Shang-Chi and the Legend of the Ten Rings Review
நாயகன் ஷாங் சி-யின் அப்பாவான வென்வு என்கிற தி மேண்டரின், டென் ரிங்ஸ் என்கிற சக்திவாய்ந்த ஆயுதத்தைக் கொண்டு உலகையே தன் கட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறார். அப்போது பல அற்புத சக்திகள் நிறைந்த ஒரு கிராமத்தை அவர் பிடிக்க நினைக்கிறார்.
அவருக்கு எதிராக அவரின் மகன் ஷாங் சி-யும், மகள் ஷியாலிங்கும் வந்து நிற்கிறார்கள். இதில் யார் வெற்றி பெற்றது?, இந்தக் குடும்பத்தின் பின்னணி என்ன? என்பதை தன் வழக்கமான பாணியிலான நக்கல், நையாண்டி, அதிரடி சண்டைக் காட்சிகள் கலந்து விடை தருகிறது இந்தப் படம்.
ஷாங் சி-யாக சிமு லியூ நடித்துள்ளார். ஆக்ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகளில் திறம்பட நடித்துள்ள இவர் காமெடி காட்சிகளில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இவரின் சகோதரி ஷியாலிங்காக வரும் மெங்கர் ஜாங், தோழி கேட்டியாக வரும் அக்வாஃபினா ஆகியோர் நேர்த்தியாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்கள். குறிப்பாக அக்வாஃபினா காமெடியில் கலக்கி இருக்கிறார்.
ஷாங்க் சி-யின் தந்தை வென்வு என்னும் மேண்டரினாக நடித்துள்ள டோனி லியூங் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மார்வெல் சம்பந்தமான கதாபாத்திரங்களை ஆங்காங்கே பயன்படுத்தி இருப்பது சிறப்பு.
இயக்குனர் டெஸ்டின் டேனியல் கிரிட்டன், கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ள விதம் அருமை. படத்தின் இரண்டாம் பாதி பிரம்மிப்பை ஏற்படுத்திய அளவுக்கு முதல் பாதி இல்லாதது பின்னடைவு. நிகழ்கால கதை, பிளாஷ்பேக் பின்னணி என மாறி மாறி கதை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், பல இடங்களில் பிளாஷ்பேக் சென்டிமென்ட் காட்சிகள் தொய்வை ஏற்படுத்துகின்றன. விறுவிறுப்பாக நகரும் திரைக்கதைக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இந்த பிளாஷ்பேக் காட்சிகள் அமைந்துள்ளது.
மார்வெல் படங்களுக்கு வலு சேர்ப்பதே ஆக்ஷன் காட்சிகள் தான், வழக்கம்போல இந்த படத்திலும் அதனை சரியாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக ஆசியத் தற்காப்புக் கலைகள் படத்துக்கு பலமாக அமைந்திருக்கின்றன. அதேபோல் காட்சியமைப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். புதிய உலகம், வித்தியாச மிருகங்கள், மாறுபட்ட கலாசாரம் ஆகியவற்றை நேர்த்தியாக காட்சிப்படுத்தி உள்ளார் ஒளிப்பதிவாளர் பில் போப். ஜோயல் பி வெஸ்ட்டினின் பின்னணி இசையும் கதையோட்டத்துக்கு பெரிதும் உதவி இருக்கின்றன.
தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு என்ற…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தில் டோவீனோ தாமஸ், சாண்டி மாஸ்டர்,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் பிரண்ட்ஸ்…