Shilpa Shetty Summoned to Appear in Court
ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஷில்பா ஷெட்டி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவர் பாசிகர், பிர் மிலங்கெ, பர்தேசி பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் மேக்கோரினா என்ற பாடலுக்கு தோன்றி அனைவரையும் கவர்ந்தார். இவருடைய தந்தை 2015-ஆம் ஆண்டு பர்ஹத் அம்ரா என்பவரிடம் ரூ.21 லட்சம் கடன் வாங்கியிருந்தார். 2017-ஆம் ஆண்டு திரும்ப கொடுப்பதாக தெரிவித்திருந்த அவர் இறந்துவிட்டார். அந்த கடனை அவரின் குடுத்திடம் திருப்பி கொடுக்கும் படி கடன் வழங்கியவர் கேட்டுள்ளார். அவர்கள் கொடுக்க முன்வராததால் ஷில்பா ஷெட்டி, அவர் தாயார் சுனந்தா மற்றும் சகோதரி சமிந்தா ஷெட்டி ஆகியோர் மீது மும்பை ஜுகு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதி வரும் 28-ம் தேதி ஷில்பா ஷெட்டி, சகோதரி சமிந்தா ஷெட்டி, தாயார் சுனந்தா ஷெட்டி ஆகியோர் கோர்ட்டில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நடிகை ஷில்பா ஷெட்டி மீது ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பணமோசடி வழக்கு பதிவு செய்திருந்தார். ஷில்பா ஷெட்டியின் கணவர் மீதும் ஆபாச வீடியோ தயாரித்து மொபைல் செயலி மூலம் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த…
“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்' படத்தின் தகவல்கள் பார்ப்போம்... மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19…
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான்…
விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகனுக்கு, முதல்படமான 'நாளைய தீர்ப்பு'.. விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு…
வைரமுத்துவை சந்தித்த ரஜினி: வட நாட்டு அரசியலில் திருப்பம் ஏற்பட இருப்பதாக பரபரப்பு கருத்து சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…