Siddharth-Appeared-In-This-Serial-To-Promote-Chithha
பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் ‘சித்தா’. இந்த படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை நடிகர் சித்தார்த் தன்னுடைய இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இன்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ‘சித்தா’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கன்னட அமைப்பினர் இந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்பினர், தமிழ்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழ் நடிகரான சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னட அமைப்பினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து மேடையில் இருந்து நடிகர் சித்தார்த் வெளியேறினார். இதையடுத்து அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…