shocking-update-on-thalapathy-68 movie
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 68 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தில் இருந்து கிளிம்ஸ் வீடியோ, தளபதி 68 படத்தின் போஸ்டர் ஆகியவை வெளியாகும் என தகவல்கள் கசிந்திருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில் தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது விஜயின் பிறந்தநாள் தினத்தில் லியோ படத்தின் அப்டேட் மட்டும் தான் வெளியாகும், தளபதி 68 படம் பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராது என சொல்லப்படுகிறது. லியோ பட ரிலீஸ்க்கு பிறகே தளபதி 68 படம் குறித்த அப்டேட் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…