப ரோகினி என்ன பத்தி மொத்த விஷயமும் தெரிஞ்சா என்ன பண்ணுவாங்களோ என்ற பயத்துடன் வெளியே வருகிறார்.
அடுத்து செல்வம் முத்துவை அழைத்து வந்து என் நண்பன் கார் வாங்க போறான், கார் எப்படி இருக்கு, கண்டிஷன் நல்லா இருக்கா வாங்கலாமா என கேட்க முத்து காரை பார்த்து சூப்பரா இருக்கு என சொல்கிறார். செல்வம் ஓட்டி பார்க்க சொல்ல முத்து ஓட்டி பார்த்து புது கார் மாதிரியே இருக்கு, நான் வாங்கணும்னு நினைச்ச முடியல உன் நண்பனை எப்படியாவது வாங்கிட சொல்லு என சொல்லி முத்து அங்கிருந்து கிளம்புகிறார். இதையெல்லாம் மறைந்திருந்து பார்த்த மீனா சந்தோஷம் அடைகிறார்.
பிறகு மீனா செல்வத்திடம் நாளைக்கு நான் சொல்ற இடத்துக்கு காரை எடுத்துட்டு வாங்க என்று சொல்லி கிளம்பி செல்கிறார். மறுநாள் மீனா முத்துவை அவசரமாக வர சொல்லி கோவிலுக்கு போகணும் என கூப்பிட முத்து நீ மட்டும் போயிட்டு வா என்று சொல்ல வற்புறுத்தி கூட்டி செல்கிறார்.
அங்கு முத்து பார்த்த அதே காருடன் செல்வம் நிற்க நீ என்னடா இங்க இருக்க உன் பிரண்ட் காரை வாங்கிட்டானா என்று கேட்க ஆமாம் பா என்று சொல்கிறார். ஐயர் வந்து கார் வாங்கிய விஷயத்தை ஒளிவு மறைவாக சொல்ல முத்து புரியாமல் நிற்கிறார். சீதா மாலை போட முத்து நீ என்ன இந்த காரைக்கு மாலை போடுற என கேட்க செல்வம் மாலை ஆர்டர் உங்களுக்கு தான் வந்துச்சா என கேட்டு சமாளிக்கிறார்.
ஐயர் பூஜை போட்டு சாவியை மீனாவிடம் கொடுக்க முத்து அந்த சாவியை எதுக்கு உன்கிட்ட கொடுக்கிறார் என முத்து கேட்க மீனாவின் அம்மா அது உங்க கார் தான் மாப்ள என உண்மையை உடைக்க செல்வம் மீனா நடந்த விஷயத்தை சொல்கிறார்கள்.
முத்து அப்படியே மிரண்டு நிற்கிறார். சீதா மாலை கட்டுண பணத்தை வைத்து கார் வாங்கியதாக சொல்ல முத்து மொத்த பணத்தையும் கொடுத்துட்டியா என கேட்க ஆமாம், நீங்க ஆட்டோ ஓட்டுறதை பார்க்க எங்களுக்கு கஷ்டமா இருக்கு என சொல்லி காரை எடுக்க சொல்லி முத்துவை உள்ளே உட்கார வைக்கிறார்.
பிறகு மீனாவும் உள்ளே உட்கார்ந்து முத்துவின் கையை பிடித்து கொள்ள முத்து முழு மகிழ்ச்சியுடன் காரை எடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Alaakaa Loova Lyrical Video (Tamil) | OM | Dhanush | Mammootty | Sai Pallavi |…
Kaadana Kaadu Lyrical Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika | Riythvika…
Mittai Mazhai Lyrical Video | AOT | Dulquer Salmaan | Satvika | GV Prakash |…
Street Fighter Official Tamil Trailer | In Cinemas October 16
Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…
Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash