மீனா கேட்ட கேள்வி, முத்துவுக்கு வந்து சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி கிரிஷ் வித்யா வீட்டில் ஒரு வாரம் மற்றும் தங்க வச்சுக்கோ நாம் மீது பாத்துக்குவேன் என்று சொல்ல நான் ஒரு வாரம் தான் பார்ப்பேன் இல்லனா திருப்பி உங்க வீட்டிலேயே விட்டுருவேன் உன்னோட வாழ்க்கை உனக்கு எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி தான் என்னோட வாழ்க்கையும் எனக்கு முக்கியம் என்று வித்தியா சொல்லுகிறார் இல்ல அது வரைக்கும் எல்லாம் விடமாட்டேன் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு கிரிஷ் இங்கே இருக்க சொல்ல இல்லம்மா நான் வீட்டுக்கு வரணும் உங்க கூட தான் இருப்பேன் என அடம் பிடிக்க நான் ஒரு வாரம் கழிச்சு கூட்டிட்டு போயிடுறேன் என என சொல்லி சமாதானப்படுத்தி விட்டு வருகிறார்..

மறுபக்கம் விஜயா மனோஜ் பேசிக் கொண்டிருந்த அண்ணாமலை ஸ்னாக்ஸ் வாங்கி கொண்டு வந்த மீனா விடம் கொடுத்துவிட்டு க்ரிஷ் வந்தவுடன் எடுத்துக் கொடும்மா என்று சொல்லுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் முத்து சோகமாக வீட்டுக்கு வர என்ன ஆச்சு என்ன விஷயம் என்று அனைவரும் கேட்கின்றனர் கிருஷை கூட்டிட்டு வர போகலையா அவனுக்காக பாத்துட்டு இருக்க கூடாதா என்று அண்ணாமலை கேட்க அவர் ஸ்கூல்ல இல்லப்பா விசாரிச்சப்போ அவங்க அம்மா வந்து கூட்டிட்டு போயிட்டு தான் சொல்றாங்க என்று சொல்ல உடனே விஜயா சந்தோஷப்படுகிறார். ஆனால் மீனா அது எப்படி அவங்க வந்து ஒரே நாள்ல கூட்டிட்டு போக முடியும் அதுவும் இல்லாம அவங்க பாட்டி சீரியஸா இருக்காங்கன்னு சொல்றாங்க ஆனா இப்ப அவங்க நல்லா தானே இருக்காங்க என்று சொல்ல சுருதி கிரிஸ் விஷயத்துல எல்லாமே மர்மமாவே இருக்கு என்று சொல்லுகிறார்.

இது மட்டும் இல்லாம என்னோட நம்பர் கிரிஷ் கிட்ட இருக்கு நம்ம இத்தனை நாளா பாத்துக்கிட்டதுக்காக அவங்க வந்து நம்ம கிட்ட பேசாம கூட போயிருப்பாங்க என்று சொல்ல மீனா நீயும் சொல்றதும் கரெக்ட் தான் மீனா என்று சொல்லுகிறார். பிறகு விஜயா தொல்லை ஒழிஞ்சுதுன்னு விடாம எதுக்கு இப்படி பேசிகிட்டு இருக்கீங்க எல்லாம் போய் வேலையை பாருங்க என்று சொல்லிவிட்டு கிளம்ப அண்ணாமலை முத்துவிடம் எனக்கும் கஷ்டமா தான் இருக்கு ஆனா அவன் அம்மாகிட்ட தானே போயிருக்கா? எப்ப இருந்தாலும் இங்க இருந்து போக வேண்டி வந்தானே விடு முத்து என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். ஆனால் முத்து மீனாவிற்கு இதில் இருக்கும் சந்தேகம் தீரவில்லை உடனே முத்து முதல்ல இவ்வளவு வேகமா வந்து கூட்டிட்டு போன அந்த பொண்ண கண்டு பிடிக்கணும் என்று சொன்ன ரோகினி அதிர்ச்சி அடைகிறார். மறுபக்கம் க்ரிஷ் பாட்டி மீனாவின் அம்மா பூ கட்டும் கடை வைத்திருக்கும் கோவிலில் அன்னதானம் வாங்க நிற்கிறார். மீனா வந்து நடந்த விஷயங்களை சந்திராவிடம் சொல்ல சாப்பிடாமல் இருப்பதால் இருவரும் சாப்பிடுவதற்கு உள்ளே போக அந்த நேரம் பார்த்து மீனாவிற்கு பூ கட்டும் போன் வந்து விடுகிறது உடனே நான் இன்னொரு நாள் வரமா என்று சொல்லிவிட்டு மீண்டும் திரும்பி வந்து விடுகின்றனர். க்ரிஷ் பாட்டி சாப்பிட்டு விட்டு வெளியில் வரும்போது மீனா மற்றும் அவரது அம்மாவை பார்த்துவிட ஒரு பாட்டி வந்து நாளைக்கு இங்க அன்னதானம் போடுவாங்க வாங்க என்று சொல்ல இனிமேல இந்த கோவிலுக்கு வர மாட்டேன் என சொல்லி விடுகிறார் மீனா கிளம்பியுடன் தலை மேல் துணியை போட்டுக் கொண்டு மறைந்து சென்று விடுகிறார்.

விஜயா பார்வதி வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருக்க பார்வதி டான்ஸ் கிளாஸ் இருக்கிற வரைக்கும் டைம் பாஸ் ஆச்சு இப்போ போர் அடிக்குது எதாவது நம்ப புதுசா பிசினஸ் ஸ்டார்ட் பண்ணலாம் எம்பிராய்டிங் போடலாமா என்று கேட்க அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லுகிறார்கள். என்ன பண்றது என்று கேட்க நான் தான் யோகா கிளாஸ் ஆரம்பிக்கலாம் என்று சொன்னல்ல என்று சொல்ல சரி எப்போ ஆரம்பிக்கலாம் என கேட்க பேசிக் கொண்டிருக்கும்போது காலிங் பெல் சத்தம் அடிக்கிறது உடனே பார்வதி போய் திறந்து பார்க்க சிந்தாமணி வருகிறார். பிறகு மூவரும் என்ன பேசிக் கொள்கின்றனர்? சிந்தாமணி என்ன சொல்லுகிறார்? அதற்கு விஜயாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadaikkaAasai Serial Episode Update 15-08-25
jothika lakshu

Recent Posts

பருத்தி பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

பருத்திப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

8 hours ago

கரூர் துயர சம்பவம்.. விஷால் மேனேஜர் உருக்கமான பதிவு.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே…

8 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை, கடுப்பான மாதவி, சுந்தரவல்லி.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்ன திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

8 hours ago

முத்து சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் விஜயா ரோகிணி..வெளியான சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ.!!

ராஜா ராணி இருவரும் விஜயாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…

17 hours ago

OG : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

OG படத்தின் 3 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன்…

17 hours ago

கரூர் துயர சம்பவம்.. இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்.!!

நெஞ்சை பதற வைக்கும் கரூர் சம்பவம் குறித்து பிரபலங்கள் பதிவு வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும்…

17 hours ago