shahrukh-khan-about-nayanthara-vijay-sethupathi
பாலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவர் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழும் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் “ஜவான்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இதில் அவருடன் இணைந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதன் அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து
உரையாடி இருக்கிறார் அதன் பதிவுகள் சில தற்போது வைரலாகி வருகிறது.
அதில், விஜய் சேதுபதி குறித்த கேள்விக்கு ஷாருக்கான் அவர்கள், ‘அவர் ஒரு எளிமையான மனிதர் மற்றும் திறமையான நடிகர் அவரிடம் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்’ என்று கூறியிருக்கிறார். அதையடுத்து நயன்தாரா பற்றிய கேள்விக்கு, ‘அவர் அழகானவர், மிகவும் இனிமையானவர் என்றும் அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது’ என தெரிவித்திருக்கிறார். இவரது இந்த பதிவுகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…