siragadikka aasai serial episode update 03-04-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அண்ணாமலை ரவிக்கு போன் போட்டு வீட்டுக்கு வர சொல்ல ஸ்ருதி கிட்ட எப்படி பேசுறதுன்னு தெரியல, அந்த வீட்டுக்கு வரணுமானு தோணுது என்று சொன்னதும் அண்ணாமலை அப்போ உனக்கு நாங்க எல்லாம் வேண்டாமா என்று கேட்க எனக்கு தெரியலப்பா நான் அப்புறம் பேசுறேன் போனை வைத்து விடுகிறார்.
இதை அடுத்து அண்ணாமலை வெளியே வர விஜயா என்னாச்சு ரவி என்ன சொன்னாங்க என்று கேட்க வருவான் என்று சொல்லிவிட்டு போக விஜயா இவர் சொல்றத பாத்தா எனக்கு நம்பிக்கை இல்லை என்று டென்ஷன் ஆகிறார்.
மறுபக்கம் போட்டு மீனாவை ஹோட்டலுக்கு கூட்டி வந்து சாப்பிட சொன்ன மீனா எனக்கு எதுவும் வேண்டாம் நான் சாப்பிடற நிலைமையில் இல்ல என்று கூறுகிறார். அதோட எதுக்கு அவர் மேல கைய வச்சிங்க கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் இல்ல என்கிட்ட ஒன்னு அப்படி சொல்லும் போது எப்படி அமைதியா இருக்க முடியும் என்று முத்து கோபப்படுகிறார்.
வீட்டுக்கு போகலாம் என்று மீனா சொல்ல அங்க போனா மாமியார் எதையாவது பேசி எப்படியும் சாப்பிட விட மாட்டாங்க. அதனால சாப்பிட்டு போகலாம், அவங்க கிட்ட திட்டு வாங்குறதுக்கு உனக்கு தெம்பு வேண்டாமா என்று சொல்கிறார். மீனா இல்ல எனக்கு வேண்டாம் என்று சொன்ன சரி உன்னை விட்டுட்டு நான் போய் என் வேலையை பார்க்கிறேன் என்று சொல்ல என்ன கார் ஓட்ட போறீங்களா என்று மீனா கேட்க இல்ல பாருக்கு போய் சரக்கு அடிக்க போறேன் என்று மிரட்டி மீனாவை சாப்பிட வைக்கிறார்.
அடுத்ததாக ரவி ஸ்ருதியை வீட்டுக்கு கூப்பிட ஸ்ருதி வர முடியாது நீ போறதா இருந்தா போ உன்னை போக வேணாம்னு தடுக்க மாட்டேன் என சொல்கிறார். பிறகு ரவி வெளியில் கிளம்ப ஸ்ருதியின் அம்மா சாப்பிட்டு போக சொல்ல ரவி பசி இல்லை என சொல்கிறார். இப்படி நடந்துருச்சே மாப்பிள்ளை என்று ஸ்ருதி பேச இவரும் அண்ணி மேல பழி போட்டு பேசாம இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனை இல்ல என்று ரவி பதிலடி கொடுத்துவிட்டு நகர்கிறார்.
அடுத்ததாக முத்து, மீனா வீட்டுக்கு வர அவர்களை தடுத்து நிறுத்துகிறார் விஜயா. எங்க வந்தீங்க இந்த வீட்டுக்குள்ள கால் எடுத்து வச்சீங்க அவ்வளவுதான் என்று சொல்ல ஏன் வீட்டை தொடைச்சு இருக்கீங்களா நான் வேணா அப்புறம் வரட்டுமா என்று முத்து கவுண்ட்டர் அடிக்கிறார்.
பிறகு இவங்க இருக்குற வரைக்கும் இந்த வீட்ல யாரும் நிம்மதியா இருக்க முடியாது, அவ்வளவு பெரிய மனுஷன் மேல கைய வைக்கிற உனக்கு அசிங்கமா இல்லையா என்று முத்துவை திட்ட யார் பெரிய மனுஷன்? எல்லாத்தையும் மறந்துட்டு அந்த ஓடுகாலிங்களை வீட்டுக்குள்ள சேர்த்துக்கிட்டாரு எங்க அப்பா தான் பெரிய மனுஷன் என்று முத்து சொல்கிறார்.
அண்ணாமலையும் என்ன தான் அவர் பேசியிருந்தாலும் அவர் நலமே கைய வச்சு இருக்கக் கூடாது என்று சொல்ல முத்து என் பொண்டாட்டிய திருடினு சொல்லும்போது நான் எப்படிப்பா அமைதியா இருக்க முடியும் நானும் எவ்வளவு பொறுமையாக இருந்தேன் அந்த ஆளு ரொம்ப பேசிட்டான் என்று கூறுகிறார். உன் பொண்டாட்டிய திருடினு சொன்னதும் அவர் தெரிஞ்சுட்டாளா என்று விஜயா கேட்க இந்த வீட்டிலேயே பணத்தை தேடிட்டு ஓடணும் திருட்டுத்தனமா கடை திறந்து எல்லாரும் இருக்கும்போது என் பொண்டாட்டியை எப்படி சொல்லலாம் என்று பதிலடி கொடுக்கிறார்.
இனிமே அவங்க இந்த வீட்ல இருக்க கூடாது ஒன்னு நான் இருக்கணும் இல்ல அவங்க இருக்கணும் என்று சொன்ன முத்து அவ்வளவு ஆயிடுச்சா சரி நான் இருக்கிறோம் அவங்கள போயிட்டு சொல்லுப்பா என்று விஜயாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். விஜயா அவங்க இந்த வீட்ல இருந்தா ஒவ்வொருத்தரா வெளியே போக வேண்டியதுதான் என்று சொன்னால் இப்ப என்ன நாங்க வெளியே போனோம் அவ்வளவுதானே மீனா நீ போய் துணி எல்லாம் எடுத்து வை என்று கூறுகிறார். இதைக் கேட்டு விஜயா சந்தோஷப்பட சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…