மீனா கேட்ட கேள்வி,கோபத்தில் ரோகினி,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ரோகிணி ஒவ்வொருத்தராக வீட்டை விட்டு அனுப்பிய நிலையில் முத்து கிளம்புவார் என்று எதிர்பார்த்து இருக்க சவாரி ஒன்று கிடைத்து முத்து வெளியே கிளம்ப ரோகிணி சந்தோஷப்படுகிறார். திடீரென அந்த சவாரியும் கேன்சல் ஆகி விட முத்து வீட்டுக்கு வந்து விடுகிறார். இதனால் ரோகிணியை முத்துவை எப்படி வெளியே துரத்துவது என அப்செட் ஆகிறார்.

இதை அடுத்து முத்து கிருஷ் உடன் விளையாடிக் கொண்டிருக்க ரோகிணி வித்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொன்ன நான் என் பிரண்ட்டை போன் பண்ணி கார் புக் பண்ண சொல்றேன் என்று ஏற்பாடு செய்ய முத்துவுக்கும் போன் வர அவரும் கிளம்பி விடுகிறார்.

அதன் பிறகு எல்லோரும் வெளியே கிளம்பியது கிரிஷ்ஷை தட்டி தூங்க வைத்து விட்டு அம்மாவிடம் வந்து எதுக்கு நீ இங்க வந்த என்று சத்தம் போடுகிறார். சென்னைக்கு எதுக்கு வந்த அங்கே அங்கேயே ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டியதுதானே என்று கோபப்படுகிறார். என்னை நிம்மதியாவே வாழ விட மாட்டியா நீயே என்னை அழைத்துப் பிடிச்சு கொன்னுடு என்று ரோகிணி ஆவேசப்பட அவருடைய அம்மா நானா டி உன் வாழ்க்கையை கெடுக்க பார்க்கிறேன் என்று கோபப்படுகிறார். நீ பெத்த புள்ளையை நான் வளர்த்துக்கிட்டு இருக்கேன்.. நாளைக்கு எனக்கு ஏதாவது ஒன்னுனா அவன் நலமே நினைச்சு தினம் தினம் பயந்துட்டு இருக்கேன். அவன கூட்டிட்டு போயிட்டு எங்கேயாச்சும் ஆசிரமத்தில் சேர்த்துவிடுங்கள் என்று பயமா இருக்கு என திட்டுகிறார்.

ரோகினி ஏன் மா இப்படி எல்லாம் பேசுற எனக்கு மட்டும் கிரிஷ் மேல அக்கறை இல்லையா? அவ நான் பெத்த பையன் என்று சொல்ல அதை க்ரிஷ் கேட்டு விடுகிறான். பாட்டி எங்க இருக்கீங்க அத்தை நீ தான் என்னுடைய அம்மாவா என்று கிட்ட நெருங்க க்ரிஷ் தவறி கீழே விழ போகும்போது ரோகிணி தாங்கி பிடித்து நான் தான் உன் அம்மா என்று கட்டிப்பிடித்து கண் கலங்குகிறார்.

இதையடுத்து மறுபக்கம் வீட்டுக்கு வந்த மீனாவை உட்கார வைத்து வித்யா நேரத்தை கழிக்க முயற்சி செய்கிறார். மீனா ரோகிணி பற்றி அடுத்தடுத்து கேள்வி கேட்க வித்யா என்ன சொல்வது ரோகிணி என்ன சொல்லி இருக்கான்னு தெரியலையே என்று சமாளிக்க முடியாமல் தவிக்கிறார். சின்ன வயசுல இருந்து நானும் ரோகிணியும் ப்ரெண்ட் என்று சொல்லி விடுகிறார். ரோகிணி இங்க வரும்போது எல்லாம் நாங்க ஒன்னா சேர்ந்து வெளியே போவோம் என்று சொன்னதும் மீனா அந்த போட்டோ எல்லாம் இருக்கா என்று கேட்க வித்யாவும் இருக்கு என்று சொல்ல அது எனக்கு காட்டுறீங்களா என்று கேட்டு ஷாக் கொடுக்கிறார்.

அதன் பிறகு யாரோ ஒருவர் காலிங் பெல் அடிக்க வித்யா வெளியே வந்து கதவை திறக்க மலேசியா மாமாவாக நடித்த கறிக்கடைக்காரர் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அதன் பிறகு வித்யா அவரை தனியாக அழைத்துச் சென்று இந்த ஏன்யா வந்த என்று கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் முடிவடைகிறது.

siragadikka aasai serial episode update 04-06-24
jothika lakshu

Recent Posts

மஞ்சள் பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

மஞ்சள் பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…

5 hours ago

இட்லி கடை : 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இட்லி கடை படத்தின் 7 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

13 hours ago

கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி.இவர்…

13 hours ago

சிந்தாமணி கொடுத்த ஷாக், அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…

15 hours ago

முடிவை மாற்றிய நந்தினி, சூர்யா எடுத்த முடிவு,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

15 hours ago

நான் ரிசைன் பண்ற.. போட்டியாளர்களிடம் கோபப்பட்ட VJ பார்வதி. வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…

16 hours ago