தமிழ் தொலைக்காட்சிகளில் சின்னத்திரை சீரியல்களுக்கு எப்பவும் மவுசு அதிகம் தான். எத்தனை சீரியல்கள் புதிதாக வந்தாலும் மக்கள் அவற்றுக்கு நேரம் ஒதுக்கி பார்த்து வருகிறார்கள்.
கொரோனா ஊரடங்கினால் கடந்த சில நாட்களாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் தொலைக்காட்சிகள் பழைய சீரியல்கள், நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தன.
அண்மையில் தமிழக அரசு சில தளர்வுகளை அளித்ததனால் படப்பிடிப்பு இல்லாத எடிட்டிங், டப்பிங் போன்ற இறுதிகட்டப்பணிகள் மட்டும் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் மே 22 நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள நிபந்தனைகளுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது, ஊரகப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என அரசு கூறியுள்ளது.
மேலும் சென்னையில் உள்ளரங்குகளில் மட்டும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி என்றும், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லையென்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…