siragadikka aasai serial episode update 13-02-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா நாளைக்கு காசு போட்டு கொடுக்க அந்த நேரம் பார்த்து பாட்டி போன் பண்ண நீயே எடுத்து பேசுனா என்று சொல்கிறார்.
பிறகு மீனா பாட்டியிடம் பேசும்போது அவர் முத்து கல்யாண போட்டோ அனுப்பிச்சான் ரொம்ப சந்தோஷமா இருக்கு அவனை நீ முழுசா மாத்திட்ட இனிமே அவன் ராஜா மாதிரி வருவான். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு என்று சொல்கிறார்.
அதன் பிறகு அண்ணாமலை குறித்து விசாரிக்க மீனா மாமாவுக்கு ஒரு சின்ன பிரச்சனை என்று சொல்ல பாட்டி என்ன ஆச்சு என்று பதற அண்ணாமலை எதுவும் சொல்லாதே என்று சைகை காட்டியதும் மீனா எதுவுமே இல்ல பாட்டி நல்லா இருக்காரு என்று சொல்லி சமாளித்து விடுகிறார்.
பிறகு முத்து வீட்டுக்கு வர முத்துவும் போனை வாங்கி பாட்டியிடம் பேசும்போது அப்பாவை தான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு வந்தோம் என்று சொல்ல ஏன்டா என்ன ஆச்சு சொல்லு என்று சொல்ல அண்ணாமலை கோபப்பட முத்து செக்கப்புக்காக கூட்டிட்டு போயிருந்தோம் எந்த பிரச்சினையும் இல்லைன்னு சொல்லிட்டாங்க என்று சமாளித்து விடுகிறார். பிறகு பாட்டி போனை வைத்ததும் அண்ணாமலை ஏன்டா வாய் வைத்துக்கொண்டு இரண்டு பேரும் சும்மா இருக்க மாட்டீங்களா என்று திட்டி விடுகிறார்.
பிறகு கல்யாண போட்டோவை பெருசா பிரின்ட் போட்டு கொண்டு வர சொல்கிறார். இதை கேட்ட விஜய் ஏங்க அந்த போட்டோ எல்லாம் இருக்கிற போட்டோ எல்லாம் போதாதா எங்க இடம் இருக்கு என்று சொல்ல அண்ணாமலை ஊர்ல எல்லாரும் குடும்பமா சந்தோஷமா இருந்தோம் அந்த போட்டோ மாட்டுறதுல உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்க அந்த போட்டோ மட்டும் இல்ல அதுல நானும் மீனாவும் இருக்கிறது தான் பிரச்சனை என்று முத்து சொல்கிறார்.
பிறகு முத்து போட்டோவை பிரிண்ட் போட கடைக்கு வர அவர் போட்டோவில் விஜயா இருப்பதை பார்த்ததும் முத்துவுக்கு இந்த அம்மாகிட்ட இருந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை எவனோ ரெண்டு பேர் கொள்ளை அடிச்சுட்டு போய்ட்டானுங்க அதோட ஃபுட்டேஜ் இருப்பதாக சொல்லி காட்ட அது சத்யா என தெரிய வருகிறது.
உடனே கோபமாக வீட்டுக்கு வரும் முத்து மீனாவின் அம்மாவும் சீதாவும் பேசுவதை கேட்டு சத்தியா பற்றிய உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறார். நாங்க உங்கள இந்த வீட்டு மாப்பிள்ளையா பார்க்கல மூத்த மகனாக தான் பார்க்கிறோம் என்று மீனாவின் அம்மா சொல்கிறார். மேலும் முத்து சத்யா எங்கே என்று கேட்க அவன் காலேஜ் போய் இருக்கான் என்று சொல்கின்றனர்.
அவனும் முன்ன மாதிரி எல்லாம் இல்ல இப்ப ரொம்ப நல்ல பையனா காலேஜ் போறது வேலைக்கு போறதுன்னு இருக்கான் இப்ப கூட நீ எதுக்கு பூ கட்டுற வேலைக்கு எல்லாம் போற இந்த குடும்பத்தை நான் பாத்துக்கிறேன்னு அக்கறையா பேசுறான் என்று சந்தோஷப்பட முத்து எதுவும் சொல்லாமல் எழுந்து வந்து விடுகிறார்.
பிறகு சத்யாவின் காலேஜ் போய் விசாரிக்க அவன் ரெண்டு மூணு நாளா காலேஜ் வரவில்லை என்பது தெரிய வருகிறது. முத்து அங்கிருந்து சென்னைக்கு கிளம்பி வர சிட்டி இங்கே செல்வத்திடம் வந்து பணம் கொடுக்காததால் கார் எடுத்து போவதாக சொல்ல செல்வம் கார் எடுத்துட்டு போய்ட்டா நான் எப்படிப்பா பணம் கட்டுவேன் என்று கேட்க கார் எடுக்காமல் உன் பொண்டாட்டியையா எடுத்துட்டு போக முடியும் என்று சொல்ல இருவருக்கும் கை கலப்பாகிறது.
செல்வம் சிட்டியை அடித்ததால் சத்யா கோபப்பட்டு செல்வத்தை அடிக்க முத்து அங்க வந்துவிட சிட்டியை போட்டு அடிக்க சத்தியா முத்து சட்டையை பிடித்து அவன் என் பிரண்ட், அடிக்காத அடிச்சனா மாமான்னு கூட பார்க்க மாட்டேன் என்று கோபப்படுகிறான். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Don’t Trouble the Trouble - Teaser (Tamil) | Fahadh Faasil | Ssara | Shashank Yeleti
Train Official Teaser | Vijay Sethupathi | Mysskin | Shruti Haasan | Kalaippuli S Thanu
Anbe Diana Official Trailer | Pari Elavazhagan, Ramya Ranganathan, Roja | Bharath Sankar
Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju
பள்ளிப் பருவ காதல், கல்லூரி நினைவுகள், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'இதயம் முரளி'. திருச்சியில்…
1970-களின் தமிழக கிராமப்புற பின்னணியில் நகரும் 'லட்சுமி காந்தன் கொலை வழக்கு', மரண தண்டனை, நீதி மற்றும் மனிதநேயம் குறித்து…