தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா ரோகினி பணம் கொடுத்ததை வைத்து ஓவராக பில்டப் செய்து பேச முத்து வழக்கம்போல கலாய்த்து எடுக்கிறார்.
விஜயா அப்படியே உங்க அப்பா கிட்ட சொல்லி மனோஜ்க்கு ஒரு பிசினஸ் ஆரம்பிக்க ஏற்பாடு பண்ண சொல்லுமா அவனும் எவ்வளவு நாளைக்குத்தான் வேலை இல்லாம இருப்பான் என உண்மையை உலறிவிட எல்லோரும் அதிர்ச்சியாக பிறகு விஜயா அவன் படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலை இல்லாமல் தானே இருக்கான் அதுதான் சொன்னேன் என சமாளித்து விடுகிறார்.
அதனைத் தொடர்ந்து முத்து மனோஜை கிண்டல் அடிக்க ரோகிணி அதுதான் பணம் கொடுத்தாச்சுல இன்னும் எதுக்கு அவர மரியாதை இல்லாம பேசுறீங்க என்று கோபப்பட அப்படியே உங்க அப்பா கிட்ட சொல்லி ரெண்டு நாள் டி பிஸ்கட் செலவை கட் பண்ணி அவன் தூக்கிட்டு ஓடுன 28 லட்சத்தை வாங்கி கொடுத்துடு உனக்கு நானே மெரினா கடற்கரையில் சிலை வைக்கிறேன் என்று சொல்ல ரோகினி வாயடைத்து நிற்க விஜயாவும் மனோஜ் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இது நல்ல ஐடியாவை இருக்கே என புது கணக்கு போடுகின்றனர்.
அடுத்ததாக பைனான்சியரிடம் மொத்த பணத்தையும் கொடுக்க முத்து இதுக்கு அவங்கள மட்டுமே வர சொல்லி இருக்கலாமே எங்களை எதற்கு வர சொன்னிங்க என்று கேட்க உங்க அம்மாவை நம்ப முடியாது நான் பணத்தை அதிகமாக வாங்கிட்டேன்னு சொல்லுவாங்க, அப்படி இல்லன்னா பத்திரத்தை கொடுக்கவில்லை என்று கூட சொல்லுவாங்க அதனாலதான் உங்க எல்லாரையும் வர சொன்னேன் என்று சொல்ல எங்க அம்மாவ நீங்க சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்க என முத்து விஜயாவின் மூக்கை உடைக்கிறார்.
பிறகு எல்லோரும் கிளம்பும்போது பைனான்சியர் வளையலை எடுத்து விஜயாவிடம் கொடுக்க விஜய் பழைய அடமானம் வைத்து என்னும் மற்ற குடும்பத்துக்கும் தெரிய வர அண்ணாமலை உன் கூட வாழ்ந்த வாழ்க்கைக்கு உன்னால என பண்ண முடியுமோ அதை பண்ணிட்ட என்ன வருத்தப்படுகிறார். வீட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு என முத்து விஜயாவை எச்சரித்துவிட்டு கிளம்புகிறார்.
வீட்டுக்கு வந்ததும் முத்து, அண்ணாமலை திட்ட ரோகினி மனோஜ் ஆகியோர் விஜயாவுக்கு சப்போர்ட்டுக்கு வருகின்றனர். அண்ணாமலை இனிமேலாவது இந்த பத்திரம் பத்திரமாய் இருக்கணும் என சொல்லி மீனாவிடம் கொடுக்க விஜயா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…
VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…