siragadikka aasai serial episode update 09-01-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த மனோஜ் இன்னைக்கு விஜய் சார் எங்க ஷோ ரூம்க்கு கார் வாங்க வந்திருந்தார் நான் தான் அவருக்கு எக்ஸ்பிளைன் பண்ணேன். அவருக்கு என்ன ரொம்ப புடிச்சு போச்சு அதனால ஒன்னு இல்ல ரெண்டு கார் வாங்கிட்டாரு. ஓனரும் செம ஹாப்பி எனக்கு அடுத்த மாசம் டபுள் சம்பளம் என அளந்து விடுகிறார்.
விஜயா போதுண்டா என்று அடக்க முயற்சி செய்ய மனோஜ் விடாமல் பேசிக் கொண்டே இருக்கிறார். அடுத்த வாரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வராரு அவருக்கும் நான் தான் எக்ஸ்பிளைன் பண்ண போறேன் என்று ஓவர் பில்டப் குடுத்து பேச உனக்கு ஒரு குறும்படம் இருக்கு என்று சொல்லி முத்து வீடியோவை போட இது டி நகர் பார்க்ல என்று சொல்ல முத்து கரெக்டா சொல்லிட்ட நீ வேலை பாக்குற இடம் அதுதானே என்று வீடியோவை ஓட விடுகிறார்.
வீடியோவை பார்த்த மனோஜ் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். மனோஜ் விஜயாவை பார்க்க முத்து அம்மாவுக்கு ஏற்கனவே விஷயம் தெரியும் போலையே என்று கோர்த்து விட அண்ணாமலை உனக்கு அவனுக்கு வேலை இல்லை என்பது தெரியுமா என்று அதட்டி கேட்க விஜயா தெரியும் என்று சொல்ல ரோகிணி உடைந்து போகிறார்.
வெட்டி முண்டம், தண்டசோறு ஒரு ரூபா சம்பாதிக்க துப்பு இல்ல பார்க்ல போய் தூங்கிட்டு வர உனக்கு பூ கடை வச்சிருக்கிறது கௌரவ கொறச்சலா என முத்து அவமானப்படுத்துகிறார். அடுத்து ரவி அன்னைக்கு ஷோரூம் வந்த போது உனக்கு வேலை இல்லையா என்று கேட்கிறார். அதனாலதான் எங்கள கார் வாங்க விடாமல் பண்ணீங்களா என்று சுருதி கேள்வி கேட்கிறார். நல்ல வேலை உங்கள நம்பி அங்கு வந்து இருந்தா நாங்க தான் இன்சல்ட் ஆகி நின்னு இருக்கணும் என்று கூறுகிறார்.
ரோகினி கண் கலங்கி நிற்க மீனா இந்த நேரத்துல சொல்லிக் காட்டுகிறேன் என்று நினைக்காதீங்க அன்னைக்கு அவருடைய துணி துவைக்க கொடுத்து என்ன சொன்னீங்க அவர் பெரிய பெரிய ஆபீஸர் எல்லாம் பார்க்கப் போவாரு நல்லா சுத்தமாக துவைத்து அயன் பண்ணி போட்டுட்டு போனோம் என்று சொன்னீர்கள், பார்க்ல தூங்குறதுக்கு இதெல்லாம் தேவையா என்ன? என்று மூக்கை உடைக்கிறார். அதோடு என் புருஷனாலும் கார் ஓட்டுகிறார் உங்க புருஷனுக்கு வேலையே கிடையாது என வச்சு செய்கிறார்.
அதன் பிறகு முத்து அன்னைக்கு என்ன என்ன சொன்ன பார்க்கு வேலைக்கு போயிடு உனக்கு அது தான் சரியான வேலை என்று சொன்னல இன்னைக்கு நீ என்ன வேலை பண்ற பார்க்ல கூட்டி பெருக்கறியா? அது கூட பண்ணலாம் ஒரு அசிங்கமும் கிடையாது ஆனால் உன்னை மாதிரி தண்டசோறா இருக்க கூடாது என திட்டுகிறார்.
