மீனாவை அவமானப்படுத்தும் விஜயா. ஸ்ருதி செய்த வேலை. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை அதை பார்க்க முடியாமல் முகத்தை திருப்பி உட்கார்ந்து இருக்க மீனா தனியாக அழைத்துச் சென்று பொறுமையாக எடுத்து சொல்ல சரி உங்களுக்காக நான் இந்த ட்ரஸ்ஸை மாத்திடுறேன் என்று சொல்லி ஸ்ருதி போக விஜயா மற்றும் ரோகினி ஷாக் ஆகின்றனர்.

அதைத்தொடர்ந்து மீனா துணி துவைக்க போகும் போது விஜயா இந்தா இதெல்லாம் அவரோட துணி துவைச்சிடு என்று சொல்லிக் கொடுக்க மீனா வாங்கிக் கொள்கிறார். அதன் பிறகு ரோகிணி கையில் மனோஜ் உடைய ட்ரஸ்ஸை எடுத்து வந்து நான் கொஞ்சம் வெளியில போறேன் அவருக்கு நாளைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்குன்னு சொன்னாரு, இந்த ஷர்ட் மட்டும் வாஷ் பண்ணி கொடுங்க என்று சொல்லிக் கொடுக்க மீனா அவருக்காக நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்று சொல்லிட்டேன் என்று முகத்தில் அடித்தார் போல சொல்லி விடுகிறார்.

அதன் பிறகு ஸ்ருதி அவருடைய டிரஸ்ஸை கொஞ்சம் எடுத்து வந்து மீனா கையில் ஏற்கனவே நிறைய துணி இருப்பதை பார்த்து இவ்வளவு இருக்கா? இல்ல நான் வேற கொண்டு வந்து இருக்கேன் எனக்கு கையில துவைக்க தெரியாது. ஆன்ட்டி நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம் இல்ல என்று விஜயாவை சொல்ல விஜயா ஷாக் ஆகிறார்.

காலையிலிருந்து மீனா எல்லா வேலையும் செஞ்சுக்கிட்டு இருக்காங்க அவங்களுக்கும் கஷ்டமா இருக்கும்ல என்று சொல்ல அதெல்லாம் அவ செஞ்சிடுவா இத செஞ்சிட்டு வேற என்ன வேலை இருக்கு அவளுக்கு? அவ என்ன ஆபிசா போக போறா என்று அவமானப்படுத்தி பேசுகிறார்.

பிறகு ரோகிணி நீங்களாவது ஹெல்ப் பண்ணலாம் இல்ல என்று சொல்ல நான் ஒன்னும் சும்மா இல்ல ஸ்ருதி, பார்லர் போயிட்டு நாள் முழுக்க நின்னிட்டு வரேன் என்று கூறுகிறார். நாம் செய்யறதெல்லாம் ஒரு வேலை தான். ஆனா மீனா எல்லா வேலையும் இழுத்து போட்டுட்டு செய்யணும் என்று சொல்ல அவங்க என்ன இந்த வேலையெல்லாம் சீக்கிரம் முடிச்சிட்டா மதியம் படுத்து தூங்கலாம் அதுக்கு டைம் இருக்கு நமக்கு அப்படி கிடையாது ஏழு எட்டு மணி நேரம் நின்று வேலை பார்க்கணும் என்று சொல்கிறார்.

இந்த வேலைக்கு ஒரு ஆள் வச்சிடலாம்ல என்று ஸ்ருதி கேட்க மீனா கல்யாணம் ஆகி நான் இந்த வீட்டுக்கு வரத்துக்கு முன்னாடி வரைக்கும் ஆள் இருந்தாங்க என்று சொல்ல அப்புறம் ஏன் அவங்க வரல என்று கேட்க அவளுக்கு ஏதோ உடம்பு முடியலன்னு வராமல் நின்னுட்டா என்று விஜயா சொல்கிறார். பிறகு ரூமுக்குள் சென்ற ஸ்ருதி 2000 ரூபாய் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்து இத வச்சுக்கோங்க என்று சொல்ல எதுக்கு இந்த பணம் என்று மீனா கேட்க உங்களுக்கும் ஏதாவது செலவு இருக்கும்ல, அதுக்கு பயன்படுத்திக்கோங்க என்று கூறுகிறார்.

எல்லாரும் என்னை இந்த வீட்டில வேலை வாங்கிட்டே இருப்பாங்க நான் இந்த வீட்டுல இருக்கவங்க மேல் இருக்க அக்கறையில் செய்றேன். ஆனா நீங்க பணத்தை கொடுத்து என்னை முழுசா வேலைக்காரியாக்க பாக்கறீங்களா என்று கேள்வி கேட்க நீங்க ஏன் அப்படி பாக்கறீங்க அன்னைக்கு ரோகிணி ஆன்ட்டிக்கு பாக்கெட் மணியா 5000 ரூபாய் கொடுத்தாங்க அவங்க என்ன ஆன்ட்டியை வேலைக்காரியாகவா பாக்குறாங்க அந்த மாதிரி தான் இதுவும் நான் உங்களை சிஸ்டரா நினைச்சு தான் கொடுக்கிறேன் என கையில் பணத்தை கொடுத்து விட்டு கிளம்பி சென்று விடுகிறார்.

விஜயா இதுக்குத்தான் நீ அவகிட்ட அவ்வளவு அன்பா நடந்துக்கிட்டயா அவகிட்ட இருந்து பணத்தை கறக்க தான் இந்த வேலையா என்று ஏளனமாக பேசுகிறார். ரோகிணி எனக்கு இது தெரியாம போயிடுச்சு டிரஸ் கொடுக்கும் போதே கொஞ்சம் பணத்தையும் சேர்த்து கொடுத்து இருந்தா எதுவும் பேசாமல் வேலை செஞ்சிட்டு இருப்பாங்க என சொல்லி அவமானப்படுத்துகிறார்.

அதன் பிறகு ரவி ஸ்ருதியிடம் வந்து எதுக்கு நீ என்கிட்ட பணம் கொடுத்த? உனக்கு அது தப்பாவே தெரியலயா என்று கேட்க ஸ்ருதி நான் அவங்களை என்னுடைய ஓன் சிஸ்டரா தான் பார்க்கிறேன். அதனாலதான் பணம் கொடுத்தேன் என்று தன்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கிறார்.

அடுத்ததாக முத்து ரூமுக்குள் வந்ததும் மீனா டல்லாக இருப்பதை பார்த்து என்னாச்சு என்று கேட்க நீங்கள் சொன்னது சரிதான் எல்லாரும் என்னை இந்த வீட்டில் வேலைக்காரியாத்தான் பாக்கறாங்க அவ்வளவுதான் எனக்கு இந்த வீட்டில இருக்கும் மதிப்பு என்று ஸ்ருதி கொடுத்த பணத்தை எடுத்துக் கொடுத்து செஞ்ச வேலைக்கு சம்பளம் கொடுத்தாங்க என்று கூறுகிறார்.

முத்து யார் கொடுத்தது என்று கேட்க ஸ்ருதி கொடுத்தாங்க என்று சொன்னதும் அந்த விஷப் பாட்டில் பண்ண வேலையா இது என்று முத்து கோபப்பட மீனா கலங்கி நிற்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

siragadikka aasai serial episode update 02-01-24
jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

1 day ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

1 day ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

1 day ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

2 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

2 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

3 days ago