மகளுக்காக புதிய முடிவு எடுத்த ஸ்ரேயா

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். சினிமா அனுபவங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘சினிமா குறித்த எனது எண்ணங்கள் தற்போது மாறிவிட்டன. எனது மகள் ராதா என் படங்களைப் பார்த்து பெருமைப்படும்படியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன்.

நான் நடிக்க ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் இருபது ஆண்டுகள் வரை நடிப்பேன். இந்த நீண்ட பயணத்திற்கு ரசிகர்களின் அன்புதான் காரணம். இன்னும் 20 ஆண்டுகள் ரசிகர்களின் அன்பை பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்காக எவ்வளவு உழைக்கவும் தயாராக இருக்கிறேன்.

பத்து மாதங்களுக்கு முன் பார்சிலோனாவில் ஒரு மகளை பெற்றெடுத்தேன். அவளுக்கு ராதா என பெயர் வைத்தோம். ராதா வந்த பிறகு எனது வாழ்க்கையே மாறிவிட்டது. குழந்தையை ஜாக்கிரதையாக வளர்க்க பிரத்யேகமாக யோசிக்கிறேன். எனக்கு கதக் நடனத்தை பின்னணியாக வைத்து வரும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது” என்றார்.

Suresh

Recent Posts

Mahaveer Karna Official Tamil Teaser

Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…

8 hours ago

ராம் அண்ட் லீலா – திரை விமர்சனம்

திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…

8 hours ago

மமிதா பைஜு – சங்கீத் பிரதாப் இணையும் புதிய படம் ‘ஹலோ டியர்’!

‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…

8 hours ago

“திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு” – நடிகை சஞ்சனா கல்ராணி கண்டனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…

8 hours ago

“எனது வாழ்க்கையின் மிகப்பெரிய தூணே அவர்தான்” – மனம் திறந்த ஜேசன் சஞ்சய்!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…

9 hours ago

நடிகையுடன் கோவிந்தாவின் நெருக்கம்… விவாகரத்து மனுவை வாபஸ் பெற்ற மனைவி!

பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை…

10 hours ago