மீனா முத்துவிற்கு கிடைத்த கிப்ட், பல்பு வாங்கிய விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாட்டி பேசிய வீடியோவை பார்த்து எல்லோரும் ரொம்ப அழகாகவும் சரியாகவும் பேசினீங்க என்று சொல்கின்றனர். மீனா ரொம்ப நல்ல விஷயம் பண்ணி இருக்கா என்று அண்ணாமலை பாராட்ட மனோஜ், விஜயா ஆகியோர் கடுப்பாகின்றனர்.

அதைத் தொடர்ந்து தோழிகள் கேக் ரொம்ப நல்லா இருக்கு என்று சொன்னதும் பாட்டி என் பேரன் ரவி எனக்காக செஞ்சான்.. அந்த கேக் பேர் கூட என்னுடையது தான் என்று சொல்லி சந்தோஷப்பட மனோஜ் பொறுமையை இழந்து உங்களுடைய ஸ்பெஷல் கிஃப்ட் யாருக்கு என்று கேட்கிறார்.

பாட்டி சொல்றேன் சொல்றேன் சொல்றேன் என்று விஜயாவை கூப்பிட்டு போயிட்டு என்னுடைய பையை எடுத்துட்டு வா என்று சொன்னது விஜயாவும் கொண்டு வந்து கொடுக்க அதிலிருந்து பரம்பரை நகை ஒன்றை வெளியில எடுத்து நாலு தலைமுறையா இந்த நகை நம்ம கிட்ட இருக்கு.. இது வெறும் நகை இல்ல இந்த குடும்பத்தோட கௌரவம் என்று சொல்கிறார்.

இத சரியானவங்க கிட்ட ஒப்படைக்கனும்னு தான் இருந்தேன் என்று சொல்லி விஜயா எனக்காக டிவி வாங்கி கொடுத்தா அது எனக்கு ரொம்ப சந்தோஷம்.. ஊர்ல எல்லார்கிட்டயும் என் மருமகள் வாங்கி கொடுத்தானு பெருமையா சொல்லுவேன் அவளுக்கு கண்டிப்பா நான் ஏதாவது செய்வேன் என்று பல்பு கொடுக்கிறார்.

இதை அடுத்து மனோஜின் நவரத்தின மாலை பற்றி பேச மனோஜ் அப்போ அந்த ஸ்பெஷல் கிப்ட் எனக்குதானா என்று ஆர்வத்தோடு கேட்க அண்ணாமலை பொறுமையா இருடா என்று அடக்குகிறார்.

இறுதியாக நீங்க கொடுத்த கிப்ட் எல்லாமே எனக்கு மனசுக்கு நிறைவா இருந்தது ஆனால் முத்து, மீனா எனக்கு உணர்வுபூர்வமான கிப்ட் கொடுத்திருக்காங்க.. மீனா என்னுடைய நினைவுகளை அடுத்த தலைமுறைக்காக அப்படியே படம் பிடிச்சிருக்கா.. முத்து என்னுடைய 30 வருஷ ஏக்கத்தை தீர்த்து வச்சிருக்கான்.‌ பணம் காசு விட உறங்கும் நட்பும் தான் ரொம்ப முக்கியம். அது எனக்கு திருப்பி கொடுத்த முத்து, மீனாவுக்கு தான் இந்த ஸ்பெஷல் கிப்ட் என்று சொல்ல விஜயா ஷாக் ஆகிறார்.

பிறகு இந்த நகையை தினமும் பூஜை அறையில் வைத்து பூஜை பண்ணனும் வருஷத்துக்கு ஒருமுறை குல தெய்வம் கோயிலுக்கு கொண்டு போய் வச்சு பூஜை பண்ணி எடுத்துட்டு வரணும்.. எக்காரணத்தைக் கொண்டும் இந்த நகையை இந்த குடும்பத்தை விட்டு வெளியே போகக்கூடாது என நிபந்தனைகளோடு நகை கொடுக்க மீனா முத்து நிச்சயமா இது நகையை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வோம் என்று வாக்கு கொடுக்கின்றனர்.

பிறகு மீனா ரூமில் கையில் நகையோடு நின்று கொண்டிருக்க அங்கு வந்த முத்து பூஜை பண்ணிட்டு எடுத்துட்டு வந்து லாக்கர்ல வச்சுடு இந்த மனோஜை நம்பி எந்த நகையையும் வெளிய வைக்க முடியாது என்று சொல்கிறார்.

மறுநாள் பாட்டி ஊருக்கு கிளம்பியதும் வீட்டுக்கு வந்த முத்து கதவை சாத்து தாழ்ப்பாள் போட்டு எல்லாரையும் கூட்டி கவரிங் நகையை கொண்டு வந்து மேஜையின் மீது கொட்டி இதையெல்லாம் கொடுத்து பாட்டிக்கு ஒரு செயின் வாங்கலாம்னு தான் கடைக்கு போய் இருந்தும் ஆனா இது எல்லாமே கவரிங் நகைன்னு சொல்லிட்டாங்க என்று சொன்னதும் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அண்ணாமலை என்னது கவரிங் நகையா என்று கேட்க ஆமாம்பா இந்த நகை எப்படி மாறுச்சு எனக்கு இப்போ தெரிஞ்சாகணும் என்று சொல்ல அண்ணாமலை விஜயா நகை உன்னிடம் தானே இருந்தது என்று கேள்வி கேட்க என்ன கேட்டா எனக்கு எப்படிங்க தெரியும் அன்னைக்கு கழட்டி கொடுத்ததை பீரோவில் வைத்து திருப்பி கேட்டதும் எடுத்துட்டு வந்து கொடுத்துட்டேன்.. அப்ப இது எல்லாம் கவரிங் நகையா? தங்கம் இல்லையா என்று ஒன்றும் தெரியாதது போல கேள்வி கேட்கும் விஜயா கொடுக்கும்போது கவரிங் நகை கொடுத்தார்களோ என்னவோ என்று பழியை முத்து, மீனா பக்கம் திருப்பி விடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

siragadikka aasai serial episode update 09-07-24,
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago