Simbu crying Maanaadu Pre Release Event
சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.
இதில் நடிகர் சிம்பு பேசும்போது, ‘எனக்கு நிறைய பிரச்சனைகள் கொடுக்கிறார்கள். படத்தை வெளியிட விடாமல் நிறைய பேர் தடுக்கிறார்கள். பிரச்சனைகள் எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை ரசிகர்களான நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கண்கலங்கி பேசி இருக்கிறார்.
யுவன் பேசும்போது, ‘எப்பவும் பார்க்குற சிம்புவ இப்படத்தில் பார்க்க முடியாது. வேறொரு சிம்புவை பார்க்கலாம். எஸ்.ஜே.சூர்யாவிற்கும் சிம்புவுக்கு நடக்கும் ஒரு விளையாட்டுதான் இப்படத்தில் அதிகம் இருக்கும். இதற்கு நடுவில் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் வருவார்கள். நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக மாநாடு உருவாகி இருக்கிறது’ என்றார்.
மாநாடு படத்தில் சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…