Simbu ready for the Maanadu
சிம்புவின் 46-வது படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்தனர். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து இருக்கிறார். சிம்பு மெலிந்த தோற்றத்துடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
கடந்த மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்து. இப்படத்தின் டீசர் தீபாவளி தினத்திலும், பொங்கல் தினத்தில் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் அடுத்த படமான மாநாடு படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகி இருக்கிறார் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்க இருக்கிறது.
இதை அறிவித்து புகைப்படம் ஒன்றை சிம்பு வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…