shivangi-reply-to-hater
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் தான் சிவாங்கி. இவர் தற்போது ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியில் மக்கள் ரசிக்கும் கோமாளிகளில் ஒருவராக இருக்கிறார். இவரின் குழந்தை தனமான பேச்சு மற்றும் நகைச்சுவைக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது என்று கூறலாம்.
இதைத்தொடர்ந்து “டான் ” படம் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்த சிவாங்கி, தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஆனாலும் இவர் குக் வித் கோமாளி ஷோவில் இருந்து விலகவில்லை. ஆனால் கடந்த 2 வாரமாக நிகழ்ச்சியில் வரவில்லை. ஏனென்றால் சிவாங்கி அவர் அண்ணனின் திருமணத்திற்கு சென்றுள்ளதால் அவரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் அவருக்கு பதிலாக சரத் அவர்கள் பங்கேற்றிருக்கிறார் என்ற தகவலை தொகுப்பாளர் ரக்ஷன் போன வாரம் நடந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் ரசிகர்களில் ஒருவர் இந்த வாரம் சிவாங்கி வரவில்லை. இதனால் ஓவர் நடிப்பு இருக்காது என்று டுவிட்டரில் கலாய்த்து பதிவிட்டுள்ளார். இதற்கு ஷோவில் இல்லாத என்ன பத்தி பேசி ஹெட் பண்றதுக்கு இருக்கிற செம்ம கோமாளிஸ் பற்றி பேசுனா சூப்பரா இருக்கும் ப்ரோ? யோசிச்சி பாருங்க. என்று நச்சுனு செம்மையாக பதிலளித்துள்ளார் சிவாங்கி. அதன்பின் சிவாங்கியின் மற்ற ரசிகர்கள் விமர்சித்த நபரை இணையத்தில் திட்டி தீர்த்து வருகின்றனர்.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…