முத்து மீது கோபத்தில் மீனா. அண்ணாமலை கொடுத்த ஷாக். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா என்ன நடந்துச்சு உண்மைய சொல்லு என்று சத்யாவிடம் கேட்க ஒரு கட்டத்தில் சத்தியா ஆமாம் நான் சிட்டி கிட்ட தான் வேலை செய்கிறேன் அவன் உன்ன மாதிரி இல்ல இப்போ நேர்மையா இருக்கான் கணக்கு வழக்கெல்லாம் நான் தான் கம்ப்யூட்டர்ல என்ட்ரி பண்றேன். வட்டி வாங்க போகும்போது இப்படி நடந்தது என்று சொல்கிறார்.

முத்து மாமா பிரண்டு செல்வாவும் கடன் வாங்கி இருக்காரு ரொம்ப நாளா வட்டி கட்டல, அதை கேட்க போகும் போது தான் இப்படி ஒரு பிரச்சனை வந்தது. மாமா தான் அப்போ என்னை புடிச்சு அடிச்சு கையை உடைத்து விட்டார். வேணா வேணானு நான் எவ்வளவு கத்தி கெஞ்சியும் விடல், குடிச்சி இருந்தார் போல. ஸ்மெல் வேற வந்துச்சு என்று சொல்ல மீனா உட்பட எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

சீதா அவர் திருந்தவே மாட்டாரு அவர் எல்லாம் என்ன மனுஷன் என்று சொல்ல மீனாவின் அம்மா அவரை புள்ள மாதிரி நினைச்சேன் ஆனா அவர் என்ன வேலை பண்ணி இருக்காரு என்று கலங்குகிறார். மீனா கோபமாக அங்கிருந்து கிளம்பி செட்டுக்கு வர முத்து கார் பின்னாடி உட்கார்ந்திருக்க செல்வம் அவன் வெளியே போய் இருக்கான் வந்ததும் வீட்டுக்கு வர சொல்றேன் என்று சமாளிக்கிறார்.

நீங்க கூட என்கிட்ட உண்மையை சொல்லல எதுக்காக இப்படி பண்ணீங்க சின்ன பையன் சத்யா அவன எதுக்கு அடிச்சிங்க என்று கேட்க முத்து வெளிய வந்துவிட வெளியே போய் இருக்கிறதா சொன்னிங்க என்று கேட்க செல்வம் நீ வீட்டுக்கு போ மா எல்லாத்தையும் அப்புறம் பேசிக்கலாம் என்று சொல்கிறார்.

ஆனால் முத்து என்ன உனக்கு பிரச்சனை என்று கேட்க எதுக்கு என் தம்பியை பிடிச்சி அடிச்சீங்க என்று மீனா கோபப்படுகிறார். செல்வம் உண்மையை சொல்ல வர முத்து தடுத்து நிறுத்த மீனா நான் என் புருஷன் கிட்ட பேசிகிட்டு இருக்கேன் யாரும் இடையில் வர வேண்டாம் என்று செல்வத்தை அமைதியாக இருக்க சொல்ல முத்து அதான் சொல்லிட்டாளா நீ தூரமா என்று அனுப்பி விடுகிறார்.

மீனா கேட்கும் கேள்விகளுக்கு முத்து திமிராக பதில் சொல்வது போலவே பேச இனிமே உங்ககிட்ட பேசவே முடியாது. திருத்தவே முடியாது என்று கோபமாக அங்கிருந்து கிளம்பி வந்து வீட்டில் நடந்த விஷயங்களை சொல்ல அண்ணாமலை அதிர்ச்சியோடு இருக்கிறார்.

முத்து வீட்டுக்கு வர அண்ணாமலை ஏன் இப்படி பண்ண என்று கேள்வி கேட்க அவன் பண்ண வேலைக்கு என முத்து உண்மையை சொல்ல வந்து பிறகு அதை சொல்லாமல் மூடி மறைத்து விடுகிறார். முத்துவை ஆளாளுக்கு கேள்வி கேட்க எல்லாரையும் நிறுத்தி கண்டபடி பேசி அடக்க அண்ணாமலை நான் கேள்வி கேட்கலாம்ல என்று அதட்டுகிறார். முத்து அவன் பண்ண வேலைக்கு ஒரு கையோடு விட்டேன் என்று சந்தோஷப்பட சொல்லுங்க என்று சொல்ல மீனா வேண்டாம் மாமா அவரை எதுவும் கேட்காதீங்க. அவரை யாரும் எதுவும் கேள்வி கேட்கக்கூடாது என்று கோபப்படுகிறார். பணம் காசு இல்லாதவங்க என்ன பண்ணாலும் அமைதியாக தான் இருக்கணும் என்று சொல்கிறார்.

பிறகு அண்ணாமலை என்ன இருந்தாலும் நீ பண்ணது தப்பு சத்யா கிட்ட மன்னிப்பு கேளு என்று சொல்ல முத்து முடியாது என்று மறுக்கிறார். முத்து கெட்டவனாவே இருந்துட்டு போறேன். எப்பயும் மத்தவங்க செஞ்ச தப்புக்கு நான் தான் தண்டனை அனுபவிக்கணும் அப்படியே இருக்கட்டும் என்று சொல்லி உள்ளே செல்கிறார். இதனால் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.

பிறகு மீனாவிடம் வந்து எதுக்கு நீ அப்பாகிட்ட வந்து சொன்ன எதுவாக இருந்தாலும் நேருக்கு நேரா என்கிட்ட பேச வேண்டியதுதானே என்று சொல்ல மீனா யார் கிட்டயாவது சொல்லி அழ வேண்டும் அல்லவா என்று கூறுகிறார். அதுக்கு அப்பா கிட்ட சொல்லுவியா என்று முத்து கேட்க மீனா ஷாக் ஆகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

siragadikka aasai serial episode update 17-02-24
jothika lakshu

Recent Posts

இரண்டாவது திருமணம் குறித்து பரவும் வதந்தி.. பதிலடி கொடுத்த நடிகை மீனா..!

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…

14 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

14 hours ago

Second Case of Seetharam Trailer [Tamil]

https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH

14 hours ago

விஜய் ரசிகர்களுக்கு ‘நல்ல’ செய்தி – விரைவில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்..?

விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…

15 hours ago

கமல் வழியில் கலக்கல்…அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு!

கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…

16 hours ago

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்!

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…

16 hours ago