தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரவி, ஸ்ருதி வீட்டுக்கு வந்திருக்க அண்ணாமலை எதுவும் சொல்லாமல் இருக்க விஜயா அத்தான் அவங்க அம்மா வந்து இருக்காங்களே வீட்டுக்குள்ள கூப்பிடுங்க என்று சொல்ல பிறகு உள்ள வாங்க என்று கூப்பிட ரவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.
பிறகு விஜயா ஆசிர்வாதம் வாங்க வேண்டிய நேரத்தில் எதுக்குடா மன்னிப்பு கேட்டுட்டு இருக்க என்று சொல்லி சுருதியையும் விழ சொல்ல இருவரும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகின்றனர். அடுத்து அண்ணாமலை உங்க அப்பா வரலையா ரெண்டு பேரும் சேர்ந்து தான வரணும்னு சொல்லி இருந்தேன் என்று கேட்க எனக்கும் தெரியல என்கிட்டேயும் அவர் பேசறது இல்ல அத பத்தி கவலைப்படாதீங்க ஃப்ரீயா விடுங்க என்று சொல்கிறார்.
முத்து பாத்ரூமில் இருந்து கதவைத் தட்ட விஜயா பக்கத்து வீட்ல இருந்து சத்தம் வருதுன்னு சமாளிக்க மீனா கதவை திறந்து விட வெளியே வந்த முத்து இவர்களை பார்த்து சத்தம் போட அண்ணாமலை அமைதியாக இரு என அடக்குகிறார்.
ஸ்ருதியின் அம்மா வீட்டுக்கு கிளம்பியதும் முத்து ஸ்ருதியுடன் சத்தம் போட இந்த மாதிரி டிஸ்டர்பன்ஸ் இருந்தா இதை தான் பண்ணனும் என ஹெட்செட் எடுத்து காதில் மாட்டி கொள்ள விஜயா இந்த பொண்ணு ரொம்ப பயங்கரமானவளா இருப்பா போல என்று ரோகிணியிடம் சொல்ல ரோகிணியும் ஆமா யாருக்கும் பயப்பட மாட்டா போல என்று சொல்கிறார்.
அதன் பிறகு விஜயா ஸ்ருதியை கூப்பிட்டு விளக்கேற்ற சொல்ல அதான் கரண்ட் இருக்கு அப்புறம் எதுக்கு விளக்கு ஏத்தணும் என்று கேட்க அண்ணாமலை உட்பட எல்லோரும் ஷாக்காக விஜயா அது வழக்கம் என்று சொல்லி அழைத்துச் செல்கிறார். வத்திக்குச்சியை பற்ற வைக்கத் தெரியாமல் ஒவ்வொரு குச்சிகளாக கிழித்து கீழே பட உனக்கு விளக்கேற்ற கூட தெரியாதா என்று அண்ணாமலை கேட்கிறார்.
எனக்கு வத்திக்குச்சி கொளுத்தி பழக்கம் கிடையாது ஸ்மோக்கிங் சாப்பிட்டும் இல்லை என சொல்லி திரும்பவும் ஷாக் கொடுக்கிறார் ஸ்ருதி. ஸ்மோக் பண்ணா மட்டும்தான் வத்திக்குச்சி கிழிப்பாங்களா ஏன் சமைக்க பயன்படுத்த மாட்டாங்களா என்று கேட்க அது ரவியோட டிபார்ட்மெண்ட் என திரும்பவும் ஷாக் கொடுக்கிறார்.
பிறகு விஜயா வத்திப்பட்டி சரியில்ல அவ என்ன பண்ணுவா என்று சப்போர்ட் செய்து பேச மீனா புது வத்தி பெட்டி தான் கொடுத்தேன் என கூறுகிறார். இன்னைக்கு கொளுத்தாம விட மாட்டேன் என்று சொல்லி தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க ரோகினி ஆன்ட்டி டென்ஷன் ஆகுறாங்க, மீனாவை திட்ற மாதிரி திட்ட போறாங்க பாரு நமக்கு எண்டர்டெயின்மென்ட் இருக்கு என ஆவலோடு காத்திருக்க விஜயா வத்தி பெட்டியை வாங்கி அவரே கிழித்து கொடுத்து விளக்கேற்ற சொல்ல ஸ்ருதி விளக்கேற்ற ரோகிணி ஷாக் ஆகிறார்.
அதன் பிறகு மீனா உப்பு பருப்பு மிளகாய் போன்றவற்றை எடுத்து வந்து விஜயாவிடம் கொடுக்க விஜயா அதை சுருதிடம் கொடுக்க என்ன அப்படியே தரீங்க சமைச்சு தர மாட்டீங்களா என்று கேட்கிறார். ஓ இத வச்சி ரவி ஏதாச்சு டிஷ் பண்ண போறானா என்று கேட்கிறார். பிறகு இதெல்லாம் ஒரு சடங்கு என்று சொல்லி விஜயா அதை எல்லாம் எப்படி கடைசியாக தண்ணீரை தொட சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Yaar Yaarival Video Song | Ram In Leela | Rio Raj | Vartika | Ankit…
Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…
Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…
Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…
இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…
தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…