தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியலின் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை முத்துவை கூட்டிட்டு வரச் சொல்லி மீனாவை அழைத்திருந்த நிலையில் மேலே வந்த மீனாவிடம் முத்து ரவியும் மனோஜூம் சேர்ந்து அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்ததற்கு நான் தான் காரணம் என சொன்னதை சொல்லி வருத்தமும் கோபமும் அடைகிறார்.
மீனா சொல்றவங்க ஏதாவது சொல்லட்டும் உங்கள பத்தி எல்லாருக்கும் நல்லாவே தெரியும் என்று கண்ணதாசன் பாடலை சொல்லி முத்துவை ஆறுதல் படுத்தி சரி வாங்க கீழ உங்களை ஆசீர்வாதம் பண்ண மாமா கூப்பிட்டார் என்று சொல்ல வர மறுக்கும் முத்துவை மாமாவோட வார்த்தைக்கு மரியாதை கொடுப்பீங்களா கொடுக்க மாட்டீங்களா என்று சொல்லி அழைத்துச் செல்கிறார்.
அண்ணாமலை ஆசீர்வாதம் பண்ண சொல்ல இவங்கள எதுக்கு ஆசீர்வாதம் பண்ணனும் வாயில வரது தான் சொல்லணும் என்று சொல்ல விஜயா பாத்தீங்களா இதுக்கு தான் இவன் வேண்டான்னு சொன்னேன் என்று சொல்ல முத்து நானும் போறேன் என்று கிளம்ப அண்ணாமலை தடுத்து நிறுத்தி பழசை எல்லாம் மறந்துட்டு ஆசீர்வாதம் பண்ணி என சொல்கிறார்.
எல்லோரும் ஆசிர்வாதம் செய்து முடித்த பிறகு அண்ணாமலை மூன்று மருமகளையும் கூப்பிட்டு நீங்க மூணு பேரும் எனக்கு மகள்கள் மாதிரி தான் இந்த குடும்பம் என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும் அதுக்கு நீங்க மூணு பேரும் ஒற்றுமையா இருக்கணும் என அறிவுரை சொல்ல மீனா நீங்க பெருமைப்படுற மாதிரி நடந்து கொள்வோம் என்று கூறுகிறார். ரோகினி எனக்கு இந்த மாதிரி பெரிய குடும்பத்தில் வாழனும்னு தான் ஆசைப்பட்டேன் அது இன்னைக்கு நடந்திருக்கு என சொல்ல சுருதி கைதட்டி சூப்பர் அங்கிள் என பாராட்டுகிறார். எனக்கு கண்ணெல்லாம் கலங்கிடுச்சு என அவரை கட்டிப்பிடிக்க எல்லோரும் ஷாக் ஆகின்றனர்.
பிறகு அவ்வளவு தானே? டைம் ஆச்சு வா ரவி என ரவியை ரூமுக்கு அழைத்துச் சென்று விட விஜயா மிரண்டு நிற்கிறார். ரூமில் ரவி ஸ்ருதிக்கு அறிவுரை சொல்ல சுருதி இது ஃபர்ஸ்ட் நைட் ரூமா இல்ல பள்ளிக்கூடமா என்று கேட்க ரவி மூடை மாற்றிக் கொள்கிறார்.
இருவரும் ரொமான்ஸ் ஸ்டார்ட் செய்ய மீனா கதவைத் தட்டி பாலைக் கொடுத்த ஸ்ருதி எங்களுக்கு வேண்டாம் வயிறு ஃபுல்லா இருக்கு நீங்களே குடிங்க என்று சொல்ல அதெல்லாம் ஒரு சம்பிரதாயம் என கொடுக்கிறார். பிறகு நீங்க ரெண்டு பேரும் நல்லபடியா வாழ்ந்து காட்டணும் என அறிவுரை சொல்ல ஸ்ருதி மத்தவங்களுக்காக வாழ கூடாது எங்களுடைய சந்தோஷத்துக்காக வாழனும் என்று சொல்லி ரூமுக்குள் சென்று விடுகிறார். ரவி அவ மனசுல பட்டதை பேசிட்டா தப்பா எடுத்துக்காதீங்க என்று சொல்ல நீங்கதான் கொஞ்சம் விட்டு கொடுத்து போகணும் என்று சொல்லிவிட்டு மீனா அங்கிருந்து மொட்டை மாடிக்கு வருகிறார்.
மொட்டை மாடியில் முத்து அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்தது தான் காரணம் என எல்லோரும் சொன்னதை நினைத்து புலம்பிக் கொண்டிருக்க அங்கு வரும் மீனாவிடமும் இதைப்பற்றி பேச ஒரு கட்டத்தில் மீனா நீங்க தான் காரணம் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…