ரோகினி கொடுத்த டுவிஸ்ட், கிண்டலடித்த முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா முத்துவை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன முத்து இப்ப என்ன நாங்க வெளியே போகணும் அவ்வளவுதானே மீனா நீ போய் துணி எடுத்து வை என்று சொல்லி அண்ணாமலையும் தன்னுடன் அழைக்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

விஜயா டேய் அவர் எதுக்குடா கூப்பிடுற நீ போ என்று சொல்ல என்னால என் அப்பாவை விட்டுவிட்டு எல்லாம் போக முடியாது என்று சொல்கிறார்‌. அப்பா 30 வருஷமா ரொம்ப கஷ்டப்பட்டு தேர்ந்த இப்போ உனக்கு விடுதலை கிடைச்சிருக்கு வா நம்ப போய் சந்தோஷமா இருக்கலாம் என்று சொல்லி கூப்பிட அண்ணாமலை எழுந்து கிளம்ப ஏங்க நீங்க எங்க போறீங்க என்று விஜயா தடுக்க என் புள்ள கூப்பிட்டா நான் போய் தான் ஆகணும் என்று கேட்கிறார்.

இதுவரைக்கும் முத்துவை உன் புள்ளையா பார்த்ததே கிடையாது எப்பவும் என் புள்ள என் புள்ளன்னு தான் சொல்லுவ, என் புள்ள கூப்பிட்டா நான் போய் தானே ஆகணும் என்று கூறுகிறார். அவனை நம்பி போகாதீங்க என்று விஜயா சொல்ல என் புள்ள கடல்ல விதிக்க சொன்னா கூட நான் குடிப்பேன் மீனா நீ அவன் சொன்ன மாதிரி நம்ம மூணு பேரோட துணியை எடுத்து வை என்று சொல்ல விஜயா வேறு வழியின்றி அமைதியாக விடுகிறார்.

அடுத்ததாக ரெஸ்டாரன்ட் வரும் ரவி தயவுசெஞ்சு கல்யாணம் மட்டும் பண்ணிடாத இப்படியே இரு என்று நண்பனுக்கு அட்வைஸ் பண்ணுகிறார். உங்க வீட்டில் எல்லோரும் சாப்பிட உட்கார விஜயா மீண்டும் ரோகினியிடம் உங்க அப்பா எங்க இன்னும் வரலையா என்று கேள்வி கேட்கிறார்.

அவர் வந்தாரா இல்லையா இல்ல இப்படியே பொய் சொல்லிட்டு இருக்கியா என கேள்வி மேல கேள்வி கேட்கிறார். இதனால் ரோகிணி பதில் சொல்ல முடியாமல் தவிக்க உடனே ஓடிப்போய் வாந்தி எடுக்க ரோகிணி கர்ப்பம் என விஜயா நினைத்துக் கொள்கிறார். என் தங்கம் நான் நெனச்சா மாதிரியே நடந்துருச்சு என்று ரோகினியை கொஞ்சி தீர்க்க எல்லோரும் எதுவும் புரியாமல் இருக்க மனோஜ் கையை பிடித்து நீ சாதித்திட்ட சாதித்திட்ட என்று வாழ்த்து சொல்லி மீனாவை சக்கரை எடுத்து வர சொல்லி எல்லார் வாயிலையும் போட அண்ணாமலை முதல்ல ஹாஸ்பிடல்ல போய் கன்ஃபார்ம் பண்ணிட்டு வரட்டும் என சொல்கிறார்.

பிறகு விஜயா ரோகினிக்கு சாப்பாடு ஊட்டி விட்டு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கிறார். விஜயா சாமி கும்பிட்டு விட்டு யார் யாருக்கு என்னென்ன கொடுக்க வேண்டும் என்று கடவுளுக்கு நல்லா தெரியும் என்று மீனாவை பார்த்து நக்கலாக பேசிவிட்டு செல்கிறார். முத்து அப்ப நம்ம வீட்டுக்கு சின்ன பாப்பா வரும்போது வேலையே இல்லாத இவனுக்கு இந்த வேலை தேவையா என முத்து நக்கல் அடிக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

siragadikka aasai serial episode update 04-04-24
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 hours ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 hours ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 hours ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 hours ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 hours ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

5 hours ago