என்ன பார்லர் அம்மா இப்ப என்ன சொல்ல போற இவனை நம்பாதே இவன் ஒரு பிராடு என்று சொன்னேனே கேட்டியா? இப்ப என்ன சொல்ல போற என்று கேள்வி கேட்க மனோஜ் ரோகினி இடம் மன்னிப்பு கேட்க வர ரோகிணி ரூமுக்குள் அழுது கொண்டே ஓடிவிடுகிறார். அண்ணாமலை பொய் சொல்றத எப்ப தான் நிறுத்த போற? எங்களுக்கு பழகிப்போச்சு ஆனா உன்னை நம்பி வந்த பொண்ணு இப்படி ஏமாற்றலாமா போய் மன்னிப்பு கேள் உன்ன மன்னிக்க வேண்டியது அவதான் என்று அனுப்பி விடுகிறார் அண்ணாமலை.
எல்லோரும் கலைந்து போக விஜயா சீக்கிரம் ஒரு வேலைக்கு போடான்னு சொன்னேன் கேட்டியா? இப்ப பாரு போய் ரோகிணியை சமாதானப்படுத்து என அனுப்பி வைக்கிறார். ரூமுக்குள் வந்த மனோஜ் ரோகிணியிடம் பேச போக ரோகிணி என்ன தொடாத என்று கோபப்படுகிறார்.
உனக்கு வேலை இல்லையென்றது கூட எனக்கு பிரச்சனை இல்ல அத நீ என்கிட்ட சொல்லி இருக்கலாம் உங்க அம்மா கிட்ட சொல்லி இருக்கேன் என்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணல என்று கேட்க முத்து அவமானப்படுத்துவான், அதனால் தான் நான் சொல்லல என்று கூறுகிறார். இப்ப மட்டும் என்ன நடந்துச்சு நான் அவமானப்பட்டு தானே நிக்கிறேன் என்று சொல்கிறார். நான் நிறைய படித்ததனால யாரும் வேலை தர மாட்டாங்க என்று சொல்ல சிம்பதி கிரியேட் பண்ணாத என்று திட்டி ஐ ஹேட் யூ என வெளியே துரத்துகிறார்.
அடுத்ததாக ரோகினி வித்யாவிடம் வந்து நடந்ததை சொல்லி கண்கலங்கி உட்கார அன்னைக்கு பார்க்ல பார்க்கும்போது சந்தேகம் வந்தது ஆனால் நீ தான் மனோஜ் சொல்றத முழுசா நம்பிட்டு வந்துட்ட, சரி விடு அவர் சொன்னது என்னவோ சின்ன பொய்தான் நீ சொன்ன விஷயம் மட்டும் அவருக்கு தெரிஞ்சா அவர் எப்படி ரியாக்ட் பண்ணுவார் என்று யோசித்து பாரு என்று சொல்ல நான் பொய் சொன்னது அவரோட சந்தோஷமா சேர்ந்து வாழணும்ன்றதுக்காகத்தான் ஆனா அவர் என்கிட்டயே உண்மைய சொல்லாம மறைச்சி இருக்காரு. ஏற்கனவே நான் நிறைய ஏமாந்துட்டேன் இப்போ இந்த வாழ்க்கையும் ஏமாத்திடுச்சு. உண்மை தெரிஞ்சா கூட தெரிஞ்சுட்டு போகட்டும். இனிமே வாழ்ந்து என்ன பண்ணப் போறேன் என்று விரக்தியோடு பேச வித்யா நான் காபி போட்டு கொண்டு வரேன் என்ன பண்ணலாம்னு முடிவு செய்யலாம் என்று ரூமுக்குள் செல்ல ரோகிணி திடீரென அழுகையை நிறுத்தி கண்களை துடைத்துக் கொண்டு வெளியே கிளம்புகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
காந்தாரா 2 படத்தின் 7 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
கம்ருதீன் மீது சகப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
மனோஜை ரோகிணி திட்டி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…