siragadikka aasai serial episode update 03-05-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கார் வாங்கிய பிறகு முத்து ஏரியா தலைவர் அவருடைய நண்பரை ஒரு பாரில் ட்ராப் செய்கிறார். அவர்கள் முத்துவையும் குடிக்க கூப்பிட முத்து ட்யூட்டி டைம்ல குடிக்க மாட்டேன், பகல் நேரத்துல குடிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்து விடுகிறார். இதனால் அவரை வெளியே வெயிட் பண்ண சொல்லிட்டு இவர்கள் உள்ளே செல்கின்றனர். முத்து பாட்டு போட அதுவும் சரக்கு குறித்து பார்த்தாலே இருக்க பாட்டை ஆப் செய்து விடுகிறார்.
மறுபக்கம் ரவி ரெஸ்டாரண்டுக்கு வந்த ஸ்ருதி வா நாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் எனக்கு இப்பவே குழந்தை வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். இதனால் அதிர்ச்சி அடையும் நிலையில் சுருதியை தனியாக கூட்டிச் சென்று உனக்கு என்ன ஆச்சு குழந்தைக்கு அவ்வளவு ஈஸியா பத்து மாசம் ஆகும் என்று சொல்ல அதற்கான ப்ராசஸை இப்பவே ஸ்டார்ட் பண்ணலாம் என்று கூப்பிடுகிறார். ஒரு இங்கிலீஷ் மூவி தமிழ் டப்பிங் பேச போயிருந்தேன் அதுல குழந்தைங்க எல்லாம் க்யூட்டா இருந்தாங்க அதை பார்த்ததும் எனக்கு குழந்தைக்கு ஆசை வந்துருச்சு என்று சொல்கிறார்.
ரவி குழந்தையை பெத்துக்கிட்டா மட்டும் போதாது நல்லபடியா வளர்க்கணும் அதோட நேரத்தை செலவிடனும் என்று சொல்ல நான் ஒரு நாள் பாத்துக்கிட்டா நீ ஒரு நாள் பார்த்துக்கோ டேக்கிங் கேர்ல குழந்தை எடுத்துட்டு வேலைக்கு போகலாம் என்றெல்லாம் பேச ரவியை ஹோட்டல் போனவர் கூப்பிட்டு ரவி உனக்கு குழந்தை இருக்கா ஸ்கூல்ல சேர்க்கறதெல்லாம் பத்தி பேசுறீங்க என்று கேட்க ஸ்ருதி இல்ல இப்பதான் பெத்துக்க போறோம் அதுக்கு தான் ரவியை கூட்டிட்டு போக வந்தேன் என்று சொல்கிறார். ரவி ஸ்ருதியை வீட்டுக்கு அனுப்பி வைத்த பிறகு ஓனர் நீ இப்பதான் கரியரை ஸ்டார்ட் பண்ணி இருக்கேன் இந்த நேரத்துல குழந்தை எல்லாம் தேவையா என்பதை யோசித்து முடிவு பண்ணு என்று சொல்கிறார்.
அதன் பிறகு முத்துவுக்கு மகாபலிபுரம் சவாரி குறித்து ஒரு போன் கால் வருகிறது. முத்து 20 நிமிஷத்தை வந்து விடுகிறேன் என்று சொல்லி தலைவரிடம் விஷயத்தை சொல்லி விட்டு கிளம்புவதற்காக பாருக்குள் வருகிறார். அப்போது முத்துவின் நண்பர் மட்டுமே சரக்கு அடித்துக் கொண்டிருக்க தலைவர் இங்கே என்று கேட்க பாத்ரூம் போய் இருப்பதாக சொல்கிறார்.
பிறகு தலைவர் வந்ததை சரக்கு வாங்கிட்டு வர சொல்ல முத்துவின் நண்பர் போய் வாங்கிட்டு வந்து கொடுக்க அதை திறக்க சொல்ல முத்து திறந்து கொடுக்கிறார் இதையெல்லாம் அங்கிருந்து சிட்டி வீடியோவாக எடுக்கிறார். தலைவர் முத்துவை குடிக்க சொல்ல முத்து கார் ஓட்டணும் என்று குடிக்க மறுத்து விடுகிறார். சரி சைடிஸாவாது சாப்பிடு என்று சிக்கன் கொடுக்கிறார். முத்து பக்கத்தில் இருக்கும் சேரில் உட்கார்ந்து சிக்கன் சாப்பிட்டுக் கொண்டே பாட்டிலை எடுத்து பார்க்க அவர் குடிப்பது போல வீடியோ எடுத்து விடுகிறார் சிட்டி.
முத்து சவாரி வந்திருக்கும் விஷயத்தை சொல்லிவிட்டு கிளம்பும்போது எதிரே வந்த ஒருவர் மோதி விட நெஞ்சை பிடித்துக் கொண்டு நடக்க போதையில் தள்ளாடுவது போல வீடியோவில் பதிவாகிறது. முத்து காலில் ஏறும் வரை வீடியோ எடுத்த சிட்டி இந்த மாதிரி டிரைவர் என நம்பி கார்ல ஏறாதிங்க என்று சொல்லி சமூக வலைதளங்களில் வீடியோவை பரப்ப சொல்கிறார்.
அதேபோல் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட அது தீயாக பரவி அனைவரும் பார்த்து முத்துவை குடிகாரன் என்று முடிவு செய்கின்றனர். அடுத்ததாக அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்த மீனா அவருக்கு டீ போட்டுக் கொடுக்க சத்யாவும் வீட்டுக்கு வந்து விட அவரது கையில் புதியதாக பெரிய போன் இருப்பதை பார்த்து மீனா அந்த சிட்டி வந்து சாராத என்று திட்டிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் சத்தியா அப்ப குடிகாரனோடு சேரவா என்று முத்துவின் வீடியோவை காட்டி அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…